Sunday, July 6, 2008
நாமக்கல்
அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக் கோயில்.நாமக்கல் சுவாமி ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறபெயர்.பக்தஆஞ்சநேயர் பிரம்மாண்டம் சிலை உயரம் 22 அடி பீடம் 4 அடி கோபுரம் இல்லை ஊர் நாமக்கல் புராணபெயர்.ஸ்ரீசைலஷேத்ரம் பிறபெயர்.நாமகிரி மாவட்டம் பிரார்த்தனை இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி.சரீரபலம் கீர்த்தி அஞ்சாமை பயமின்மை நோயின்மை தளர்ச்சி இன்மை வாக்குசாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும்.நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன.தவிர கடன் தொல்லைகள் விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன.நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகின்றன.நவகிரக தோஷம் நீங்குதல்.நேர்த்தி கடன் ஆஞ்சநேயருக்கு வெத்தலை மாலை சாத்துதல் எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல் துளசி மாலை சாத்துதல் வடைமாலை சாத்துதல் பூமாலை சாத்துதல் ஆகியவை நேர்த்திகடனாக செலுத்தப்படுகின்றன.தவிர வெண்ணெய் காப்பு போன்ற சிற்ப்பு அபிசேகங்களும் இங்கு செய்யப்படுவது வழக்கம்.வடைமாலை சாத்துவது ஏன் முன்பு ஒருசமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும் சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள்.கோயிலின் சிறப்பம்சம் சிலை அமைப்பு மிக பிரம்மாண்டமாக காற்று மழை வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வௌதயில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்கோபுரம் இல்லாதது ஏன் லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே எதிரில் உள்ள ஆலயம்.தலபெருமைகள் இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது.பீடத்திலிருந்து 22 அடியும்.பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது.இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம்.திறந்த வௌதயில் கோபுரம் இல்லாமல் இருக்கும் சன்னதி இது.தமிழகம் முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோயில்.இச்சா சக்தி.நாமகிரி அம்மன் கிரியாசக்தி நரசிம்மர் ஞானசக்தி ஆஞ்சநேயர் ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோயில் இது.இங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு நேரெதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ.தூரம் மட்டுமே தங்கும் வசதி.கட்டணம் ரூ.200 முதல் ரூ.500 வரை.போக்குவரத்து வசதி.அருகிலுள்ள ரயில் நிலையம் கரூர் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி முக்கிய திருவிழாக்கள் மார்கழி மாதம் அம்மாவாசை அனுமத் ஜெயந்தி அன்று மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.வாரத்தின் ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பது இத்தின் சிறப்பு.தீபாவளி பொங்கல் கிருஷ்ணஜெயந்தி வைகுண்ட ஏகாதேசி தமிழ்.தல வரலாறு நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் சாதாரணமாக ஒரு துளை உள்ள சாளக்கிராமம் கிடைக்கும்.ஆஞ்சநேயருக்கு இந்த நதியில் குளிக்கும் போது 2 துளையுள்ள சாளக்கிராமம் கிடைக்கிறது.நீண்ட நேரம் ஆனதால் தாயாரும் அதை கீழே வைத்து விடுகிறார்.ஆஞ்சநேயர் ஜெபம் முடித்து விட்டு வந்து பார்க்கையில் சாளக்கிராமம் பெரிய மலையாக மாறிவிட்டிருந்தது.அதை அசைக்ககூட முடியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment