அருள்மிகு கொடுங்கலூர் பகவதி கோயில் மூலவர் பகவதி அம்மன் இருப்பிடம்
கொடுங்கலுணர் தல வரலாறு கண்ணகியை திருமணம் செய்த கோவலன் மாதவியின்
தொடர்பால் செல்வத்தை இழந்தான்.பிழைப்பு தேடி மதுரை வந்தான்.வியாபாரம் துவங்குவதற்காக மனைவியின் கால் சிலம்பை விற்கச் சென்றான்.மதுரை அரசியின் காணாமல் போன சிலம்பும்.விற்பனைக்கு கொண்டு வந்த சிலம்பும் ஒரே மாதிரியாக இருக்கவே அரண்மனை
பொற்கொல்லன் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கோவலன் மீது திருட்டுப்பழி சுமத்தினான்.தீர விசாரிக்காமல்.பாண்டிய மன்னன் அவனைக் கொன்று விட்டான்.கணவன் இறந்த செய்தி கேட்டதும் கண்ணகி நீதிகேட்டு வென்றாள்.பாண்டியனும் அவனது மனைவியும் இறந்தனர்.கோபம் தீராமல் மதுரையை எரித்த கண்ணகி சேர நாடு சென்றாள்.அவளது கற்புத்திறன் கண்டு நெகிழ்ந்த சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு
கொடுங்கலுணரில் கோயில் கட்டி பகவதி அம்மனாக நினைத்து வழிபாடு செய்தான்.தல சிறப்பு இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோயில் கட்டப்பட்டதாக
கல்வெட்டு கூறுகிறது.இந்த பகவதியை கேரள மக்கள் தங்கள் தாயாகக் கருதுகிறார்கள்.இவ்வூரில் உள்ள வீடுகளில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை
இந்த அம்மனுக்குத் தான்.ஆரம்ப காலத்தில் இந்த பகவதி உக்கிர தெய்வமாக இருந்தாள்.கள் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்தனர்.அதன் பின் ஆதிசங்கரர் யந்திர பிரதிஷ்டை செய்து அம்பிகையை சாந்த சொரூபயாக்கினார்.உயிர்ப்பலிக்கு பதில் குருதி பூஜையும் கள்ளிற்கு பதில் இளநீரும் மஞ்சள்பொடியும் கலந்து
நைவேத்தியம் செய்ய ஏற்பாடு செய்தார்.கோயில் அமைப்பு எட்டு கைகள் பெரிய கண்கள் சிறிய இடை எதிரியை அழிக்கும்
கோபத்துடன் கூடிய முகம் ஆறடி உயரம் வலதுகாலை மடக்கி இடது காலை
தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி தலையில் கிரீடத்துடன் அரசியைப்போல்
பகவதி அருள்பாலிக்கிறாள்.அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது.இதனை வரிக்க பலாவு என்கிறார்கள்.இதனால் அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் செய்வதில்லை.சாந்தாட்டம் என்ற சிறப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது.கர்ப்பகிரகம் அருகே ஒரு ரகசிய அறை உள்ளது.இதையும் மூலஸ்தானமாக கருதி சிறப்பு பூஜை செய்கிறார்கள்.சிவனுக்கு கிழக்கு நோக்கி தனி சன்னதி உள்ளது.ஒரே இடத்தில் நின்று பகவதியையும் சிவனையும் தரிசிக்கும்படியான அமைப்பு
இங்குள்ளது.கோயில் நுழைவு வாயிலில் க்ஷேத்திர பாலகர் உள்ளனர்.அவர்களுக்கு சர்க்கரை சாதத்தில் தயிர் சேர்த்து நிவேதனம் செய்யப்படுகிறது.கோயில் முழுவதும் செம்பு தகடு வேயப்பட்டுள்ளது.வழிபாடு அம்மை நோய் கண்டவர்கள் இங்கு நேர்ந்து கொள்கிறார்கள்.கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் மன அமைதி இல்லாதவர்கள் எதிரிகளால் தொந்தரவு
உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் துலாபாரம் காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து
கொள்கிறார்கள்.திருவிழா தை 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை தாலப்பொலி என்ற உற்சவம் சிறப்பாக
கொண்டாடப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் சுமங்கலி பெண்கள் எண்ணெய் குங்குமம் மஞ்சள் பூ இவைகளை
மேளதாளத்துடன் கொண்டு வந்து அம்மனுக்கு படைப்பார்கள்.நவராத்திரி சிவராத்திரி ஆடி வெள்ளி தினங்களில் இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.திறக்கும் நேரம் காலை 4 முதல் 12 வரையிலும் மாலை 4 முதல் இரவு 8 மணி
வரையிலும் நடை திறந்திருக்கும்.இருப்பிடம் திருச்சூரிலிருந்து 45 கி.மீ. குருவாயூரிலிருந்து 50 கி.மீ. எர்ணாகுளத்திலிருந்து
55 கி.மீ. துணரத்தில் கோயில் உள்ளது.அனைத்து ஊர்களிலிருந்தும் கோயிலுக்கு பஸ் வசதி உள்ளது.போன் 0480 280 3061.
No comments:
Post a Comment