Sunday, July 6, 2008
சூரியனார்கோயில்
அருள்மிகு சூரியனார் திருக்கோயில்.சூரியனார் கோயில் மூலவர் சிவசூர்யன் நவகிரகதலம் சூரியன் வடிவம் ரதவடிவம் தேவி உஷாதேவி தேவி சாயாதேவி விநாயகர் கோள்தீர்த்தவர் தலமரம் வெள்ளெருக்கு தீர்த்தம் சூரியதீர்த்தம் ஊர் சூரியனார்கோயில் மாவட்டம்.தோஷ நிவர்த்தி.ஏழரை ஆண்டுச் சனி.78 நாட்கள்.தத்தமது தோஷத்துக்கான பரிகாரங்களையும் செய்து வரவேண்டும்.இப்படிச் செய்து வந்தால் மேற்படி தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.சூரிய திசை சூரிய புத்தி.சூரிய பார்வை சூரிய தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிறு தோறும் வழிபடுகின்றனர்.காரியத் தடை விலகும்.நேர்த்தி கடன் நாடி பரிகாரம் செய்வது இங்கு விசேசம்.நவகிரக ஹோமம் செய்யலாம்.சூர்ய அர்ச்சனை செய்யலாம்.சர்க்கரை பொங்கல் அபிசேகம் செய்வது இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது.நவகிரக தோசம் வில நவகிரக அர்ச்சனை நவகிரக அபிசேகம் செய்தல் நல்லது.தவிர அபிசேகம் அர்ச்சனை துலாபாரம் கோதுமை வெல்லம் விளைச்சல் ஆகியவற்றறை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.குழந்தை வரம் வேண்டுவோர் தூளி கட்டி வழிபடுகிறார்கள்.இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம்.அன்னதானம் செய்தல்.கோயிலின் சிறப்பம்சம் சூர்ய பெருமான் கருவறை.சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார்.சூரிய பகவான் உக்கிரம் அதிகம்.அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது.ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார்.அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது.மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை அசுவம் இருக்கிறது.சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்கு குதிரை இருக்கிறது.கோயில் பழமை.தலபெருமைகள் சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது.வடக்கே கோனார் கோயில்.தெற்கே இந்த சூரியனார் கோயில்.கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை.ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது.மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்படித்தக்கது.இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது.இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை.வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான கோயில்இது.பொது தகவல்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண் 91 435 2472349.முக்கிய ஊர்களிலிருந்து தூரம் கும்பகோணம் 17 கி.மீ.மயிலாடுதுறை.22 கி.மீ. தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் கும்பகோணம் நகரில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.கும்பகோணம் நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.150 முதல் ரூ.600 வரை.தவிர மாவட்ட தலைநகரான தஞ்சாவூரில் தனியார் விடுதிகள் விபரம்.ஹோட்டல் தமிழ்நாடு போன் 21421 21024 21325ஹோட்டல் கணேஷ் போன் 22789ஹோட்டல் சங்கம் போன் 24895ஹோட்டல் பரிசுத்தம் போன் 212466ஹோட்டல் ஓரியன்டல் டவர்ஸ் போன் 31467 கட்டணம் ரூ.200 முதல் 2000 வரை போக்குவரத்து வசதி கும்பகோணத்தில் இருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் ஆடுதுறையிலிருந்தும் ஆடுதுறையிலிருந்தும் அணைக்கரை திருப்பனந்தாளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.அருகிலுள்ள ரயில் நிலையம் ஆடுதுறை கும்பகோணம் மயிலாடுதுறை அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் ரதசப்தமி உற்சவம் தை மாதம் 10 நாட்கள் திருவிழா இது இத்தலத்தின் மிக முக்கிய திருவிழா ஆகும்.சிறப்பு வழிபாடு பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூர்ய பெருமானுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.மகா அபிசேகம் என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.சனிப்பெயர்ச்சி குருபெயர்ச்சி ஆகியநாட்களில் இத்தலத்தில் மிக சிறப்பான முறையில் அபிசேக ஆராதனைகள் நடக்கும்.பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வர்.தல வரலாறு காலவ முனிவர் என்பவருக்கு தொழுநோய் ஏற்பட்டது.தன் நோய் குணமடையும் வரம் வேண்டி நவகிரகங்களை வேண்டி வழிபட்டார்.நவகிரக நாயகர்களும் அவர் கேட்டுக்கொண்டபடி வரமளித்தனர்.இதனை அறிந்த பிரம்ம தேவன் கோபம் கொண்டார்.சிவபெருமானின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களை மட்டுமே கொடுக்குமாறு கட்டளையிட்டிருந்தோம்.ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல் வரம் தரும் அளவுக்கு மீறிச் செயல்பட்டுவிட்டனர்.எனவே நீங்கள் பூலோகத்தில் தொழுநோய் பீடித்து உழல்வீர்களாக என சாபமிட்டார்.அதன்படி பூலோகத்தில் வௌளை எருக்கு வனத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தனர்.அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment