Tuesday, July 8, 2008

பெரு

பெரு.1 கெச்சுவா அய்மாரா மற்றும் பல பழங்குடி மக்கள் மொழிகள் பல இடங்களில் பேசப்படுகின்றன.பெரு எசுப்பானியம் Perஸ கெச்சுவா பிரூவ் Piruw அய்மாரா பிரூவ் Piruw நாடானது முறையாக பெரு குடியரசு என்று அழைக்கப்படுகின்றது.எசுப்பானியம் Repஸblica del Perஸ helpஷinfo IPA [re pu.லli.ka del pe ~u].பெரு நாடு தென் அமெரிக்காவின் வடபகுதியில் மேற்கே அமைதுள்ள பெரிய நாடு.இதன் வடக்கில் ஈக்வெடார் கொலம்பியா நாடுகளும் கிழக்கில் பிரேசில் நாடும் தெற்கில் சிலி மற்றும் பொலிவியா நாடுகளும் உள்ளன.தென் கிழக்கே பசிபிக் பெருங்கடல் உள்ளது.பெருவில் உள்ளவர்களில் மிகப்பெரும்பாலானோர் எசுப்பானிய மொழி பேசுகிறார்கள்.இநாட்டில் உலகிலேயே மிகப்பெரும் ஆறாகிய அமேசான் ஆறு பாய்கின்றது.அது மட்டுமல்லாமல்.16 ஆவது நூற்றாண்டில் கி.பி எசுப்பானியப் பேரரசு இன்க்கா பேரரசை வென்று ஆட்சி செலுத்தத்தொடங்கியது.1821ல் இன்றைய பெரு நாடு எசுப்பானிய பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக பெரு நாடு பலவிதமான அரசியல் மற்றும் பொருளியல் குழப்பங்களுக்கும் உள்ளாகி ஏற்றத்தாழ்வுகள் அடைந்து இன்று முனைந்து முன்னேறி வரும் ஒரு நாடு ஆகும்.இந்நாட்டின் நில வானிலைச் சூழல் அமைப்புகள் மிகப் பல வகையின.உலகில் உள்ள 32 வகையான வானிலைச் சூழல் வகைகளில் 28 வகையை இந்நாட்டில் காணலாம்[1].நில உலகில் உள்ள தனித்து அறியத்தக்க 117 வகையான நில உயிரின செடிகொடியின சூழகங்களில் 84 வகையான பகுதிகள் இநாட்டில் உள்ளன[2].இந்நாட்டில் 60% பரப்பளவு காடுகள் சூழ்ந்துள்ளன.என்றாலும் அதில் 6% மக்கள்தொகையினரே வாழ்கின்றனர்.இந்நாடு வளரும் நாடுகளில் ஒன்றாகும்.இந்நாட்டின் பொருள்வளம் கூட்டும் தொழில்கள் வேளாண்மையும் மீன்பிடித்தலும் நிலத்தடி கனிவளம் எடுத்தலும் துணிமணிகள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்தலும் ஆகும்.இந்நாட்டின் 28 மில்லியன் மக்கள் பல இனத்தவர்களாகவும் பன்முக பண்பாடுகள் கொண்டவர்களாகவும் உள்ளனர்.எசுப்பானிய மொழி பேசுவோர்கள்தாம் பெரும்பான்மையாக இருந்தபோதிலும் இப்பகுதிகளின் இந்தியர்கள் என்று சொல்லப்படும் பழங்குடிகளின் மொழிகளாகிய கெச்சுவா மொழியும் மலைப்பகுதிகளில் அய்மாரா மொழியும் தெற்கே வேறுபல மொழிகளும் அமேசான் காடுகளில் பேசுகிறார்கள்.பல்லின மக்க்கள் கூடி வாழ்வதால் பல தனித்தன்மை வாய்ந்த உணவு வகைகளும் இசை இலக்கியம் நடனம் போன்ற கலை வடிவங்களும் சிறப்பாக உள்ளன.

No comments: