Sunday, July 6, 2008

குன்றக்குடி

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் குன்றக்குடி.மூலவர் சண்முகநாதன் விநாயகர் தோகையடி தலமரம் அரசமரம் தீர்த்தம் தேனாறு சிறப்பு மலைக்கோயில் பதிகம் திருப்புகழ் ஊர் குன்றக்குடி புராணபெயர்.அரசவனம் பிறபெயர்.மயில்மலை மாவட்டம்.நோய் நீக்கம் துன்ப நீக்கம் குழந்தை வரம் ஆயுள் பலம் கல்வி அறிவு செல்வம் விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்குன்றக்குடிக்கு காவடி என்பது புகழ்பெற்றது.குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது.நேர்த்தி கடன் காவடி எடுத்தல் பால்க்குடம் எடுத்தல் சஷ்டி விரதம் இருத்தல் உடற்பிணி தீர ஆண்கள் அங்கபிரதட்சணம் பெண்கள் கும்பிடுதண்டமும் அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர்.வௌ஢ளியிலான அந்தந்த உறுப்பு வடிவங்களை காணிக்கை செலுத்துகின்றனர்.விவசாய விளைச்சல் பெற்றவர்கள் தானியங்களை காணிக்கை செலுத்துகின்றனர்.அரிசி கொண்டு வந்து மலைப்படிகளில் தூவுகின்றனர்.கோழி ஆடு மாடு ஆகியவற்றை நேர்த்திகடனாக செலுத்துகின்றனர்.தவிர சண்முகார்ச்சனை சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள்.கார்த்திகை விரதம் இருத்தல் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் இறைவனுக்கு செய்யலாம்.இம்மலை மயில்வடிவாக இருப்பதாக கூறுகிறார்கள்.இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டர்.மலைமீதுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டர்.ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டர்.ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.மூலவர் சண்முகநாதன் ஆறுதிருமுகங்களோடும் பன்னிரு திருக்கரங்களோடும் எழுந்தருளியுள்ளார்.செட்டிமுருகன் குன்றையூருடையான் மயூரகிரிநாதன் மயில்கலைக்கந்தன் குன்றைமுருகன் தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு.தேனாற்று நாதர் கீழ்க்கோயிலில் எழுந்தருளியிருப்பவர் சுயம்புமூர்த்தி.அகத்தியரால் வழிபாடு செய்யப்பெற்றவர்.தேனாற்றங்கரையில் இருப்பதால் தேனாற்று நாதர் என்று பெயர் பெற்றுள்ளார்.கோயிலின் பிற தீர்த்தங்கள் சரவணப்பொய்கை தேனாறு மயில் தீர்த்தம்.தலபெருமைகள் முருகன் வள்ளி தெய்வானை மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தருவது தனி சிறப்பு.மயில் மீது அமர்ந்து இருக்கும் மூலவர் இறங்கி வருவது போலவே இருக்கும்.இந்தக் குன்றக்குடி மலை தோற்றத்தில் மயில் வடிவமாய் காட்சி தருகிறது.மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழந்ததற்கான கற்படுக்கைகளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ள அமண்பாழியிருக்கிறது.கண்ணபிரான் நான்முகன் இந்திரன் வசிட்டர் விசுவாமித்திரர் நாரதர் கருடன் சூரியன் மன்மதன் முதலியோர் வழிபட்ட தலம் இது.அகத்தியர் வழிபட்டதும் பாண்டவர்கள் வழிபட்டதும் இத்தலத்து சிறப்பு மிக்க அம்சங்கள்.கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றதும் இத்திருத்தலமாகும்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து கோயிலின் தூரம் திருப்பத்தூர் 12 கி.மீ.காரைக்குடி.10 கி.மீ.தங்கும் வசதி.கட்டணம் ரூ.250 முதல் ரூ.500 வரை.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் குன்றக்குடி.அருள்மிகு திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி சிவகங்கை மாவட்டம்.போன் 04577 264227.முக்கிய திருவிழாக்கள் பங்குனி உத்திரம் 10 நாள் திருவிழா.தைப்பூசத் திருவிழா 10 நாள் திருவிழா இவை இரண்டும் இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழாக்கள் ஆகும்.சித்திரை பால்பெருக்கு விழாவைகாசி வைகாசி விசாகப் பெருவிழாஆனி மகாபிசேகம்ஆடி திருப்படிபூஜைஆவணி ஆவணிமூலம்பிட்டுத்திருவிழாபுரட்டாசி அம்புபோடும் திருவிழாஐப்பசி கந்த சஷ்டி திருவிழா தல வரலாறு சூரனாதியோர் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முரனின் அன்னம்.அன்னத்தையும் கருடனையும் மயில விழுங்கி விட்டது.இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும் கருடனையும் மீட்டு தந்தார்.பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போக சாபம் தந்தார்.மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு குன்றக்குடி வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது.முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார்.பின் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றத்தில உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார்.மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

No comments: