Monday, July 7, 2008

திருக்கண்ணார் கோவில்

அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில்.குறுமாணக்குடி.திருக்கண்ணார் கோவில்.மூலவர் கண்ணாயிரமுடையார் அம்மன் முருகுவளர்க்கோதை நாயகி தல விநாயகர் கன்னி விநாயகர் தல விருட்சம் கொன்றை மரம் தீர்த்தம் இந்திர தீர்த்தம் பதிகம் சம்பந்தர் ஆகமம் சிவாகமம் புராணப்பெயர்.கண்ணார்கோவில் ஊர் குறுமாணக்குடி மாவட்டம் நாகப்பபட்டினம்.சம்பந்தர் தல வரலாறு தேவர்களின் தலைவனான இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான்.ஒரு முறை முனிவரை வௌதயே அனுப்பிவிட்டு அகலிகையுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சூழ்ச்சி செய்தான்.எனவே இந்திரன் முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை பார்க்க சென்றான்.வந்திருப்பது தன் கணவர் அல்ல என்பது தெரிந்தும்.இந்திரன் மீது கொண்ட ஆசையினால் தவறு செய்ய தானும் சம்மதித்தாள்.இதற்குள் முனிவர் திரும்பி வர இந்திரன் பூனை வடிவமெடுத்தான்.அகலிகை பயந்து நின்றாள்.நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் பெண்களுக்கான பெண் உறுப்பு உண்டாகும் படி சபித்தார்.அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார்.தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார் முனிவர்.இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மனிடம் சென்றான்.அதற்கு பிரம்மன் குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார்.இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட அவனது ஆயிரம் குறிகளும் ஆயிரம் கண்களாக மாறி இறைவன் ஏற்றுக்கொண்டார்.இந்திரனின் சாபம் தீர்ந்தது.எனவே இத்தல இறைவன் கண்ணாயிரமுடையார் ஆனார்.தல சிறப்பு தேவாரப்பதிகம் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இத்தலம் 17 வது.மாணிக்கவாசகர் சேக்கிழார் ராமலிங்க அடிகளார் தரிசனம் செய்துள்ளனர்.மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட வாமனமூர்த்தியாகிய குறுமாணி வழிபட்டதால் இத்தலம் குறுமாணக்குடி.குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அர்த்த ஜாம பூஜையில் பால் பழம் நைவேத்யம் செய்து.அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் 12 ராசிக்குரிய கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன.12 ராசிக்காரர்களும் தங்கள் ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டிருந்தால் அம்மன் முருகுவளர்க்கோதை நாயகிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபடவேண்டிய சிறந்த தலம்.திருவிழா கார்த்திகை சோமவாரத்தில் பிரம்மோற்சவ திருவிழா.சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.திறக்கும் நேரம் காலை 6 12 மணி.மாலை 3.30 8 மணி.இருப்பிடம்.அர்ச்சகர் பாலசுப்ரமணிய குருக்கள் போன் 94422 58085அருகிலுள்ள ரயில் நிலையம் வைத்தீஸ்வரன் கோவில்அருகிலுள்ள விமான நிலையம் சென்னை திருச்சி.

No comments: