Sunday, July 6, 2008

எல்க்கில்

அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்.எல்க்கில்.முருகன் பாலதண்டாயுதபாணி அப்பன் ஜலகண்டேசுவரர் அம்பாள் ஜலகண்டீஸ்வரி சிறப்பம்சம் பெருமாள் தலமரம் செண்பக மரம் தீர்த்தம் நீலநாரயணதீர்த்தம் கோயில்.மலைக்கோயில் ஊர் எல்க்மலை குன்று.மான்குன்றம் மாவட்டம் பிரார்த்தனை முருகனை மனமுருக வேண்டிக்கொண்டால் கல்யாண பாக்கியம் குழந்தை பாக்கியம் ஆகியவை கைகூடுகின்றன.ரத்தகொதிப்பு கை கால் மூட்டு வலி போன்ற உடல் ரீதியான பிரச்சினைகளும் குணமடைவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.நேர்த்தி கடன் முடி இறக்கி காது குத்தல் காவடி எடுத்தல் பால்க்குடம் எடுத்தல் சஷ்டி விரதம் இருத்தல் கார்த்திகை விரதம் இருத்தல் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் செய்யலாம்.முருகன் சந்நிதியின் கருவறைக்குள் பெருமாள் பள்ளிகொண்டிருப்பதை இத்தலத்து விசேசமாக கூறுகிறார்கள்.சாதாரணமாக முருகனை தரிசிப்பவர்களுக்கு இக்காட்சி தெரியவாய்ப்பில்லை.முருகப்பெருமானது சிலைக்கு பின்புறம் பூசாரி தீபாராதனை காட்டச் சொல்லி இந்த அரிய காட்சியை தரிசிக்கலாம்.தலபெருமைகள் இங்குள்ள அம்பாள் அருள் வாய்ந்தது.செவ்வாய் வௌ஢ளி கிழமைகளில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தால் நினைத்தது நிறைவேறும்.நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலில் தோன்றிய முருகன் கோயில்.மலையும் மலை சார்ந்த இடத்தில் குறிஞ்சி கடவுள் முருகனை வழிபடுதல் என்பது இத்தலத்துக்கு கூடுதல் சிறப்பு.படுகர் இன மக்கள் முடி எடுத்து காது குத்தி வழிபடுகிறார்கள்.முருகன் உள்ள தலத்தில் பெருமாள் எழுந்தருளியிருப்பது விஷேசம் 7500 அடி உயரத்தில் இருக்கும் முருகன் கோயில் இது.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் ஊட்டி நகரின் மையப் பகுதியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.கோயம்புத்தூரிலிருந்து 98 கி.மீ.தங்கும் வசதி நகரை ஒட்டினாற்போல் உள்ள பகுதியிலேயே கோயில் இருப்பதால் குடும்பத்தோடு வருபவர்கள் ஊட்டி நகரிலேயே தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.கட்டணம் ரூ.300 முதல் ரூ.1000 வரை.போக்குவரத்து வசதி ஊட்டி இந்தியாவின் மிகப் பெரிய சுற்றுலா தலமாதலால் ஊட்டிக்கு முக்கிய நகரங்களிலிருந்து போக்குவரத்து வசதி அதிகம்.பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோ டாக்ஸி ஆகியவற்றில் கோயிலுக்கு செல்ல முடியும்.அருகிலுள்ள ரயில் நிலையம் ஊட்டி கோவை.அருகிலுள்ள விமான நிலையம் கோவை முக்கிய திருவிழாக்கள் தைப்பூசம் 5 நாள் திருவிழா 25 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.பங்குனி உத்திரம் கந்த சஷ்டி.வைகாசி விசாகம் ஆகிய விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.தவிர முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் விசேசமாக இருக்கும்.பொங்கல் தீபாவளி வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் இத்தலம் பக்தர்களின் வருகையால் நிரம்பி வழியும்.தல வரலாறு பழனி முருகன் கோயிலுக்கு குழந்தை வரம் வேண்டிக்கொண்டனர் ஒரு தம்பதியினர்.வேண்டிக்கொண்டவாறே குழந்தை பாக்கியத்தை முருகப் பெருமான் தர பழனிக்கு சென்று நேர்த்தி கடன் செலுத்த நினைத்தனர்.ஆனால் என்ன காரணத்தாலோ பழனிக்கு செல்ல முடியவில்லை.அவர்களது கனவில் வந்த முருகன் இங்குள்ள குன்றில் தமக்கு கோயில் எழுப்புமாறு கூறினார்.எனவே தங்கள் நேர்த்திகடனை செலுத்தும் பொருட்டு இங்குள்ள குன்றின் மீது முருகனுக்கு கோயில் எழுப்பி வழிபட்டனர்.காலப்போக்கில் அது மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக ஆனது.

No comments: