Monday, July 7, 2008
சமயபுரம்
அருள் மிகு மாரியம்மன் திருக்கோயில் சமயபுரம் அம்மன் ஸ்ரீமாரியம்மன் பிறபெயர்.மகமாயி பிரபலம் உலகளவில் அபிசேகம் பூச்சொரிதல் தலமரம் வேம்பு காவல்தெய்வம் கருப்பண்ணசாமி ஊர் சமயபுரம் புராணபெயர்.கண்ணபுரம் பிறபெயர்.கண்ணனூர் மாவட்டம் பிரார்த்தனை இத்தலத்து அம்மனிடம் என்ன வேண்டுதல் என்றாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள்.குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது.உடல் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள் கண்பார்வை குறையுள்ளவர்கள் இத்தலத்தில் வணங்கி குணமாகின்றனர் வியாபார விருத்தி.விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.நேர்த்தி கடன் மொட்டை அடித்தல் அர்ச்சனை அபிஷேகம் காது குத்தல் தங்கரதம் இழுத்தல் அலகு குத்தல் தீச்சட்டி எடுத்தல் அங்கபிரதட்சணம் கரும்பு தொட்டில் பிரார்த்தனை காணிக்கை தைப் பூசம் 11 நாள் திருவிழா மாவிளக்கு எடுத்தல் நெல் காணிக்கை ஆடு மாடு கோழி தானியங்கள் செலுத்தல் இவை தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்.இந்த விரத நாட்கள் மொத்தம்28.இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் கிடையாது.இந்த விரத நாட்களில் துள்ளு மாவு திராட்சை ஆரஞ்சு இளநீர்ல பானகம் போன்றவை மட்டுமே அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது.இந்த விரதம் இனிதே நிறைவேற மூலஸ்தான அம்மனுக்கு பூக்களால் அபிசேகம் செய்வதே பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது.தலபெருமைகள் தமிழகத்திலேயே பக்தர்கள் வருகை அதிகமாகவும் அறநிலையத் துறைக்கு அதிகமான வருமானமும் பெற்றுத் தரும் சில கோயில்களில் இது முக்கியமான கோயில்.தாலி வரம் வேண்டி தாலி தங்கம் இங்கு மிக அதிக அளவில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது.இத்தலத்தில் வேண்டிகொண்டால் சர்ஜரி இல்லாமல் பல நோய்கள் குணமாகும் அதிசயம் நடைபெற்று வருகிறது.கர்நாடக பக்தர்கள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் என்பது சிறப்பம்சம்.காரணம் இத்தலத்து மாரியம்மன் கர்நாடகத்து சாமுண்டீஸ்வரி சாயலில் இருப்பதால் ஸ்ரீ ராமன் தகப்பனார் தசரத சக்ரவர்த்தி இத்தலத்தில் அம்மனை வழிபட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.பொது தகவல்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண் 0431 2670460முக்கிய ஊர்களிலிருந்து தூரம் திருச்சிலிருந்து 15 கி.மீ. தங்கும் வசதி 1.தேவஸ்தான வழிபடுவோர் தங்கும் விடுதி.ரூ.100 2.கோயில் திருமண மண்டபம் டார்மண்டரி ரூ.50 தவிர திருச்சி நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.150 முதல் ரூ.800 வரை.போக்குவரத்து வசதி சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் சமயபுரம் இருப்பதால் பஸ் நிறைய வசதி உள்ளது.திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து நகரப்பேருந்து வசதி நிறைய உண்டு.அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி.அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் சித்திரைத்தேர் திருவிழா.அன்றைய தினம் மட்டும் 7 லட்சம் பக்தர்கள் திரள்வர்.பூச்சொரிதல் மாசிக் கடைசி ஞாயிறு 3 லட்சம் பக்தர்கள் திரள்வர்.பஞ்சப்பிரகாரம் வைகாசி 1 ந் தேதி 1 லட்சம் பக்தர்கள் திரள்வர்.தைப் பூசம் 11 நாள் திருவிழா.தமிழ் ஆங்கில வருடபிறப்பு விஜய தசமி தீபாவளி பொங்கல் ஆகிய விசேச நாட்களில் அம்மன் தங்கரதத்தில் வரும் போது ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பர்.தினந்தோறும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருப்பதோடு வாரத்தின் செவ்வாய் வௌளி கிழமைகளில் பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும்.தல வரலாறு சக்தி ஸ்தலங்களில் தலை சிறந்து விளங்கும் தலம் சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும்.படிப்படியாக வளர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக மிக பிரமாண்டமான அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment