Sunday, July 6, 2008

தஞ்சாவூர்

அருள்மிகு பந்தாடு நாயகி அம்மன் கோயில்.கொட்டையூர் தஞ்சாவூர் மாவட்டம் மூலவர் கைலாசநாதர் அம்பாள் பந்தாடு நாயகி தலவிருட்சம் வில்வம் சிறப்பு கல்வி அபிவிருத்தியைதரும் தீர்த்த ஸ்தலம் ஊர் கொட்டையூர் மாவட்டம் தஞ்சாவூர் தல சிறப்பு இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள்.அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது.செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் பதக்கங்கள் பெறுவதற்காக இந்த அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.அறிவு ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை. கொட்டையூரில் கால் வைத்தால் கட்டை என்பது பழமொழி.இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால் அந்தப்பாவம் கோடி அளவு பெருகிவிடும்.புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் அதே போல கோடி அளவு கூடிவிடும்.எனவே பாவம் செய்தவர்கள் இத்தலத்திற்கு ஒரு காலத்தில் வராமலே இருந்தார்கள்.அவர்களுக்கு பந்தாடு நாயகி ஆறுதல் கூறி பாவங்களை உதைத்து எறிந்தாள்.தீராத பாவம் செய்தவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மனம் திருந்தி செல்லலாம்.விசேஷமான நவக்கிரக மண்டபம் இத்தலத்தில் வாகனங்களில் எழுந்தருளிய நவக்கிரகங்களை காணலாம்.எல்லா கிரகங்களும் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.இவற்றைக்காணவே கண்கோடி வேண்டும்.இதுபோன்ற நவக்கிரக சன்னதிகள் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.பொது தகவல்கள் இருப்பிடம் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் ரோட்டில் 5 கி.மீ. துணரத்தில் உள்ளது.தஞ்சாவூரிலிருந்து 42 கி.மீ.தங்கும் வசதி குடும்பத்துடன் வரும் பக்தர்கள் அருகில் உள்ள தஞ்சாவூர் கும்பகோணம் லாட்ஜ்களில் தங்கி இங்கு வந்து தரிசிக்கலாம்.கட்டணம் ரூ.300முதல் 2500 வரை அருகிலுள்ள ரயில் நிலையம் கும்பகோணம் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி முக்கிய திருவிழாக்கள் பங்குனி உத்திரம் திருவாதிரை சிவராத்திரி புரட்டாசி மாதத்தில் அம்புபோடும் திருவிழா ஆகியவை முக்கியமானது.தல வரலாறு திரிஹர்த்த தேசத்தை ஆண்டவர் சத்தியரதி.இவரது மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான்.இவனது உருவைக்கண்டு ஊரே நடுங்கி ஓடியது.தன்னைக் கண்டாலே ஓடும் மக்களை தன்வசம் மீண்டும் இழுக்க அவன் தெய்வத்தை வேண்டினான்.சிவபெருமானை வணங்கினான்.அவரது அருளாசியின்படி கொட்டையூர் என்ற தலத்திற்கு சென்று வணங்கும்படி கூறினார்.அவனும் கொட்டையூருக்கு வந்து இங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கினான்.இந்த தீர்த்தம் ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது.அமுதக்கிணறு.இந்தக் கிணற்று நீரில் நீராடி முன்பைவிட வனப்பான உருவம் பெற்றான்.இப்போதும் இந்தக்கிணறு இங்கு உள்ளது.பல பெண்கள் இந்தக்கிணற்று நீரை தங்கள் தலையில் தௌதத்து அழகிய வடிவம் பெறலாம் என நம்புகிறார்கள்.

No comments: