Sunday, July 13, 2008

மெய்லி உறைபனி மலை

சீனாவின் மெய்லி உறைபனி மலை
திசின் திபெத் தன்னாட்சி சோ, தென்மேற்கு சீனாவின் யுன்நான் மாநிலத்தின் மிக உயரகமான நில வமைப்பில் உள்ளது. அங்கு பயணிகள் நூற்றுக்கணக்கான லீ தூரம் நீடித்திருக்கும் பிரமாண்டமான உறைபனி மலையைக் காணலாம். இதில் மிக செங்குத்தான வியதகு சிகரங்கள் 13 உள்ளன. இவை தான் மெய்லி உறைபனி மலையாகும். உள்ளூர் திபெத் மக்கள் அதை தெய்வீக மலை என கருதுகின்றனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மத நம்பிக்கையாளர்கள் அங்கு உறஜ் பயணம் மேற்கெவுள்கின்றனர். உள்ளூர் மக்கள் கூறியவாறு கால நிலை எதிர்பாராதவாறு மாறிவருவதால், மெய்லி உறைபனி மலையில் 4 பருவ காலங்களுக்கு ஏற்ப பல்வகை அழகான காட்சிகளைக் கண்டுகளிக்கலாம். இம்மலை கடல் மட்டத்திலுரந்து மிக உயரத்தில் உருப்பதநால், அதன் முக்கிய சிகரமான காவாகபோ சிகரம், அடிக்கடி மேகங்களாலும் மூடு பனியாலும் சூழப்பட்டிருக்கின்றது. வானம் தௌதவாக இருக்கும் பலவ காலத்திலும் கூடு, மூடு பனி மூலம் இம்மலைக் காட்சியை எளிதில் காண முடியாது. எனவே, தெய்வீக மலை மேலும் மாயமாக உள்ளது.

இது வரை, மெய்லி உறைபனி மலையானது, மக்கள் ஏற முடியாத கன்னிச் சிகரங்களில் ஒன்றாகும். 1987ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை, ஜப்பான், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மலை ஏற்றவீரர்கள். பன்முறை இம்மலையில் ஏற முயன்றனர். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. 1991ஆம் ஆண்டு 17 சீன-ஜப்பானியர் கூட்டாக இம்மலையில் ஏறிய போது, அனைவரும் அதற்கு பலியாயினர். இது, உலக மலை ஏறும் வரலாற்றில் மிகவும் துயரமான நிகழ்ச்சியாகும். கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் பயணம் மேற்கெவுள்ளும் இன்னல்களைக் குறைக்கும் வகையில், பயணிகள் மலை ஏறும் போது குதிரை சவாரி செய்ய வேண்டும் மலை அடிவாரத்திலுள்ள மிங் யெவுன் கிராமம், ஒரு குதிரை குழுவை உருவாக்கியுள்ளது. மலை பாதைக்கு அறிமுகமான திபெத் மக்கள், பயணிகளைக் குதிரையில் கூட்டிச்செல்கிந்றனர். இக்குழுவில் 40-50 குதிரைகள் உள்ளன. குதிரையில் பயணிகளை மலைக்கு கூட்டிச்செல்வது, கிராமவாசிகளுக்கு வருமானத்தை அதிகரித்துள்ளது மட்டுமின்றி, அவர்களுக்கு வௌத உலக தகவல்கள் பலவற்றையும் கெவுண்டு வந்துள்ளது என்று ஆபெவுன் எனும் இளைஞர், எமது செய்தியாளரிடம் கூறினார். ஆபெவுன்னியுடன் பேசிக்கெவுண்டே, 5-6 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செந்றுள்ளேவும். மலை பாதை ஊர்ந்து வளைந்து செல்கின்றது. சுற்றுப்புறங்களிலும் அடர்ந்த புராதன சைப்ரஸ் மரங்கள் காணப்படுகின்றன. பிரமாண்டமான பனிக்கட்டி ஆறு, பிரமிடு போல மூடு பனிக்கிடையில் நிமிர்ந்து நிற்கின்றது. இன்னும் சில கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்ற பின் இறுதியில் ஓய்விடம் ஒன்றை அடைந்தோம். தலையை நிமிர்ந்து மேலே பார்த்தவுடனே, கம்பீரமான காவாகபோ சிகரம் எங்கள் கண்ணில் பட்டது.

கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்து உருவாகிய பனிக்கட்டியாற்றைப் பார்த்த போது, நாங்கள் அனைவரும் மௌனமாகிவிட்டநூம். எங்களுடன் வந்த லீ யின் வாய் கூறியதாவது, நாங்கள் இப்போது இருக்கும் இடத்தின் திபெத் பெயர், நி நோ அதாவது, தேவர் அரண்மனையில் என்பது பெவுருளாகும். இன்று இரவு நாங்கள் அதைக் காண முடிந்தமை, ஒரு மங்கல அறிகுறியாகும். அவருடைய உரையைக் கேட்டவுடனே, நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் மூழ்கினோம். தெவுலைநோக்கி மூலம், பனிக்கட்டி ஆற்றைக் கண்டு களித்தோம். பனிக்கட்டியால் வாள் உருவெடுத்த கம்பம், தளிர் மூங்கில் முளை ஆகியவை இருந்தன. இடைஇடையே இடி முழக்கம் போன்ற ஒலி செவி சாய்க்க முடிந்தது. இது பனிக்க்ட்டி சரிந்துவிழும் ஒலி என்று தெரிய வந்தது. சில நிமிடங்களுக்குக் பின், அடர்ந்த மூடு பனியில் இந்த மலை சிகரம் கண்ணிலிருந்து மறைந்துவிட்டது.

No comments: