Sunday, July 6, 2008

கண்டியூர்

அருள்மிகு பிரம்மசிரகண்டீசுவர் கோயில்.குட முருட்டி பதிகம் நால்வரும் பாடியுள்ளனர் பாடல் அருணகிரிநாதர் திருப்புகழ் புராண பெயர் ஆதிவில்வாரண்யம் தலச்சிறப்பு ஊழிக்காலத்தில் உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாக தரித்து.ஓம் என்ற பிரணவமந்திரத்தை தோணியாக்கி உமா மகேஸ்வரராக வருகையில் ஊழிக்காலத்திலும் அழியாத இந்த சீர்காழி தலத்தை பார்த்தார்.இதுவே எல்லாவற்றிற்கும் மூல க்ஷேத்திரம் என்று தோணியுடன் இத்தலத்தில் எழுந்தருளி தோணியப்பர் என பெயர் பெற்றார்.அம்பாள் திருநிலைநாயகி எனப்பட்டாள்.இங்கு சிவனை பிரம்மா பூஜித்ததால் பிரம்மபுரீசுவரராக லிங்க வடிவிலும்.ஆணவங்களை அழிப்பவராக சட்டைநாதராகவும் பிரம்மா விஷ்ணு சிவன் என மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார்.மகாபலியை கொன்ற பாவம் விஷ்ணுவுக்கு பிடித்து கொள்கிறது.விஷ்ணு வேறு தான் வேறு இல்லை என்பதால் விஷ்ணுவின் தோலை சட்டையாக போர்த்திக் கொண்டார் சிவன்.வெகு உக்கிரமாக இருப்பதால் பெண்கள் சட்டைநாதர் சன்னதிக்கு வரும் போது பூ வைக்காமல் வந்து வணங்குகின்றனர்.மேலும் விஷ்ணு சிவனால் அழிக்கப்பட்டதால் லட்சுமி பூ கூட வைக்காமல் ஆழ்ந்த கவலையில் இருந்ததாகவும் அதன் காரணமாக பெண்கள் பூவைத்து செல்வதில்லை என்றும் கூறுகிறார்கள்.சிறப்பம்சம் பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம்.பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம்.இங்கு வந்து வணங்கினால் தான் என்ற அகங்காரம் நீங்கி ஞானம் கிடைக்கும்.பிரம்மா விஷ்ணு சிவன் பார்வதி லட்சுமி சரஸ்வதி மூலவர் உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான்.காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம்.இங்கு அசிதாங்க பைரவர் ருருபைரவர் சண்டபைரவர் குரோத பைரவர் உண்மத்த பைரவர் சம்ஹார பைரவர் பீஷண பைரவர் அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர்.எனவே தான் காழியில் பாதி காசி என்பர்.பதினெட்டு சித்தர்களில் சட்டைமுனி இங்குதான் சமாதியாகி உள்ளார்.இவரது சமாதியின் மேல் உள்ள பீடத்தை பார்ப்பது போல்தான் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார்.இவருக்கு சுக்கிர வார பூஜையில் புனுகு சட்டம் சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது.சட்டங்களுக்கெல்லாம் இவரே அதிபதி என்பதால் சட்டபிரச்னையால் சொத்து தகராறு உள்ளவர்கள் தண்டனைக்கு ஆளாகி விடுவோமோ என பயப்படும் நிரபராதிகள் இங்கு வழிபட்டு பலனடைகின்றனர்.முக்கிய திருவிழாக்கள் காலை 6 முதல் மதியம் 1 மணிவரையிலும் மாலை 4 முதல் இரவு 9 மணிவரையிலும் இறைவனை தரிசிக்கலாம்.சித்திரை திருவாதிரையில் திருவிழா கொண்டாடப்படுகிறது.இருப்பிடம் மயிலாடுதுறையிலிருந்து வடக்கே 20 கி.மீ தொலைவிலும் சிதம்பரத்திற்கு தெற்கே 19 கி.மீ தொலைவிலும் சீர்காழி உள்ளது.மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் அனைத்து பஸ்களிலும் செல்லலாம்.தொலை பேசி எண் 04364 270 235அருகிலுள்ள ரயில் நிலையம் சீர்காழிஅருகிலுள்ள விமான நிலையம் திருச்சி சென்னை.தல வரலாறு திருஞானசம்பந்தர்.இவர் சிவத்தொண்டு செய்வதற்காகவே முருகப்பெருமானின் அம்சமாக சிவ பாத இருதயருக்கும்.பகவதி அம்மையாருக்கும் அவதரித்தவர்.சீர்காழியைத் தன் சொந்த ஊராகக் கொண்டவர்.இவருக்கு மூன்றுவயதான போது தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு சென்றார்.தந்தையார் மகனை குளக்கரையில் அமரச் செய்து விட்டு குளத்தில் நீராடச் சென்றார்.தந்தையை காணாததாலும் முன் செய்த தவம் கூடி வந்ததாலும்.அம்மே அப்பா என அழுதார்.குழந்தையின் அழுகுரல் கேட்டு அம்மையும் அப்பனும் விடை காளை மீதுஅமர்ந்து காட்சி கொடுத்தனர்.குளித்து விட்டு வந்த தந்தை குழந்தையை பார்த்தார்.குழந்தையின் வாயில் அம்பாள் ஊட்டிய பால் ஒட்டியிருந்தது.வாயில் எப்படி பால் ஒட்டியது என கேட்டு குச்சியால் சம்பந்தரை அடித்தார் தந்தை.விவரம் தெரியாத சம்பந்தர் அம்மையப்பன் காட்சி கொடுத்த திசையை காட்டினார்.தந்தைக்கோ அம்மையப்பன் தெரியவில்லை.வந்தவர்கள் எப்படி இருந்தார்கள் என்று தந்தை கேட்டார்.

No comments: