Sunday, July 6, 2008
சாமண்டி
அருள்மிகு சாமண்டி அம்மன் கோயில்.பிரார்த்தனை குழந்தை இல்லாதவர்களும் திருமணம் ஆகாதவர்களும் சாமாண்டி அம்மன் கோயிலுக்கு வந்து தொட்டில் மற்றும் தாலியை மரத்தில் கட்டி வழிபடுகின்றனர்.இவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு நிவர்த்தி ஆவதாக கூறப்படுகிறது.தலபெருமைகள் நான்கு பகுதிகளிலும் வயல்கள் சூழ்ந்து நடுவில் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது சாமாண்டி அம்மன் கோயில்.தேனி மாவட்டதில் கம்பம் நகரில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது இந்தக் கோயில்.1555ம் ஆண்டு திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும்.கோயிலின் சிறப்பம்சம் தமிழ்நாட்டிலேயே தெற்கு நோக்கி உள்ள ஒரே கோயில் இதுவாகும்.பெண்கள் வளையல் சேலை எலுமிச்சை வாங்கி அம்மனுக்கு படை சாற்றுவார்கள்.அங்குள்ள புற்றில் முட்டை பால் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.இக்கோயிலுக்கு கூடலுணர் கம்பம் உத்தமபாளையம் சின்னமனுணர் தேனி திண்டுக்கல் திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.முக்கிய திருவிழாக்கள் தல வரலாறு கோயில் உருவான வரலாறு சாமாண்டிபுரத்தில் வளையல்காரன் வளையல்களை தோழில் சுமந்து விற்பனை செய்தற்காக நடந்து சென்ற போது அருகில் பாம்பு புற்றில் இருந்து ஒரு பெண்ணின் கை மட்டும் நீண்டு வந்துள்ளது.வளையல்காரரிடம் எனது கைக்கு வளையல் போட வேண்டும் என புற்றிலிருந்து வந்த கை கூறி உள்ளது.இதைப் பார்த்து பயந்து அலறியடித்து ஓடிய வளையல்காரன் ஊர் மக்களிடம் கூறி உள்ளான்.ஊர் மக்கள் அங்கு வந்து பார்த்து இது சாமுண்டீஸ்வரியின் மகிமை என்றும்.புற்றை பீடமாக வைத்து கோயில் கட்டி வணங்கினால் மக்களுக்கு நல்லது எனவும் கோரி உள்ளனர்.அப்போது முதல் அந்த புற்றை சாமாண்டி அம்மனாக பாவித்து வணங்கி வந்தனர்.கம்பத்தில் அமைந்துள்ள கம்பராய பெருமாள் கோயிலுக்கும்.சாமாண்டி அம்மன் கோயிலுக்கும் சிறப்பு அம்சம் ஒன்று உள்ளது.சுவாமி கம்பராய பெருமாளுக்கு சாமாண்டி அம்மன் தங்கை முறை என்று பாவித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment