Sunday, July 6, 2008

மாகாளிக்குடி

அருள் மிகு உஜ்ஜைனி காளியம்மன் கோயில்.மாகாளிக்குடி மூலவர் ஆனந்தசவுபாக்ய சுந்தரி உற்சவர் அழகம்மை விநாயகர் வலம்புரி விநாயகர் தல விருட்சம் மகிழ மரம் சிறப்பு விக்கிரமாதித்தனால் கொண்டுவரப்பட்ட சிலை உள்ள கோயில் ஊர் மாகாளிக்குடி மாவட்டம் திருச்சி.பார்வதிதேவி தனக்கும் சிவனைப்போலவே பூஜைகள் நடக்கவேண்டும் என கேட்டதன் விளைவாக இவ்வாறு நடந்ததாக சொல்வர்.சிறப்பம்சம் சிவபெருமானே உமையாளை இடப்பாகத்தில் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருவார்.இந்த கோயிலில் உஜ்ஜைனி காளியம்மனும் காட்சி தருகிறாள்.விக்கிரமாதித்தன் இந்த சிலையை இக்கோயிலுக்கு தந்ததாக கூறப்படுகிறது.இதை மெய்ப்பிக்கும் வகையில் விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளமும் விக்கிரமாதித்தனின் மதியுக மந்திரியான களுவனும் இங்கு வந்துள்ளனர்.வேதாளத்திற்கும் களுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.வேறு எந்த தலத்திலும் வேதாளத்திற்கு சிலை கிடையாது.இங்கு காஞ்சி மகா பெரியவர் அளித்த ஐம்பொன்னால் ஆன நர்த்தன விநாயகர் சிலையும் பஞ்சலோக விநாயகர் சிலை ஒன்றும் உள்ளது.இங்கிருக்கும் விலங்குத்துறை கருப்பண்ணசாமி மிகவும் முக்கியமானவர்.இவரது சன்னதியில் விலங்கு பூட்டப்பட்டிருக்கும்.இதற்கு கட்டுப்பட்டு கருப்பண்ணசாமி சன்னதியிலேயே இருப்பார்.திருவிழா காலங்களில் மட்டும் இந்த விலங்கு அவிழ்க்கப்படும்.அன்று சுவாமி சுதந்திரமாக பவனி வருவார்.அம்பிகையின் தேரோட்டம் நடக்கும்போது அவளுக்கு பாதுகாப்பாக இவர் வருவதாக ஐதீகம்.தேர் நிலைக்கு வந்தவுடன் மீண்டும் இவரை கட்டிவிடுவார்கள்.அதற்கு அடையாளமாக விலங்கு மீண்டும் பூட்டப்பட்டுவிடும்.பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே மூலஸ்தான விமானத்தின் மீது ஏக கலசம் ஒற்றை கலசம் இருக்கும்.அதுபோல இந்த அம்பாள் கோயிலிலும் ஏககலசம் உள்ளது.விநாயகர் எல்லா கோயில்களிலும் நுழைவுப்பகுதியில் இடது வாயிலிலும் வலதுபுறம் சுப்பிரமணியரும் காட்சிதருவர்.ஆனால் இங்கு வலதுபுறத்தில் வலம்புரி விநாயகரும் இடதுபுறம் ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளது.சிவலிங்கம் ஒன்று சுவரில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.சுற்றுப்பிரகாரத்தில் பின்னை மரத்தில் கட்டிய கிருஷ்ணனின் தவழும் நிலையிலுள்ள சிற்பம் தனி சன்னதியில் உள்ளது.இந்த கிருஷ்ணனுக்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.மற்றொரு சன்னதியில் பூர்ண புஷ்கலையுடன் யானை வாகனம் முன் நிற்க அய்யனார் அருள்பாலிக்கிறார்.காமாட்சி அம்மன் இச்சாசக்தி கிரியாசக்தி ஞானசக்தி ஆகியோர் கோயிலின் சுற்றுப்பிரகார சுவர்களில் சிலை வடிவில் உள்ளனர்.சீனிவாச பெருமாள் லட்சுமி தாயாருடன் எழுந்தருளி உள்ளார்.மதுரையின் காவல் தெய்வமான மதுரைவீரன் இங்கும் பொம்மி வௌ஢ளையம்மாளுடன் அருள்பாலிக்கிறார்.உற்சவர் அழகம்மை நான்கு கைகளுடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.மூன்று கை அம்மன் ஆனந்த சவுபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன.பொதுவாக அம்மனுக்கு இரண்டு.நான்கு எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும்.ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.ஒரு கையில் கபாலமும் மற்றொரு கையில் ஑லமும் இன்னொரு கையில் தீச்சுடரும் ஏந்தியுள்ளார்.அசுரனை வதம் செய்யும் கோலத்தில் இருந்தாலும் முகத்தில் சாந்தம் தவழ்கிறது.கோரப்பல் எதுவும் இல்லை.எனவே இவளை ஆனந்த சவுபாக்கிய சுந்தரி.அசுரனை வதம் செய்தபிறகு ஏற்பட்ட மகிழ்ச்சியின் அடிப்படையில் இப்படி இருப்பதாக ஐதீகம்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் திருச்சி சமயபுரத்திலிருந்து இரண்டு கி.மீ. மினி பஸ்கள் ஆட்டோ க்கள் செல்கின்றன.தங்கும் வசதி குடும்பத்துடன் வரும் பக்தர்கள் அருகிலுள்ள திருச்சி லாட்ஜ்களில் தங்கி இங்கு வந்து தரிசிக்கலாம்.கட்டணம் ரூ.250முதல் 2000 வரை அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி முக்கிய திருவிழாக்கள் நவராத்திரி பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரவிழா 21 நாட்கள் நடக்கிறது.பவுர்ணமி அமாவாசை அஷ்டமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.காலை 7 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

No comments: