Tuesday, July 8, 2008

பெய்ஜிங்கின் வான்சாவ் கோயில்

பெய்ஜிங்கின் வான்சாவ் கோயில்.பெய்ஜிங் மாநகரத்தின் மேற்குபகுதியில் 430 ஆண்டுக்கால வரலாறுடைய கோயில் ஒன்று உள்ளது.வான்சாவ் கோயில்.இக்கோயில் சீனாவின் மிங் மற்றும் ச்சிங் வம்சக்காலங்களில் அரசக் குடும்பங்களின் கொண்டாட்ட விழாக்கள் நடைபெறும் இடமாகவும் தற்காலிக அரச மாளிகையாகவும் இருந்தது.இக்கோயில் கி.பி.1577ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டது.பின்னர் சில தலைமுறை பேரரசர்கள் காலங்களில் பலப்பகுதிகள் திருத்தியமைக்கப்பட்டதன் மூலம் இறுதியில் கோயில் தற்காலிக அரச மாளிகை பூங்கா ஆகியவற்றைக் கொண்ட மிக பெரிய அளவிலான அரசக்குடும்பக் கோயிலாக.அறிமுகப்படுத்துகையில் அரசக்குடும்பங்களுக்கான சிறப்புக் கோயிலான வான்சாவ் கோயில்.இந்தப் பெரிய மாளிகையிலிருந்து கோயிலின் பிற்பகுதிக்குச் சென்றால் கோயில் கட்டியமைக்கப்பட்ட போது இருந்த மூன்று பெரிய செயற்கை மலைகளைக் காணலாம்.

No comments: