Monday, July 7, 2008
திருமாகாளம்
அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில்.திருமாகாளம்.மூலவர் மகாகாளநாதர் காளகண்டேஸ்வரர் திருமேனி கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கம் அம்மன் பயக்ஷாம்பிகை அச்சம் தவிர்த்த நாயகி தலவிருட்சம் மருதமரம் கருங்காலி தீர்த்தம் மாகாள தீர்த்தம் பழமை சோழர் காலம் பதிகம் அப்பர் சம்பந்தர் சுந்தரர் வழிபட்டோ ர் காளி நாகராஜன் ஊர் திருமாகாளம் மாவட்டம் திருவாரூர் தலவரலாறு 63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாறர் தன் மனைவி சுசீலா தேவியுடன் இத்தலத்தில் வசித்தார்.இவருக்கு சோமயாகம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெறவேண்டும் என விரும்பினார்.இறைவனை நேரடியாக அழைக்க வேண்டுமானால்.அவரது நண்பர் சுந்தரரின் நட்பை முதலில் பெற நினைத்தார்.இந்நிலையில் சுந்தரருக்கு இருமல் ஏற்பட்டது.அவரைச் சந்திக்க முடியவில்லை.பலரும் வைத்தியம் செய்தனர்.இருமல் தீரவில்லை.இதையறிந்த சோமாசிமாறர் அவரது நோய் தீர தினமும் துணதுவளை கீரை கொடுத்து அனுப்பினார்.இதைக் கொடுத்து அனுப்புவது யாரென்பது சுந்தரருக்குத் தெரியாது.மனைவி சங்கிலி அம்மையாருக்கு கீரை கொடுத்தனுப்புவது யார் என்று தெரியும்.நோய் தீர்ந்ததும்.நோய் தீர காரணமான கீரையைக் கொடுத்தனுப்பியவரை பார்க்க வந்தார் சுந்தரர்.அப்போது சோமாசியார் தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார்.சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட இறைவனும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார்.இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள் முனிவர்கள் ஆன்றோர்கள் சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது.நான்கு வேதங்களை நான்கு நாய்களாக மாற்றி இறந்த ஒரு கன்றினை சுமந்தபடி வந்தார் சிவன்.அவருடன் பார்வதி தேவி தலையில் மதுக்குடத்துடன் வந்தாள்.பிள்ளையாரும் முருகனும் அவர்களுடன் வந்தனர்.இவர்களை அடையாளம் தெரியாததால்.யாகத்தில் ஏதோ தவறு நடந்து விட்டதாகக் கருதி வேதியர்கள் ஓடிவிட்டனர்.உடனே விநாயகர் தன் சுயரூபத்தில் சோமாசிமாறருக்கும் சுசீலாதேவிக்கும் காட்சி தந்து.வந்திருப்பது சிவன் என்பதை உணர்த்தினார்.மகிழ்ந்த சோமாசிமாறர் சிவனாகிய தியாகராஜருக்கு அவிர்பாகம் கொடுத்து சிறப்பு செய்தார்.தியாகராஜரும் நீசக்கோலம் நீங்கி பார்வதிசமேதராக சோமசிமாறருக்கு காட்சி கொடுத்து அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.பெயர்க்காரணம் அம்பன் அம்பாசூரன் என்ற இரு அசுரர்கள் பார்வதியை திருமணம் செய்ய விரும்பினர்.இதையறிந்த அம்மன் காளி வடிவமெடுத்து அம்பகரத்துணர் என்ற இடத்தில் அவர்களை சம்ஹாரம் செய்தாள்.இதனால் அம்பிகைக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.காளி சிவபூஜை செய்ததால் சிவன் மகாகாளநாதர் எனப்பட்டார்.மதங்கரிஷி என்பவர் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்தார்.ராஜமாதங்கி என்ற குழந்தை பிறந்தது.குழந்தை பெரியவளானதும் இறைவன் தோன்றி வேண்டும் வரம் கேள் என்றார்.அதற்கு அவள் நான் தங்களுடன் தினமும் திருமண கோலத்தில் இத்தலத்தில் இருக்க விரும்புகிறேன்.தல சிறப்பு இங்கு ஆதி மனிதமுக விநாயகரும் ஆதி ஸ்கந்தரும் காட்சியளிக்கின்றனர்.விநாயகர் சோமாசிமாற நாயனார் நடத்திய யாகத்திற்கு மனித முகத்துடன் வந்ததால்.அதே வடிவில் இங்கே தங்கியதாகச் சொல்வர்.இந்த உலகத்தை 8 நாகங்கள் தாங்குவதாக சொல்வர்.அதில் ஒன்று சிவனின் கழுத்திலுள்ள வாசுகி.அதற்கு இங்கு தனி சன்னதி உள்ளது.இங்கு உறையும் இறைவன் மனிதனின் ஆயுளை நிர்ணயிப்பவராக உள்ளார்.உஜ்ஜயினி திருமாகாளம் விழுப்புரம் அருகேயுள்ள இரும்பை ஆகிய தலங்களில் மட்டுமே இத்தகைய சிறப்புடைய மகாகாளேஸ்வரரை தரிசிக்க இயலும்.மரண அவஸ்தையில் உள்ளவர்கள் இங்குள்ள மோட்சலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.திறக்கும் நேரம் காலை 6 12மணி மாலை 5 8.30 மணி.திருவிழா வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப்பெருவிழா நடக்கிறது.இந்த விழாவில் காலில் செருப்பு கையில் மத்தளம் அருகில் மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவன் அருள்பாலிப்பது சிறப்பு.இருப்பிடம் கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் திருமாகாளம் உள்ளது.அர்ச்சகர் தியாகராஜ குருக்கள்போன் 04366 291 457 மொபைல் 94427 66818அருகிலுள்ள ரயில் நிலையம் பூந்தோட்டம்.அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment