Monday, July 7, 2008
செம்பொனார்
அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்.செம்பொனார் கோவில் மூலவர் சுவர்ணபுரீஸ்வரர் அம்மன் சுகந்த குந்தளாம்பிகை உற்சவர் சோமாஸ்கந்தர் தல விநாயகர் விநாயகர் தல விருட்சம் வன்னி வில்வம் தீர்த்தம் சூரிய தீர்த்தம் பதிகம் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல் பெற்றது.புராணப்பெயர்.இலக்குமிபுரி கந்தபுரி இந்திரபுரி படையல் சுத்தன்னம் ஊர் செம்பொன்னார் கோவில் முக்கிய திருவிழா.இந்த நாட்களில் விசேஷ பூஜைகளும் 9 நாள் பெருந்தேர் விழாவும் சவுரமகோற்சவம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.பூஜை தினமும் 4 கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.பிரார்த்தனை எது வேண்டுமானாலும் கேட்கலாம்.அனைத்தையும் நிறைவேற்றி தருகிறார்.குறிப்பாக தியானப்பயிற்சி செய்பவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு தியானப்பயிற்சி ஆரம்பிப்பது சிறப்பு.நேர்த்திகடன் நமக்கு எது வசதியோ அதன் படி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொள்ளலாம்.குறிப்பாக வஸ்திரம் சாற்றி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.தல சிறப்பு சிவனின் சொல் கேட்காமல் பார்வதி தன் தந்தையின் யாகத்திற்கு செல்கிறார்.இதனால் சிவன் பார்வதியை தன்னுடன் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்.எனவே முருகப்பெருமான் சிவன் வடிவில் தன் தாய்க்கு நல்ல போதனைகளை எடுத்துக்கூறினார்.இதனாலேயே இங்குள்ள முருகன் கையில் அட்சய மாலையுடன் காட்சி தருகிறார்.ரதி மன்மதனை தன் கணவனாக அடைந்தது இத்தல இறைவனை வழிபட்டு தான்.வட்டவடிவமான ஆவுடையாருள்ள இம் மூர்த்தி திருமாலால் பூஜிக்கப்பட்டவர்.இங்குள்ள சிவலிங்கம் பதினாறு இதழ்களுடைய தாமரை இதழ் போன்ற ஆவுடைகளில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இரண்டு கரங்களே உடைய சுகந்த குந்தளாம்பிகை தேவிக்கு புஷ்பாளகி தாட்சாயிணி சுகந்தளாகி சுகந்தவன நாயகி மருவார் குழலி என்ற திருநாமங்களும் உண்டு.சித்திரை மாத அமாவாசையிலும் வைகாசியிலும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் விலகும்.பெயர்க்காரணம் லட்சுமி திருமாலை தன் கணவனாக அடைந்ததும் இத்தல இறைவனை வழிபட்டு தான்.எனவே தான் இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்று பெயர் வந்தது.இந்திரன் இங்குள்ள ரிய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து விருத்திராரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான்.இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் உண்டு.முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு.தலவரலாறு பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன் தன் மகள் தாட்சாயினியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறார்.தனது அகந்தையால் தனது யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை.தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டடும் என்று சாபம் இடுகிறார்.அத்துடன் சிவனிடம் தட்சனை தண்டிக்கும் படி வேண்டுகிறார்.சிவனும் வீரபத்திரர் பத்திரகாளி ஆகியோரை தோற்று வித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்ஹாரம் செய்து விடுகிறார்.தாட்சாயிணியும்.பொதுத்தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் 8 கி.மீ துணரத்தில் அமைந்துள்ளது இத்தலம்.தங்கும் வசதி மயிலாடுதுறையில் தங்கும் வசதிகள் உள்ளது.போக்குவரத்து வசதி மயிலாடுதுறையிலிருந்து நிறைய டவுன்பஸ் வசதிகள் உள்ளன.அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை.அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி சென்னை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment