Sunday, July 6, 2008
மாங்காடு
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் மாங்காடு 1.அம்மன் காமாட்சி 2.பிரதானம் அர்த்தமேரு 3.சிறப்பு ராஜயந்திரம் 4.அர்ச்சனை குங்குமம் 5.பிரதிஷ்டை.ஆதிசங்கரர் 6.பெருமை தவ தலம் 7.தலமரம் மாமரம் 8.ஊர் மாங்காடு 9.புராணப்பெயர்.சூதவனம் 10.மாவட்டம்.அதாவது ஒரு மண்டலம் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது.ஆண்களுக்கும் இது பொருந்தும்.பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும்.பல்லாயிரக்கணக்கோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர்.உத்தியோக உயர்வு உடல் சார்ந்த குறைகள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.ஹை லைட்ஸ் ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்கிரம் ஆதிசங்கரர்.இத் திருக்கோயிலில் ஸ்ரீ சக்ரத்திற்கே முக்கிய பிராதானம்.மூலிகைகளால் ஆனதால் அபிசேகம் கிடையாது.குங்கும அர்ச்சனை விசேசமானது.இந்த அர்த்தமேரு ராஜ யந்திரமாகும்.இதற்கு கூர்மம் ஆமை.இந்தர அர்த்தமேரு மிகப்பெரியது.இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள்.இது மூலிகைகளால் செய்யப்பட்டிருப்பதால் இதற்கு அடிசேகம் செய்வதில்லை.புனுகு சந்தனம் இவைகளே சாத்தப்படுகின்றன.நேர்த்தி கடன் அம்மனுக்கு ஸ்ரீஅர்த்தமேருஸ்ரீசக்கிரம் புடவை சாத்துதல் பால் அபிசேகம்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் சென்னையிலிருந்து 20 கி.மீ.தாம்பரத்திலிருந்து 22 கி.மீதங்கும் வசதி ரூ.200 முதல் 800 வரைபோக்குவரத்து வசதி பஸ்வசதி தாம்பரம் சென்னை.அருகில் உள்ள விமான நிலையம் சென்னை கோயிலின் சிறப்பம்சம் அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்து இடம் இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார் இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது.அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும் அர்ச்சனை ஸ்ரீ சக்கிரத்துக்கும் செய்யப்படுகிறது.மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது.இதற்கு இடதுபுறம் தபஸ் காமாட்சி சன்னிதி உள்ளது.ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது.2500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான தலம் முக்கிய திருவிழாக்கள் சித்தரைத் திருவிழா 10 நாட்கள் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர்.ஆங்கில புத்தாண்டு தினங்கள் தீபாவளி பொங்கல் நவராத்திரி மாசி மகம் மகாசிவராத்திரி ஆனித்திருஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விசேச நாட்கள்என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நாட்களில் இக்கோயில் பக்தர்கள் வௌளமாக காட்சியளிப்பது சிறப்பு தல வரலாறு.அம்மையும் அவ்வாறே சென்று காஞ்சியிலே மணலால் லிங்க வடிவில் பூஜித்து பின்னர் மணந்து கொள்கிறார்.இதனால் தீயின் கொடுமை மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர் என வரலாறு கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment