Monday, July 7, 2008
திருக்கற்குடி
அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில்.திருக்கற்குடி.உய்யக்கொண்டான் மலை.மூலவர் உஜ்ஜீவநாதர் திருமேனி சுயம்பு மூர்த்தி அம்மன் அஞ்சனாட்சி தல விருட்சம் வில்வம் தீர்த்தம் பொன்னொளிர் ஓடை.குடமுருட்டி ஞானவாவி எண்கோணக்கிணறு.நாற்கோணக்கிணறு என ஐந்து தீர்த்தங்கள்.வழிபட்டோ ர் உபமன்யு முனிவர் மார்க்கண்டேயர் கரன் அருணகிரிநாதர் ஊர் திருக்கற்குடி மாவட்டம் திருச்சி தல வரலாறு மிருகண்டு முனிவர் நெடுங்காலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தார்.தனக்கு ஒரு மகன் வேண்டும் என தவம் இருந்தார்.சிவபெருமான் அவரிடம் உனக்கு ஞானமற்ற அங்கஹீனம் உள்ள ஆனால் நுணறு வயது வாழும் மகன் வேண்டுமா அல்லது அழகும் அறிவும் மிக்க 16 வயது வரையே ஜீவித்திருக்கும் மகன் வேண்டுமா என கேட்டார்.குழம்பிப்போன மிருகண்டு தனக்கு ஞானபுத்திரனே வேண்டும் என்றார்.மகனும் பிறந்தான்.அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டனர்.பதினாறு வயதும் வந்தது.எமன் துரத்தினான்.மார்க்கண்டேயர் பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று ஓடி ஔதந்தார்.இறுதியாக உய்யக்கொண்டான் திருமலைக்கு வந்தார்.தன்னை எமன் துரத்துவதை சொன்னார்.இறைவன் அந்தச்சிறுவனை பாதுகாத்தார்.இதன்பிறகே அவர் திருவேற்காடு தலத்தில் சிரஞ்சீவி என்னும் பட்டம் தந்தார்.சிறப்பம்சம் 50 அடி உயர மலையில் இந்த கோயில் இருக்கிறது.கோயிலைச் சுற்றி பொன்னொளி ஓடை.குடமுருட்டி ஞானவாவி எண்கோண கிணறு.நாற்கோண கிணறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.தேவி அஞ்சனாட்சி என வழங்கப்பெறுகிறாள்.இவள் மை தீட்டப்பெற்ற கண்களைக் கொண்டவள்.மற்றொரு அம்பிகை பாலாம்பிகை எனப்படுகிறாள்.இரண்டு அம்மன்களுக்கும் தனித்தனி வழிபாடு நடக்கிறது.மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி உஜ்ஜீவநாதர் எனப்படுகிறார்.எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் கற்பகநாதர் என்றும் இவருக்கு பெயர் உண்டு.சுவாமி சுயம்பு வடிவில் உள்ளார்.50 அடி உயர மலையில் பாறையில் மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது இந்த கோயில்.இராவணனுடைய சகோதரர்களில் ஒருவன் கரன்.இவன் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான்.இக்கோயிலுக்கு மூன்று வாசல்கள் உள்ளன.இரண்டு தெற்கு நோக்கியும் ஒன்று கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.ஜேஷ்டாதேவி இக்கோயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது.மூதேவி.லட்சுமியின் சகோதரி இவள்.இவளைப் பார்த்தாலே காரியங்கள் நடக்காது என்பார்கள்.இது தவறான கருத்தாகும் என சொல்லப்படுகிறது.இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள்.எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள்.நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம்.மேரு மலை வைத்து பூஜை செய்பவர்கள் ஒன்பது படிக்கட்டுகளை அமைப்பார்கள்.இந்த மலைகளை நவாபரணம் என சொல்வதுண்டு.இதில் இரண்டாவது ஆபரணமாக ஜேஷ்டாதேவி விளங்குகிறாள்.திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு.அதுபோல உய்யக்கொண்டான் திருமலையிலும் ஜேஷ்டாதேவி இருக்கிறாள்.ஆனால் இரு புறமும் இரண்டு குழந்தைகளை வைத்திருக்கிறாள்.ஒரு குழந்தை நந்திகேஸ்வரர் குழந்தை வடிவத்தில் இருப்பதுபோல உள்ளது.மாடு போன்ற வடிவத்தில் உள்ளதால் மாடன் என்ற பெயர் ஏற்பட்டதாம்.மறுபுறத்தில் அழகிய பெண் இருக்கிறாள்.இவளை வாக்தேவதை சேடி.ஆதிபராசக்தியே இங்கு ஜேஷ்டாதேவியாக இருக்கிறாள்.அவள் தனது சேடியான பணிப்பெண் வாக்தேவதையையும் அழைத்து வந்திருக்கிறாள்.மாறுபட்ட இந்த அம்பிகையை வழிபட்டு வாழ்வில் நிகழ இருக்கும் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம்.விழாக்கள் சிவபெருமானுக்குரிய அனைத்து விழாக்களும் நடக்கிறது.இருப்பிடம் திருச்சியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் நகர எல்லையில் இக்கோயில் அமைந்துள்ளது.அருகில் உள்ள ரயில் நிலையம் திருச்சிஅருகில் உள்ள விமான நிலையம் திருச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment