Tuesday, July 8, 2008
ஐபீரிய மூவலந்தீவு
ஐபீரிய மூவலந்தீவு.ஐரோப்பாவின் தென்மேற்கே உள்ள உள்ள ஐபீரிய மூவலந்தீவின் படம்.இதில் எசுப்பானியம் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் காட்டப்பட்டுள்ளனஐபீரிய மூவலந்தீவு என்பது ஐரோப்பாவின் தென்மேற்கே உள்ள பகுதி.இந்நிலப்பகுதி இன்றைய எசுப்பானியம் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் அமைந்திருக்கும் இடம் ஆகும்.கிப்ரால்ட்டர் பிரித்தானிய ஆட்சிப்பகுதியும் ஐபீரியாவில் அடங்கும்.ஐரோப்பியாவில் உள்ள மூன்று மூவலந்தீவில் இதுவே தென்மேற்க்குக் கோடியில் உள்ளது.இதன் கிழக்கு தெற்கு எல்லைகளில் நிலநடுக்கடலும் வடக்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது.இந்த மூவலந்தீவின் மொத்த பரப்பளவு 582 860 கி.மீ2 kmல.வரலாறு.இந்த மூவலந்தீவில் ஏறத்தாழ 1 000 000 ஆண்டுகளுக்கு முன்னரே முன்மாந்த இனங்கள் இங்கு வாழ்ந்திருந்தற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன.இன்றைய மாந்தர்களாக வடிவெடுப்பதற்கு முன்னர் இருந்த முன்மாந்த இனங்களான ஹோமோ எரெக்டஸ் Homo erectus ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் Homo heidelbergensis ஹோமோ ஆன்டிசெசர் Homo antecessor முதலிய இனங்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் அட்டாபுயெர்க்கா Atapuerca என்னும் இடத்தில் அண்மையில் கண்டு பிடித்துள்ளார்கள் [1].இந்தோ ஐரோப்பி மொழிகள் பேசும் மக்கள் வருவதற்கு முன்னரே இங்கு வேறு இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.இவர்களுள் பாஸ்க் மக்களும் ஓரினமாகும்.பாஸ்க் மக்கள் யூஸ்கால்டுனாக்.Euskaldunak என்று அழைக்கப்படுகின்றனர் அதாவது யூஸ்காரா மொழி பேசுவோர்.கடலோடிகளாகிய ஃவினீசியர்களும் கிரேக்கர்களும் கார்த்தேசியர்களும் இந்த மூவலந்தீவில் பலநூற்றாண்டுகளாக சென்று குடியேறியிருக்கிறார்கள்.ஏறத்தாழ கி.மு 1100ல் ஃவினீசிய வணிகர்கள் காடிர் Gadir அல்லது காடேசு Gades என்னும் வணிகக் குடியிருப்பை நிறுவினார்கள்.தற்காலத்தில் இது காடிஸ் Cஊdiz என்று அழைக்கப்படுகின்றது.கிரேக்கர்கள் ஐபர் Iber Ebro என்னும் ஆற்றின் அடிப்படையில் இப்பகுதியை ஐபீரியா என அழைத்தனர்.கி.மு 600களில் கார்த்தீசியர்கள் இங்கு வந்தனர்.கார்த்தீசியர்களின் முக்கியமான குடியிருப்பு கார்த்தகோ நோவா Carthago Nova தற்கால இலத்தீன் பெயர் கார்த்தஜெனா அல்லது கார்த்தஹெனா Cartagena.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment