Tuesday, July 8, 2008

கொழும்பு

கொழும்பு இலங்கையின் மிகப் பெரிய நகரமும் வர்த்தக தலை நகரமுமாகும்.இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது.இது இலங்கையின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றல்ல.16 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டே அரசின் ஒரு பகுதியாகவும் முஸ்லிம் வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம் கிபி 16வது நூற்றாண்டுக்குப் பின்னர் போத்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் அடையத் தொடங்கியது.கொழும்பில் அண்ணளவாக சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் சம அளவில் வாழ்கின்றனர்.கொழும்பு என்ற பெயர் கொள அம்ப தொட்ட என்ற் சிங்கள மொழிப் பெயரிலிருந்து மறுவியதகும்.கொள பச்சை அம்ப மா தொட்ட துறைமுகம்.கொழும்பின் சனத்தொகை 2001ஆம் ஆண்டில் 377 396ஆக காணப்பட்டது.பாரிய கொழும்பு 2 234 289.கொழும்பு இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும்.கொழும்பு வட அகலாங்கு 6ர54 கிழக்கு நெட்டாங்கு 79ர50 இல் அமைந்துள்ளது.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கொழும்பிலேயே அமைந்துள்ளது.இது தென்னாசியாவின் முதல் வானொலி நிலையமாகும்.[தொகு] வலயங்கள்.கொழும்பு 15 வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.கொழும்பு 1 கோட்டை.கொழும்பு 2 கொம்பனித்தெரு.கொழும்பு 3 கொள்ளுப்பிட்டி.கொழும்பு 4 பம்பலப்பிட்டி.கொழும்பு 5 ஹவ்லொக் நகரமும் நரஹேன்பிட்டியும்.கொழும்பு 6 வௌ஢ளவத்தை.கொழும்பு 7 கறுவாத்தோட்டம்.கொழும்பு 8 பொறல்லை.கொழும்பு 9 தெமட்டகொடை.கொழும்பு 10 மருதானை.கொழும்பு 11 புறக்கோட்டை.கொழும்பு 12 ஹல்ஸ்டொஃப்.கொழும்பு 13 கொட்டாஞ்சேனை.கொழும்பு 14 கிரான்ட்பாஸ்.கொழும்பு 15 மட்டக்குளி.

No comments: