Tuesday, July 8, 2008
ரஷ்யா
ரஷ்யா என்பது உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடு.இந்நாட்டின் முழுப்பெயர் ரஷ்யக் கூட்டமைப்பு என்பதாகும்.தமிழில் உருசியா என்றும்.ருஷ்யா என்றும் குறிக்கப்பட்டுள்ன.தங்கள் மொழியிலும் எழுத்திலும் அவர்கள் 0O $545@0F8O என்று அழைக்கிறார்கள்.இதன் ஆங்கில ஒலிபெயர்ப்பு Rossiyskaya Federatsiya அல்லது Rossijskaja Federacija என்பதாகும்.தமிழ் ஒலிபெயர்ப்பில் ருஸ்ஸியக்கய வெதராத்சியா.அல்லது சுருக்கமாக ரஷ்யா.ரஷ்ய மொழியில் AA8O ஆங்கில ஒலிபெயர்ப்பு Rossiya அல்லது Rossija.ஆசியா மற்றும் ஐரோப்பாவில் பெருநிலப்பரப்பில் மிகவிரியும் ஒரு பெரும் நாடாகும் இது.இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17 075 200 சதுரக் கிலோமீட்டர்.பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியலைப் பார்த்தால் ரஷ்யாவின் பரப்பளவு அடுத்த பெரிய நாடான கனடாவின் நிலப்பரப்பைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும்.ரஷ்யா மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது.ஏறத்தாழ 143 145 மில்லியன் மக்கள் 2002ன் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 145 513 037 இந்நாட்டில் வாழ்கிறார்கள்.ரஷ்யா பின்வரும் நாடுகளுடன் தன் நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது வடமேற்கிலிருந்து தென்கிழக்கு முகமாக நார்வே பின்லாந்து எஸ்டநூனியா லத்வியா லித்துவானியா போலந்து பெலாரஸ் உக்ரைன் ஜார்ஜியா அசர்பைஜான் கசகஸ்தான் சீனா மங்கோலியா மற்றும் வட கொரியா.மக்கள் பரம்பல்.ரஷ்யாவின் மக்கள் தொகை 143 மில்லியன் ஆகும்.பாரிய பரப்பளவு கொண்ட நாடு என்பதால் மக்கள் அடர்த்தி 8.3.கிமீ2 ஆகும்.பொதுவாக 78% மக்கள் ஆங்காங்கே இருக்கும் பெரிய நகரங்களிலேயே செறிவாக வாழ்கின்றார்கள்.ரஷ்யாவின் 80% மக்கள் ரஷ்யா இன மக்கள் ஆவார்கள்.இவர்களை தவிர பல சிறுபான்மை இன மக்கள் அவர்களுக்குரிய பாரம்பரிய பிரதேசங்களில் வாழ்கின்றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment