Sunday, July 6, 2008
மடப்புரம்
அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் மடப்புரம் அம்மன் பத்ரகாளி கோலம் சம்ஹாரம் கிரீடம் அக்னி உயரம் 13 முழம் கம்பீரம் குதிரை காவல்தெய்வம் அய்யனார் தலமரம் வேம்பு தீர்த்தம் பிரம்மகுண்டம் ஊர் மடப்புரம்.மாவட்டம் செய்வினை பில்லி.பகைவர்களை வெல்லும் சக்தியையும் தருவதால் இத்தலத்து பத்ரகாளியம்மன் மிகவும் ஆக்ரோசமாக சக்தி உள்ளவர்.பத்ரகாளியம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது.வியாபார விருத்திக்காக இத்தலத்தில் வழிபடுவோர் நிறைய உண்டு.மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் வழக்கமாக இத்தலத்தில் வழிபடுவதை அடிக்கடி பார்க்கலாம்.நேர்த்தி கடன் ஆரம்ப காலங்களில் சாமியாடிகள் கூடி களரி எனும் சாமி ஆடுவது வழக்கமாக இருந்தது.அம்மனை குளிர்ச்சியூட்ட எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகின்றன.அம்மனுக்கு ஆடை அணிவித்தலும் படையலாக கருதப்படகிறது.கோயிலின் சிறப்பம்சம் பத்ரகாளியம்மன் தோற்றம் சம்கார தேவதையாக காட்சி தருகிறாள் பத்ரகாளியம்மன்.வலக்கையில் பற்றிய கீழ்நோக்கி திரிசூலம் அநீதியை அழிக்கவும்.காளி நிற்கும் பீடம் நீளம் அகலம் உடையது.அடைக்கலம் காத்த அய்யனார் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.வலது கை நீண்ட சுதையின் மீது அமைந்து நின்ற கோலத்தில் விளங்கும் இத்திருவுருவாகும்.இவரே இக்கோயிலின் காவல் தெய்வம்.வினை தீர்க்கும் விநாயகர்தீர்த்தம் பிரம்ம குண்டத்தீர்த்தம்.மணிகர்ணி தீர்த்தம் தலபெருமைகள் அம்பாளுக்கு நிழல் தரும் விதமாக பிரம்மாண்டமாக குதிரை வாகனம் இருக்கிறது.மற்ற கோயில்களில் குதிரை மீது இருக்கும் அய்யனார் இங்கு தனியாக சன்னதியில் அமர்ந்திருப்பது தனி சிறப்பு.ஆயிரம் ஆண்டுகள் முந்திய பழமையான கோயில்.மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்டர்களும் நடுங்குவர் என்பது வழக்கம்.இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் மதுரையிலிருந்து 19 கி.மீ.சிவகங்கையிலிருந்து 30 கி.மீ.தங்கும் வசதி கோயில் விடுதிகள்.பொங்கல் மண்டபம் பாலன் மண்டபம்.கட்டணம் ரூ.200 முதல் ரூ.300 வரை.அருகிலுள்ள திருப்புவனத்தில் தனியார் விடுதிகள் உள்ளன.கட்டணம் ரூ.100 முதல் ரூ.200 வரை.போக்குவரத்து வசதி மதுரை சிவகங்கை ஆகிய ஊர்களிலிருந்து மடப்புரத்துக்கு பஸ் வசதி உள்ளது.அருகிலுள்ள ரயில் நிலைம் மதுரை மானாமதுரை.அருகிலுள்ள விமான நிலையங்கள் மதுரை.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி உதவி ஆணையர். செயல் அலுவலர் அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் மடப்புரம்.சிவகங்கை மாவட்டம்.போன் 04575 பாலாபிஷேகம்.தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூஜை.தல வரலாறு ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வௌளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது.அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதி கேசனை எடுத்து மதுரையை வளைத்தார்.இதனால் ஆதிகேசன் வாயில் உள்ள விஷத்தை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளினாள்.இதனால் அடைக்கலம் காத்த அய்யனார் என்று அவர் பெயர் பெற்றார்.மிகப்பழமையான இத்தலத்திலுள்ள காளி பக்தர்களின் எண்ணற்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறாள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment