Monday, July 7, 2008

கோவில்பட்டி

கோவில்பட்டி.கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.புவியியல்.இவ்வூரின் அமைவிடம் 9.17ர N 77.87ர E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 மீட்டர் 347 அடி உயரத்தில் இருக்கின்றது.மக்கள் வகைப்பாடு.இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 87 458 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 49% ஆண்கள் 51% பெண்கள் ஆவார்கள்.கோவில்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு 82% பெண்களின் கல்வியறிவு 70% ஆகும்.இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட மிக அதிகம்.கோவில்பட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டநூர் ஆவார்கள்.பக்கத்து ஊர்களுடன் ஒப்பீடு.சிவகாசி சாத்தூர் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளிவிட்டது.மக்கள் தொகை மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் பல்துறை மருத்துவமனைகள் பெருகியுள்ளன.சிறந்த கல்வி வசதி குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.தொழில்.கோவில்பட்டி நகரம் தீப்பெட்டி தயாரிப்புக்கு பெயர் போனது.பட்டாசுத் தொழிற்சாலைகளும் இங்கு உண்டு.நிலக்கடலை மற்றும் கேழ்வரகு கம்பு போன்ற தானிய வகைகளாகும்.இங்கு விளையும் பருத்தியை இடுபொருளாகக் கொண்டு லக்ஷ்மி மில்ஸ் லாயல் மில்ஸ் எனும் இரண்டு பெரிய பஞ்சாலைகள் அமைந்துள்ளன.கோவில்பட்டியின் வளர்ச்சிக்கு இவ்விரண்டு ஆலைகளும் பெரிய பங்காற்றியுள்ளன.கோவில்பட்டி நகரில் தயாராகும் கடலை மிட்டாய் என்னும் இனிப்புப்பண்டம் புகழ் பெற்றது.அரசியல்.

No comments: