Sunday, July 6, 2008
மீனாட்சி சுந்தரேசுவரர்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்.மதுரை 1.மூலவர் சுந்தரேசுவரர் 2.அம்பாள் மீனாட்சி 3.விநாயகர் சித்திவிநாயகர் 4.முருகன் கூடல்குமரர் 5.தல மரம் கடம்பம் வில்வம்.6.தீர்த்தம் பொற்றாமரைகுளம் 7.நடனம் கால்மாறியாடியது 8.விமானம் இந்திர விமானம் 9.பதிகம் தேவாரப்பாடல் 10.மாவட்டம் மதுரை.கல்யாண பாக்கியம் குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது.இங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும் கிடைக்கும்.முக்தியும் கிடைக்கும்.இங்குள்ள சுவாமி பிராகரத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம்.அத்தனை அமைதி வாய்ந்த ஓம் என்ற நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு ஒலிக்கும் அளவுக்கு மிகவும் நிசப்தமான பிரகாரம் அது.இங்கு எப்போதும் பக்தர்கள் தியானத்தில் அமர்ந்திருப்பதை நாம் கோயிலை வலம் வரும்போது காணலாம்.தவம் தியானம் செய்ய ஏற்ற தலம் இது.நேர்த்தி கடன் சுவாமிக்கு பால் எண்ணெய் இளநீர் சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.விர தம் இரு த் தல் தான த ரு மம் செய் த ல் வேள்வி புரி த ல் தபம் செய் த ல் தியா னம் செய் தல் ஆகி யவை இத் த ல த் தி ல்செய் தால் பன் ம ட ங்கு புண் ணி யம் கிடை க் கு ம்.தனை சிற.ப்பு வாய் ந்த சிவ த ல ம்.அம்பாளுக்கு பட்டுப்புடவை சாத்துதல் சுவாமிக்கு உலர்ந்த துணய ஆடை அணிவித்தல் தங்களால் முடிந்த அபிசே ஆராதனைகள் இங்கு இறைவனுக்கும் அம்மனுக்கும் பக்தர்களால் செலுத்தப்படுகிறது.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி தரலாம் கோயிலின் சிறப்பம்சம் பெயர் காரணங்கள் மதுரை சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தௌதத்து.நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை எனப் பெயர் பெற்றது.ஆலவாய்.கடம்பவனம் கடம்பமரம் அடர்ந்த காடாக இருந்ததால் கடம்பவனம் எனப் பெயர் பெற்றதுநான்மாடக்கூடல்.முத்தமிழ் கோயில்.கோயிலுக்குள் உள்ள சிலைகளும் பொற்றாமரைக்குளமும் விமானங்களும் சிற்பத்திறனில் சிறந்து விளங்குகின்றன.மூர்த்திகளின் உருவங்களும் பேசாத பேச்சில் பேசும் சில தூண்களும் சிலைகளும் இசை பாடும்.எனவே முத்தமிழுக்குரிய இயல் இசை நாடகங்களைக் காட்டும் கலைக்கோயிலாகவும் சிலைக்கோயிலாகவும் மதுரைக்கோயில் திகழ்கிறது.பொற்றாமரைக் குளம் இந்திரன் தான் பூஜிப்பதற்குப் பொன் தாமரை மலரைப் பெற்ற இடம்.திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப்பலகை தோன்றிய தடம்.ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி இக்குளத்தில் மீன்களும் நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.தலபெருமைகள் தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவதலம்.மூர்த்தி நாயனார் விபூதி ருத்திராட்சம் சடாமுடி மூன்றையும் துணையாகக் கொண்டு மும்மையால் உலகாண்ட நகரம்.இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.சிவ பெருமான் 64 திருவிளையாடல்களை நடத்திக் காட்டிய தலம்.ஈசனே புலவராக வந்து தமிழை ஆராய்ந்த இடம்.நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்ட நக்கீரர் வாழ்ந்த இடம்.முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளை தமிழ் அரங்கேற்றிய தலம்.பாணபத்திரருக்கு பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம்.இராமர் லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம்.திருஞானசம்பந்தர் அனல் வாதம் புனல் வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமான் வாழும் இடம் எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம் பல புராண இலக்கியங்களையுடையது.கலையழகும் சிலைவனப்பும் இசையமைப்பும்ஆயிரக்கணக்கான அழகிய சுதைகளையும் கொண்ட வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்டது.பொது தகவல்கள் தங்கும் வசதி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தேவஸ்தானம் சார்பாக நடத்தப்படும் விடுதிலேயே தங்கிக் கொள்ளலாம்.பிர்லா தேவஸ்தான விடுதி.இரட்டை படுக்கை வசதி ரூ.1003 பேர் படுக்கை வசதி ரூ.125தவிர மதுரை மாநகரில் கோயிலுக்கு அருகிலேயே ஏராளமான தனியார் லாட்ஜ்கள் உள்ளன.அவற்றின் கட்டணம் ரூ.200 முதல் ரூ.800 வரைபோக்குவரத்து வசதி பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ.ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ.விமான நிலையத்திலிந்து.25 கி.மீ. முக்கிய திருவிழாக்கள் சித்திரைத் திருவிழா சித்திரை மாதம்.நவராத்திரி திருவிழா.புரட்டாசி மாதம்ஆவணி மூல திருவிழா ஆவணி மாதம்தெப்பத் திருவிழா தை மாதம்மேலும் திருவிழா நகராம் மதுரையிலுள்ள இக்கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்த வண்ணமாக இருக்கும்.வருடத்தின் அத்தனை நாட்களும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்த வண்ணமே இருக்கும்.உலகப்புகழ்பெற்ற கோயில் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்த வண்ணம் இருக்கும்.இவை தவிர பொங்கல் தீபாவளி தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்கள் விநாயகர் சதுர்த்தி ஆகிய முக்கிய விசேச தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்குமு.இறைவனுக்கு இத்தலத்து சிறப்பு பெயர்.சொக்கநாதர்அம்பாளுக்கு இத்தலத்து சிறப்பு பெயர்.திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் தேவாரம்மாணிக்கவாசகர் திருவாசகம்அருணகிரிநாதர் திருப்புகழ்பாணபத்திரர் திருமுகப்பாசுரம்பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம்மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனார்மீனாட்சி பிள்ளைத்தமிழ் குமரகுருபர சுவாமிகள்உள்ளிட்ட கணக்கிலடங்கா புராண இதிகாச இலக்கியங்கள் தல வரலாறு மலயத்துவச பாண்டிய மன்னனுக்கு மூன்று தனங்களையுடைய பெண் குழந்தையாக உமா தேவி பிறந்தாள்.இக் குழந்தைக்கு கணவன் வரும் போது ஒரு தனம் மறையும் என்று அசரீரி கேட்டது.பின்பு தடாதகை என்ற பெயரோடு வளர்ந்து பெரியவளானாள்.மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள்.மணப்பருவத்தை அடைந்த காலத்தில் நால்வகை படைகளுடன் புறப்பட்டு சென்று பல ராஜ்ஜியங்களையும் வென்றாள்.இறுதியில் திருக்கைலாயத்தை அடைந்து சிவபெருமானையும் கண்டாள்.அவரைக் கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது.இதையடுத்து தன் கணவன் சிவபெருமான்தான் என்பதை தடாதகை கண்டுகொண்டாள்.பின்பு திருமால் பிரம்மா புடை சூழ சிவபெருமானாகிய சொக்கருக்கும் தடாதகையம்பாளாகிய மீனாட்சிக்கும் திருமணம் சிறப்புற நடந்தது.இறைவனும் மதுரையம்பதியை ஆளும் அன்னை மீனாட்சியாக இருக்க அருள் புரிந்தார்.சிவபெருமானின் ஏராளமான திருவிளையாடல்கள் நிகழந்த புண்ணியம் வாய்ந்த தலம் இது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment