Sunday, July 6, 2008
மன்னார்குடி
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்.பாமணி மன்னார்குடி.மூலவர் நாகநாதர் அம்மன் அமிர்தநாயகி தலவிநாயகர் மூலவிநாயகர் தலவிருட்சம் மாமரம் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் நாகதீர்த்தம் பசுதீர்த்தம் தேனு தீர்த்தம் ருத்ரதீர்த்தம் பதிகம் அப்பர் சம்பந்தர் சுந்தரர் பழமை 1500 ஆண்டு புராண பெயர்.திருப்பாதாளேச்சரம் ஊர் பாமணி மாவட்டம் திருவாரூர் தல வரலாறு ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டது.ஆதிசேஷன் பலம் பொருந்திய தன் தலையால் மேருமலையை அழுத்தி பிடித்து கொண்டு உடலால் மலையை சுற்றிக்கொண்டது.எனவே வாயு பகவான் மலையை அசைக்க முடியாமல் தோற்றது.இந்த கோபத்தால் வாயு காற்றை அடக்க சகல ஜீவராசிகளும் காற்றின்றி பரிதவித்தது.தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க போட்டி மீண்டும் நடந்தது.தேவர்கள் ஆதிசேஷனின் வலிமையை சற்று குறைக்க 3 தலைகளை மட்டும் தளர்த்தியது.வாயு மூன்று சிகரங்களை பெயர்த்தது.தான் தோற்றதால்.மனவேதனை அடைந்த ஆதிசேஷன் மனநிம்மதிக்காக சிவலிங்கம் உருவாக்கி வழிபட்டது.பாம்பு உருவாக்கிய லிங்கம் என்பதால்.அது புற்றுவடிவாக அமைந்தது.தல சிறப்பு தேவாரப்பாடல்பெற்ற காவிரித் தென்கரையில் இத்தலம் 104வது தலம்.ஆதிசேஷன் நாகநாதரை பூஜிக்க பாதாளத்திலிருந்து வந்ததால் இத்தலத்திற்கு பாதாளேச்சரம் என்ற பெயரும் உண்டு.மனிதமுகம் பாம்பு உடலுடன் ஆதிசேஷனுக்கு தனி சன்னதி உள்ளது.அனந்தன் வாசுகி தக்ஷகன் கார்கோடகன் சங்கபாலன் குலிகன் பத்மன் மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும்.ராகு கேதுவிற்கும் தலைவன் ஆதிசேஷன்.வேறு எங்கும் காணமுடியாத இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோஷம் ராகு கேது தோஷம்.ஆனால் இங்கு ஆதிசேஷன் புற்றுமண்ணால் அமைத்த நாகநாதசுவாமிக்கு அபிஷேகம் உண்டு என்பது தனி சிறப்பாகும்.இங்கு பைரவரும் சனிபகவானும் சேர்ந்து அருள்பாலிப்பதால் இது சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது.குருதோஷ நிவர்த்தி ஸ்தலம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்ம ராசியில் குருபகவான் பிரவேசிக்கும் போது மகாமகம் வரும்.சிம்ம தெட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால்.இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள் கிடைக்கும்.ஒருமுறை தெட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள்.அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர்.கோபம் கொண்ட முனிவர்கள் இவர்களுக்கு சாபம் கொடுத்தனர்.இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது.இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும் சிம்ம தெட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர்.சிம்மம் கும்பம் கடகம் தனுசு மேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களும்.ருவிழா வைகாசி மாதம் பிரமோற்சவம்.தைப்பூசம் தீர்த்தவாரி.கந்தசஷ்டி.திருவாதிரை மகாசிவராத்திரி.திறக்கும் நேரம் காலை 6 12மணி மாலை 4 8.30 மணி.இருப்பிடம் மன்னார்குடியிலிருந்து வடக்கே 2 கி.மீ. தொலைவிலுள்ள பாமணிக்கு பஸ் வசதி உள்ளது.அர்ச்சகர் அனந்த குருக்கள் மொபைல் 93606 85073அருகிலுள்ள ரயில் நிலையம் மன்னார்குடி அருகிலுள்ள விமான நிலையம் சென்னை திருச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment