Sunday, July 6, 2008
நாகப்பட்டினம்
அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்.திருவெண்காடு நாகப்பட்டினம் மாவட்டம் மூலவர் 1. சுவேதாரண்யேஸ்வரர் 2.நடராஜர் 3.அகோர மூர்த்தி அம்மன் 1.பிரம்ம வித்யாம்பாள் 2.சுவேதா மகாகாளி.3.மகா துர்கை தல விருட்சம் 1. வடவால் 2. கொன்றை.3. வில்வம் தீர்த்தம் 1.அக்னி 2.சூரியன் 3. சந்திர தீர்த்தங்கள் பதிகம் அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்க வாசகர் ஊர் திருவெண்காடு தலபெருமைகள் காசிக்கு சமமான தலங்கள் ஆறு.அதில் ஒன்று திருவெண்காடு.தீர்த்தம் தலவிருட்சம் எல்லாமே மூன்று.நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் என நால்வராலும் பாடல் பெற்றது.சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.இவர் நவதாண்டவம் புரிந்தார்.இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு.சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு.இந்திரன் ஐராவதம் விஷ்ணு சூரியன் சந்திரன் அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள்.பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும் மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.புதனுக்கு தனி சன்னதி நவக்கிரகங்களில் புதன் பகவான் கல்வி அறிவு பேச்சுத்திறமை இசை ஜோதிடம் கணிதம் சிற்பம் மருத்துவம் மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர்.இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது.புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும் சந்திர புஷ்கரணி தீர்த்தமும் புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும்.இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும் திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர்.பிள்ளையிடுக்கி அம்மன் திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும் மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின.எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து அம்மா என்றழைத்தார்.இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் துணக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார்.சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது.பொது தகவல்கள் பூஜை காலை 6 முதல் 12 மணிவரையிலும் மாலை 5.30 முதல் இரவு 9.30 மணிவரையிலும் இறைவனை தரிசிக்கலாம்.இருப்பிடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது.சீர்காழிக்கு தென்கிழக்கே 10 கி.மீ. தொலைவில் பூம்புகார் ரோட்டில் திருவெண்காடு அமைந்துள்ளது.சீர்காழியிலிருந்து அடிக்கடி பஸ்வசதி உண்டு.அருகிலுள்ள ரயில் நிலையம் சீர்காழிஅருகிலுள்ள விமான நிலையம் திருச்சி சென்னை முக்கிய திருவிழாக்கள் திருவிழா மாதந்தோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது.இதில் மாசி புனர்பூச நட்சத்திரத்தில் கொடியேற்றி பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.தல வரலாறு முன்னொரு காலத்தில் மருத்துவன் என்ற அசுரன் பிரம்மனிடம் பெற்ற வரத்தால் தேவர்களை துன்புறுத்தினான்.பாதிக்கப்பட்ட தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.தேவர்களை திருவெண்காட்டில் வேறு உருவத்தில் வாழும்படி சிவன் அறிவுறுத்தினார்.அசுரனின் தொல்லை நீங்கவில்லை.சிவன் தனது வாகனமான நந்தியை அனுப்பி அசுரனை தோற்கடித்தார்.நந்தியின் உடலில் ஏற்பட்ட காயத்தை இன்றும் காணலாம்.இதனால் கோபம் கொண்ட சிவன் தனது கோபத்தையே உருவமாக்கி அகோர மூர்த்தியானார்.அகோர மூர்த்தியை கண்டவுடனேயே அசுரன் அவரது காலடியில் சரணடைந்து தன்னை மன்னிக்கும் படி வேண்டினான்.அத்துடன் அகோரமூர்த்தியை வணங்குபவர்களுக்கு எதிரிகளே இருக்க கூடாது என்றும் வேண்டிக்கொண்டான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment