Sunday, July 6, 2008

சீர்காழி

அருள்மிகு ஓசை கொடுத்த நாயகி சமேத சப்தபுரீசுவரர் திருக்கோயில்.சீர்காழி.மூலவர் அருள்மிகு சப்தபுரீசுவரர் தாளபுரீசுவரர் திருமேனி சுயம்புலிங்கம் அம்மன் ஓசை கொடுத்த நாயகி தலவிருட்சம் வில்வம் தீர்த்தம் சூரிய தீர்த்தம் ஊர் சீர்காழி மாவட்டம் நாகப்பட்டினம் தலபெருமைகள் வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி ஓசை நாயகியிடம் ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே பேசும் சக்தியைக்கொடு என வேண்டி.அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும்.பேசும் சக்தி வந்தவுடன் தங்கத்தாலான தாளத்தை வாங்கி காணிக்கை செலுத்துகிறார்கள்.இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம்.கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும் ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள்.இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர்.இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள்.எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள்.மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால்.திங்கள் மற்றும் வௌ஢ளி கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள் இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை.தற்போது திருத்தாளமுடையார் கோவில் என அழைக்கப்படுகிறது.பொது தகவல்கள் பூஜைநேரம் காலை 7.30 முதல் 11 மணிவரையிலும் மாலை 4.30 முதல் இரவு 8 மணிவரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.இருப்பிடம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியிலிருந்து 2 கி.மீ. துணரத்தில் அமைந்துள்ளது திருக்கோலக்கா.இத்தலத்திற்கு சீர்காழியிலிருந்து நிறைய பஸ் வசதி உள்ளது.அருகிலுள்ள ரயில் நிலையம் கும்பகோணம்அருகிலுள்ள விமான நிலையம்.இரண்டாம் நாளன்று பால் உற்சவம் நடக்கும்.அன்று இரவு சிவபெருமான் சம்பந்தருக்கு பொன்தாளம் தருவார்.மறுநாள் காலை பூபல்லக்கில் சம்பந்தர் திரும்புவது இங்கு நடக்கும் சம்பிரதாய திருவிழா.கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தீர்த்தவாரி நடக்கிறது.தல வரலாறு சிலபேர் பேசியே கொல்வார்கள் சிலர் பேசாமலே கொல்வார்கள் சிலரை வாயே பேச முடியாமலும் இறைவன் படைத்திருக்கிறான்.சிலர் திறமை படைத்தவர்களாக இருந்தும் வாய்ப்பேச்சில் வல்லவர்களாக இல்லாததால்.தங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருப்பார்கள்.இத்தகையவர்கள் வந்து செல்ல வேண்டிய தலம் திருக்கோலக்கா.திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது.பார்வதிதேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர் பல தலங்களுக்கு சென்று தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதைப்பார்த்தார் சிவன்.குழந்தையின் கைகள் வலிப்பது பொறாமல் அவருக்கு தங்கத்தால் ஆன இரண்டு தாளங்களை கொடுத்தார்.தட்டிப்பார்த்தார் சம்பந்தர்.ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை.உடனே அந்த தாளத்திற்கு ஓசை கொடுத்தாள் அம்மன்.எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் எனவும்.

No comments: