Tuesday, July 8, 2008
கோன்ஸ்கோவோலா
கோன்ஸ்கோவோலா என்பது போலந்து நாட்டின் தென்பகுதியில் பாயும் குரோவ்க்கா ஆற்றங்கரையில் புலாவி லூபிலின் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள ஓர் ஊர்.இவ் ஊரில் 2004 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2188 மக்கள் வாழ்கிறார்கள்.இவ் ஊரின் பெயரில் உள்ள வோலா Wola என்பது ஊர் சிற்றூர் என்னும் பொருள் கொண்டது.ஊர்ப்பெயரை நேரடியாக மொழிபெயர்த்தால் குதிரையின் விருப்பம் அல்லது குதிரையின் உள்ள உறுதி என்று பொருள்படுமாம்.யான் கொனினா அல்லது யான் கோனிஸ்கி Jan KoniDski என்னும் ஒருவருக்குச் சொந்தமான ஊர் வோலா என்பதால் கோன்ஸ்கோவோலா எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர்.முன்னர் இவ்வூரின் பெயர் விட்டநூவ்ஸ்கா வோலா என்பதாகும்.ஹென்றிக் சியென்க்கீவிக்ஸ் என்னும் நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர் தன்னுடைய நெருப்புடனும் வாளுடனும் With Fire and Sword என்னும் வரலாற்றுப் புதினத்தில் இவ்வூரைப்பற்றி ஒரு குறிப்பு தந்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment