Sunday, July 6, 2008

பிள்ளையார்பட்டி

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்.பிள்ளையார்பட்டி மூலவர் கற்பகவிநாயகர்
துதிக்கை வலம்சுழி சிறப்பு குடவரை ஈசன்
திருவீசர் அம்பாள் சிவகாமி தலமரம்
மருதமரம்.தீர்த்தம் ஊருணி ஊர் பிள்ளையார்பட்டி.புராணபெயர் மருதம்பூர் மாவட்டம் கேள்வி
ஞானம் திருமணம் குழந்தை பாக்கியம்
குடும்ப நலம் உடல் பலம் உட்பட சகல
பலன்களும் கிடைக்கும்.புதிய கணக்கு தொடங்கல் வியாபார
விருத்தி ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள்
அதிக அளவில் வருகின்றனர்.நேர்த்தி கடன் சதுர்த்தி விரதம் முக்குறுணி
மோதகம் கொழுக்கட்டை செய்து
வழிபடல்கணபதி ஹோமம் தொழில்
அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில்
கணபதி ஹோமம் செய்வது மிகவும்
விசேஷம்.அருகம்புல் மாலை அணிவித்து வழிபடல்
கோயிலின் சிறப்பம்சம் பாஸ்போர்ட்
விநாயகர் அமர்ந்த நிலையில் நவகிரகங்கள்
விநாயகரிடம் நவகிரகங்களின் எந்த
செயல்பாடும் செல்லாது.எனவேதான் பிள்ளையார்பட்டி கோயிலில்
நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.இங்கு வேண்டிக்கொண்டால் நவகிரகங்களின்
பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.தலபெருமைகள் இங்கு இருப்பவர் வலம் சுழி
விநாயகர்.இது மிகவும் விசேசமானது.6 அடி உயரம் கொண்ட கம்பீரமான மூலவர்
குடவரைக்குள் இருக்கிறது.இரண்டு கைகள் கொண்ட விநாயகர் மூலவர்
வடக்கு முகமாக இருக்கிறார்.குடவரைக் கோயில்.தமிழக்த்திலேயே உண்டியல் இல்லாத
கோயில் இதுதான்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து
தூரம் சிவகங்கை 44 கி.மீ.காரைக்குடி.16 கி.மீ.மதுரை 74 கி.மீ.திருப்பத்தூர் 9
கி.மீ.தங்கும் வசதி குடும்பத்தோடு வரும்
பக்தர்கள் கோயில் விடுதிகளிலோ அல்லது
திருப்பத்தூர் காரைக்குடி நகரில் உள்ள
தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு
கோயிலுக்கு சென்று வரலாம்.கோயில் விடுதிகள்.பி.கே.என்.கே.விடுதி.திருப்பத்தூர் காரைக்குடி ஆகிய ஊர்களில்
லாட்ஜ்கள் கட்டணம் ரூ.200 முதல் ரூ.600
வரை.போக்குவரத்து வசதி சிவகங்கை
திருப்பத்தூர் காரைக்குடி ஆகிய
ஊர்களிலிருந்து பிள்ளையார் பட்டிக்கு
பேருந்து வசதி உள்ளது.அருகிலுள்ள ரயில் நிலைம் காரைக்குடி.அருகிலுள்ள விமான நிலையங்கள் மதுரை
திருச்சி.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
நிர்வாக அறங்காவலர் அருள்மிகு கற்பக
விநாயகர் திருக்கோயில்.பிள்ளையார்பட்டி.போன் 04577 264240 264241. முக்கிய
திருவிழாக்கள் சதுர்த்தி திருவிழா ஆவணி
மாதம் 10 நாட்கள்.ஒன்பது நாட்கள் முன்பாக காப்புக்கட்டி
கொடிஏற்றம் செய்து திருநாள் தொடங்கும்.சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான்
வௌ஢ளி மூஷிக வாகனத்தில்
எழுந்தருளுவது விசேசம்.மிக விமரிசையாக நடக்கும் இத்திருவிழாவில்
லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்
திருக்கார்த்திகை மார்கழி திருவாதிரை
நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப்
பெருமான் திருவீதி பவனி வருவார்.இவை தவிர தமிழ் ஆங்கில புத்தாண்டு
தினங்கள் தீபாவளி பொங்கல் போன்ற
விசேசநாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கூடுவர்.இந்த பழி விலக்க சிவபெருமானை நோக்கி
தவம் இருக்கிறார் விநாயகப் பெருமான்.சிவபெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து
பூஜித்தற்கான ஐதீகத்தைக் கொண்டது
இக்கோயில்.மிகப்பழமையான இத்திருக்கோயில் ஒரு
குடவரைக் கோயில் ஆகும்.புதிய கணக்கு தொடங்கல் வியாபாரம்
ஆரம்பித்தல் போன்ற காரியங்களுக்கு
இத்திருக்கோயில் மிக சிறப்பு வாய்ந்தது.

No comments: