Monday, July 7, 2008
ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டம்.ஈரோடு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 30 மாவட்டங்களுள் ஒன்றாகும்.ஈரோடு இதன் தலைநகராகும்.காவிரி பவானி மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகள் ஈரோடு மாவட்டத்தின் வழியாகப் பாய்கின்றன.கோவை மாவட்டத்திலிருந்து 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக ஈரோடு மாவட்டம் விளங்குகிறது.கோவை ஈரோடு நாமக்கல் மாவட்டங்களையும் கரூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியையும் திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியிருப்பதே கொங்கு நாடு ஆகும்.தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும் கிழக்கில் சேலம் கரூர் மாவட்டங்களும் வடக்கில் கர்நாடகமும் மேற்கில் கோவை மாவட்டமும் ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.காவிரி நொய்யல் பவானி உப்பாறு.பவானி சாகர் வறட்டுப்பள்ளம் கொடிவேரி ஒரத்துப்பள்ளம் உப்பாறு காளிங்கரான் அணை.ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைகள் தாளவாடி மலை திம்பமலை தல்ல மலை தவளகிரி மலை பவள மலை பன்னாரி மலை பெருமாள் மலை பருவாச்சி மலை பூனாட்சி மலை அந்தியூர் மலை வட்டமலை சென்னிமலை மலைப்பாளையம்மன் மலை எழுமாத்துர் மலை எட்டிமலை அருள்மலை சிவகிரி மலை அறச்சலுர் மலை அரசன்னா மலை திண்டல் மலை விசயகிரி மலை ஊராட்சி கோட்டை மலை ஆகியவையாகும்.தமிழ்நாட்டிலுள்ள வனக் கோட்டங்களில் ஈரோடு மாவட்ட வனக் கோட்டமே மிகப் பெரியது.தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரோடு மாவட்டத்திலிருந்து கிடைக்கிறது.பவானி சாகர் தெங்க மராடா மோயாறு பன்னாரி ஹாசனுர் காட்டுப் பகுதிகளில் யானைகள் அதிகமாக வாழ்கின்றன.ஈரோடு துணி மார்க்கெட் இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது.ஈரோடு மாவட்டம் மஞ்சள் சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களுக்கான முக்கிய சந்தையாகும்.மஞ்சளானது ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தமிழ்நாட்டு கர்நாடக மாவட்டங்களிலிருந்தும் வருகிறது.கைத்தறி நெசவுத் தொழில் பெருந்துறை தாராபுரம் ஈரோடு பவானி ஆகிய இடங்களில் நடக்கிறது.சென்னிமலை பவானி ஆகிய இடங்களில் ஜமுக்காளம் போர்வைகள் படுக்கை விரிப்புகளுக்கு புகழ்பெற்றது.ஈரோடு மாவட்டம் இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி துணிகளுக்கு பெயர்பெற்றது.மீன்பிடிப்பு ஈரோடு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடிப்பே நடந்து வருகிறது.காவிரி பவானி நொய்யல் அமராவதி ஆகிய ஆறுகளில் அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன.பவானிசாகர் அணையிலும் உப்பாறு அணையிலும் மீன்பிடிப்பு சிறப்பாக நடைபெறுகிறது.இங்கு பிடிக்கப்படும் மீனுக்கு பவானிகெண்டை என்றே பெயர் உள்ளது.கால்நடை வளர்ப்பு ஈரோடு மாவட்டத்தில் பாரம்பரியமாகவே கால்நடை வளர்ப்பு சிறந்த முறையில் நடந்து வருகிறது.பண்ணாரி மாரியம்மன் கோவில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் சென்னிமலை முருகன் கோவில் கொடுமுடி வீரநாராயணப் பெருமாள் கோவில் பாரியூர் அம்மன் கோவில் சிவன்மலை ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திண்டல்மலை முருகன் கோவில் முதலியன.ஈரோடு மாரியம்மன் பண்டிகை பண்ணாரி மாரியம்மன் பண்டிகை அந்தியூர் குருநாதசாமி தேர்த்திருவிழா சென்னிமலை தைபூசத் திருவிழா சிவன்மலை தேரோட்டம் பவானி கூடுதுறை ஆடிப் பெருக்கு.ஈரோடு மாவட்டத்தின் தொழில் முயற்சிகளுக்குப் பெரிதும் துணையாக இருப்பது போக்குவரத்து.ஈரோடு பவானி சித்தோடு பெருந்துறை விஜயமங்கலம் வழியாக செல்லும் சாலை கர்நாடக மாநிலத்தை அடைகிறது.ஆ ஈரோடு அந்தியூர் பர்கூர் வழிச்சாலை தமிழகத்தையும் கர்நாடகத்தையும் இணைக்கிறது.பவானியிலும் ஈரோட்டிலும் காவிரியைக் கடக்கும் பெரிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.முக்கிய புகைவண்டி நிலையங்கள் ஈரோடு ஊத்துக்குளி பெருந்துறை ஊஞ்சலுர் கொடுமுடி பாசூர் ஈங்கூர்.ஈரோடு கோவை இருப்புப்பாதை ஓர் இரட்டைப் பாதையாகும்.பவானி சாகர் அணைக்கட்டு கூடுதுறை கொடிவேரி அணைக்கட்டு தாளவாடி மலை.ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரியம்மன் கோவில்.இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது.இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது.[தொகு] பவானி முக்கூடல்.காவிரியும் பவானியும் கலக்கும் இடத்திற்கு தட்சிண பிரயாகை.ஈரோடு நகரத்திலே உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment