Sunday, July 6, 2008
காமாட்சி அம்மன் திருக்கோயில்
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் காஞ்சிபுரம் 1.அம்மன் காமாட்சி 2.பிரதிஷ்டை.வியாசர் 3.பெருமை சக்திபீடம் 4.சிறப்பு ஸ்ரீசக்ரம் 5.பிரதிஷ்டை.ஆதிசங்கரர் 6.ஸ்தோத்திரம் ஆனந்தலஹரி 7.தலமரம் செண்பகம் 8.தீர்த்தம் பஞ்சகங்கை 9.கூரை தங்கவிமானம் 10.மாவட்டம்.அம்மனை வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யமான வாழ்வும் மனநிம்மதியும் ஏற்படுகிறது.இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.தவிர திருமண வரம் குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.எனவே நவகிரக தோசம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடல் நலம்.சந்தான ஸ்தம்பம் குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.நேர்த்தி கடன் அம்மனுக்கு புடவை சாத்துதல்.கோயிலின் சிறப்பம்சம் சக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம்.அம்மன் தென்கிழக்காக பத்மாசனத்தில் கரங்களில் பாசம் அங்குசம் புஷ்ப பாணம் கரும்பு வில் ஆயுதங்களோடு காட்சி தருகிறாள்.கிருதயுகத்தில் 2000 சுலோகங்களால் துர்வாசராலும் திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களால் பரசுராமராலும் துவாபர யுகத்தில் 1000 சுலோகங்களால் தௌம்யா சார்யாரும் கலியுகத்தில் 500 சுலோகங்களால் மூகசங்கரரும் பாடிய பெருமை காமாட்சிக்கு உண்டு.இந்த ஆலயத்தில் ஞான சரஸ்வதி லட்சுமி அரூப லட்சுமி சியாமளா வாராஹி அன்னபூரணி அர்த்தநாரீ ஆகிய எல்லோரும் இருக்கிறார்கள்.பராசக்தியின் அம்சம் எல்லாவற்றையும் தரிசிக்க இந்த ஆலயம் ஒன்றே போதும்.இங்குள்ள பெருமாள் கள்வன் என அழைக்கப்படுகிறார்.இக்கோயிலுக்குள் உள்ள இவரது சந்நிதி 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிற சிறப்பு பெற்றது.2500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான தலம் ஹை லைட்ஸ் காயத்திரி மண்டபம் இவ்வாலயத்தினுள் முதல் பிரகாரத்தின் மத்தியில் உள்ளது.இந்த மண்டபத்தின் மத்தியில்தான் காமாட்சி அம்மன் வீற்றிருக்கிறாள்.இம்மண்டபத்தினுள் 24 ஸ்தம்பங்கள் தூண்கள் உள்ளன.24 அட்சரங்கள் 24 தூண்களாக காட்சியளிப்பது இங்கு சிறப்பு.இதேநிலையில் இதே போல் மண்டபத்தின் கீழே இருப்பதாவும் ஐதீகம்.காரணம் அம்பாள் மீதே நிற்ககூடாது என்ற அச்சம் தான் என்றும் கூறுகின்றனர்.துர்வாசர்இவர் சிறந்த தேவி பக்தர்.லலிதாஸ்தவரத்னம் என்ற நூலை இயற்றியவர்.இவரே இப்போதுள்ள அம்மனின்மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தவர்.அம்மன் முதன்முதலில் காட்சி தந்ததும் இவருக்கே. ஸ்ரீசக்கிரம் ஆதிசங்கரர்.இது அம்மனின் எதிரில் உள்ளது.ஆதிசங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.காஞ்சியில் ஒரு காலத்தில் அம்மன் மிக உக்கிரமாக விளங்கினாளாம்.ஆகையால் இந்த ஸ்ரீ சக்கிரத்தை பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினாராம்.இவருக்கு இக்கோயிலில் தனி சந்நிதி உண்டு.கோயிலில் 5 காமாட்சிகள் பிலாகாசம் ஸ்ரீசக்கிரம் மூல காமாட்சி தபஸ் காமாட்சி பங்காரு காமாட்சி காமாஷி தத்துவம்காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாஷி.கா என்றால் ஒன்று.ம என்றால் ஐந்து.ஷி என்றால் ஆறு.அதாவது ஐந்து திருநாமங்களையும் சக்தி பேதம் மூன்று.சிவபேதம் இரண்டு.விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள்.மற்றும் கா என்றால் சரஸ்வதி.மா என்றால் மகேஸ்வரி.ஷி என்றால் லட்சுமி.இம்மூன்று தேவிகளும் ஒன்றாக க்ஷஇணைந்தவள்கரும்பும் வில்லும் காமக் கடவுளாகிய மன்மதன்தான் கரும்பையும் புஷ்ப பாணமும் இருக்கும்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் காஞ்சிபுரம் நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.சென்னையிலிருந்து 75 கி.மீ.செங்கல்பட்டிலிருந்து 35 கி.மீஅரக்கோணத்திலிருந்து 30 கி.மீ.தங்கும் வசதி.கட்டணம் ரூ.200 முதல் 500 வரைபோக்குவரத்து வசதி பஸ்வசதி காஞ்சிபுரம் நகரின் மத்தியில் கோயில் உள்ளதால் கோயிலுக்கு செல்வது எளிது.அருகில் உள்ள ரயில் நிலையம் காஞ்சிபுரம் அரக்கோணம் சென்னை.அருகில் உள்ள விமான நிலையம் சென்னை முக்கிய திருவிழாக்கள் பிரம்மோற்சவம் மாசி மாதம் 10 நாட்கள் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது விசேசம்.நவராத்திரி புரட்டாசி மாதம் 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.அவதார உற்சவம் ஐப்பசி மாதம் சிறப்பான இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.பௌர்ணமி பூஜை இத்தலத்தில் மிகவும் வசேசம்.அம்மாவாசை பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ் ஆங்கில வருடபிறப்பு விஜய தசமி தீபாவளி பொங்கல் ஆகிய விசேச நாட்களில் அம்மன் தங்கரதத்தில் வரும் போது ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பர்.தல வரலாறு.அவனுக்கு 9 வயதுடைய பெண்குழந்தையால்தான் மரணம் நிகழும் என்பதும் அவனது தலைவிதியாக விதிக்கப்பட்டிருந்தது.மிக முக்கிய சக்தி பீடமாக உள்ள இத்தலத்தில் உள்ள காமாட்சி அம்மனை வழிபட்டால் மோட்சம் கிட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment