அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில்.சம்பந்தர் அப்பர் பழமை 2000 ஆண்டுகள் புராணபெயர். அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள அதிதி பூமிக்கு வருகிறாள்.தனது தாயை காணாத இந்திரன் தனது தாய் பூமியில் இறைவனை வழிபடுவது தெரிகிறது.இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல நினைக்கிறான்.கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவுகிறாள்.எனவே தான்அம்மனுக்கு குயிலினும் இனிமொழியம்மை என்ற திருநாமம் ஏற்பட்டது.உடனே சிவன் தோன்றி இந்திரா இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல் இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக என அருள்புரிந்தார்.இயற்பகை நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர் இயற்பகை நாயனார்.இவர் பிறந்து முக்தியடைந்தது இத்தலத்தில் தான்.இவரது மனைவியும் சிறந்த சிவ பக்தர்.இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார்.ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு சிவன் சிவனடியார் வேடமிட்டு வந்தார்.இயற்பகையாரிடம் நீ கேட்டதையெல்லாம்
இல்லை என்று கூறாமல் அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன்.எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை என்கிறார் சிவன்.இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன்
மனைவியை சிவனுடன் அனுப்பிவைக்கிறார்.அதற்கு இவரது மனைவியும் சம்மதிக்கிறார்.அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர் நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும்.எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும்.இதைகண்ட சுற்றத்தார்கள் எதிர்க்கிறார்கள்.இயற்பகையார் அவர்களை எல்லாம் வென்று விடுகிறார்.பின் இவர்கள் மூவரும் ஊரில் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார்.நான் உன் மனைவியுடன் செல்கிறேன் நீ ஊர்
திரும்பலாம்.இயற்பகையாரும் அதன்படி செய்கிறார்.திடீரென அங்கிருந்த சிவனடியார் மறைந்து
வானத்தில் அன்னை உமையவளுடன் தோன்றி நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து.என் திருவடி வந்து சேர்க எனக்கூறி மறைந்தார்.இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்த இடம் தான் சாயாவனம்.வில்லேந்திய வேலவன் இந்த தலத்தில் முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியா காட்சிதருகிறார்.எதிரிகளை அழிக்க முருகனுக்கு சக்தி கொடுத்த வேல் எப்படியோ அதே போல் சிவன் கொடுத்தது தான் இந்த வீர
கண்டரமணி.எதிரி பயம் இருப்பவர்கள் இவரை வழிபட்டு நலம் பெறலாம்.பொது தகவல்கள் பூஜை நேரம் காலை 7 முதல் மதியம் 12 மணிவரையிலும் மாலை 4 முதல் 7.30 மணி வரையிலும் சுவாமி
தரிசனம் செய்யலாம்.இருப்பிடம் நாகப்பட்டினம் சீர்காழி தாலுக்காவில் அமைந்துள்ளது யாவனம். இத்தலத்திற்கு சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பஸ்களில் செல்லலாம்.தொலைபேசி எண் 04364 260 151அருகிலுள்ள ரயில் நிலையம் சீர்காழிஅருகிலுள்ள விமான நிலையம் திருச்சி சென்னை.
No comments:
Post a Comment