Monday, July 7, 2008
திருநாரையூர்
அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் கோயில்.திருநாரையூர் மூலவர் சவுந்தர்யேஸ்வரர் அம்மன் திரிபுரசுந்தரி தலவிருட்சம் புன்னை தீர்த்தம் செங்கழுநீர் பதிகம் அப்பர் சம்பந்தர் சிறப்பு பொல்லாப்பிள்ளையார் சுயம்பு விநாயகர் தலவரலாறு கோபக்காரரான துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார்.தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன் ஒருவனை நாரையாகும்படி சாபமிட்டார்.கந்தர்வன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான்.முனிவர் மறுத்து விட்டார்.எனவே இத்தல சிவனிடம் முறையிட்டு கதறினான்.சிவன் அவனிடம் தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்கு தீர்த்தம் கொண்டு வந்து தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும்.நாரை வடிவிலிருந்த கந்தர்வனும் தன் சக்தியால் அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து அபிஷேகம் செய்தான்.இதன்பறகு சிவன் நாரைக்கு முக்தி கொடுத்தார்.பொல்லாப்பிள்ளையார் நம்பியாண்டார் நம்பயின் தந்தை இங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார்.அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்ப இதைப் பார்ப்பார்.அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா என அவருக்கு திடீரென சந்தேகம் வந்தது.தன் தந்தைக்கு பின் நம்பி கோயிலுக்கு பூஜை செய்யும் காலம் வந்தது.அப்போது தன் தந்தையைப்போல் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து.பிள்ளையாரை சாப்பிடும்படி வற்புறுத்தினார்.பிள்ளையாரோ அமைதியாக இருந்தார்.மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார்.உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் சாப்பிட்டார்.பிள்ளையார் சாப்பிடவில்லை.மனமிரங்கிய பிள்ளையார் ராஜராஜனின் நைவேத்தியத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார்.மூவர் பாடிய தேவாரப்பாடல்களைத் தொகுத்தவரும் இவரே.இவரது சிலை கையில் கலசம் ஏந்திய நிலையில் உள்ளது.தேவாரத்தை தொகுக்க பாடுபட்ட ராஜராஜசோழனின் சிலையும் உள்ளது.திருவிழா வைகாசி திருவாதிரை ராஜராஜனுக்கு 13 நாள் திருவிழா விநாயகர் சதுர்த்தி.பூஜை நேரம் காலை 6 12மணி மாலை 4.30 8.30மணிஇருப்பிடம் சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் திருநாரையூர் உள்ளது.பஸ் உண்டு.மொபைல் 94425 71039அருகிலுள்ள ரயில் நிலையம் சிதம்பரம்அருகிலுள்ள விமான நிலையம் சென்னை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment