Monday, July 7, 2008
திருவாஞ்சியம்
அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில்.திருவாஞ்சியம் மூலவர் வாஞ்சிநாதர் பெருமை சுயம்பு அம்பாள் வாழவந்தநாயகி தலபாலகர் எமதர்மன் தலமரம் சந்தனமரம் தீர்த்தம் குப்தகங்கை பதிகம் தேவாரம் ஊர் திருவாஞ்சியம் புராணபெயர்.கந்தாரண்யம் மாவட்டம் பிரார்த்தனை சனிபகவானின் அதிதேவதை எமதர்மன் என்பதால் சனியால் வரும் ஏழரை நாட்டுச் சனி கண்டச்சனி அஷ்டமச்சனி ஆகியன தரும் உபத்திரங்கள் நீங்கும்.குறைந்த ஆயுள் பயமும் எம பயமும் நீங்கும் பித்ரு காரியங்கள் செய்ய ஏற்ற தலம் என்பதால் ஏராளமான பக்தர்கள் இங்கு பித்ரு தர்ப்பணம்ங்கள் செய்கின்றனர்.இத்தலத்தில் வழிபட்டு கணவன் மனைவி பிணக்கு நீங்கி குடும்ப ஒற்றுமை அடையப்பெறுகிறார்கள்.சுபகாரியத்தடை.திருமணத்தடை பில்லி சூனியம் முதலியன நீங்க இத்தலத்தில் வழிபடுகிறார்கள் பைரவரை வணங்கினால் தோல் வியாதிகள்.காக்கா வலிப்பு பக்கவாதம் மூளை நரம்பு உபாதைகள் நீங்கும்.நவகிரக தோசம் பாவம் நீங்க இத்தலத்தில் வழிபடுகிறார்கள்.வழக்குகளில் வெற்றி கிடைக்கவும் கால சர்ப்ப தோசங்கள் நீங்கவும் இத்தலதில் பெருமளவில் வழிபடுகிறார்கள் இத்தலத்து வாஞ்சி நாதரை வழிபட்டால் எமபயம் பைரவ பயம் கலிபயம் பிரம்மஹத்தி தோஷம் வெண்குஷ்டம் போன் வியாதிகளும் இதர எல்லா பாவங்களும் நீங்கும்.மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி.உத்தியோக உயர்வு.நேர்த்தி கடன் இத்தலத்தில் ஆயுள் ஹோமம் சஷ்டியப்பதபூர்த்தி முதலியன செய்தால் நீண்ட ஆயுள் கிட்டும்.ஆல் அரசு புரசு நொச்சி கிலுவை நாயுருவி இதன் சமித்துகளை.விறகு போட்டு ஹோமம் செய்து நெய் ஊற்றி பரிகாரங்கள் செய்து வேள்வி நடத்துகின்றனர்.குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ருக்களுக்கு முக்தி கிட்டும்.காசி கயாவில் செய்வதற்கு ஒப்பாகும்.குப்த கங்கையில் நீராடி மங்களாம்பிகை மகா லட்சுமியை வழிபட்டால் கணவன் மனைவி பிணக்கு நீங்கி குடும்ப ஒற்றுமை ஓங்கும்.குப்த கங்கையில் நீராடி மகிஷாசுரமர்த்தினியை ராகு காலங்களில் 108 தாமரைப்பூக்களால் அர்ச்சித்து வழிபட்டால் சுபகாரியத்தடை.திருமணத்தடை பில்லி சூன்யம் முதலியன நீங்கும்.இங்கு நவகிரகங்களுக்கு அதிகாரம் இல்லை.இங்கு ஓரிரவாவது தங்கி சுவாமி அம்பாளை வழிபட்டால் நவகிரக தோசங்கள் இதர பாவங்கள் நீங்கும்.முக்தி கிட்டும்.ராகு கேதுவை வழிபட காலசர்ப்ப தோஷ உபாதையும் மற்ற நவகிரக தோச உபாதையும் நீங்கும்.வழக்குகளில் வெற்றியும் கிடைக்கும்.குப்தகங்கையில் மகரசங்கராந்தி அம்மாவாசை அர்த்தோதயம் மஹோதயம் விஷஹ புண்ணிய காலங்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகள் சோம வாரம் மாசிமகம் மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் நீராடி வாஞ்சி நாதரை வழிபட்டால் எம பயம் பைரவ பயம் கலி பயம் பிரம்மகத்தி தோஷம் வெண்குஷ்டம் போன்ற வியாதிகளும் இதர எல்லா பாவங்களும் நீங்கும்.அம்பாளுக்கு தேன் அபிசேகம் பால் அபிசேகம் ஆகியவற்றை முக்கிய நேர்த்திகடன்களாகச் செய்கின்றனர்.அம்பாளுக்கு புடவை சாத்துவதை பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக செய்கின்றனர்.எமதர்மராஜனுக்கு வடைமாலை சாத்துகின்றனர்.தவிர தேன் பால் நல்லெண்ணெய் மஞ்சள் பொடி திரவியப்பொடி பஞ்சாமிர்தம் தயிர் நெய் பழரசம் இளநீர் சந்தனம் பன்னீர் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம் செய்கின்றனர்.மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.கோயிலின் சிறப்பம்சம் பிரளய காலத்து லிங்கம் ஸ்ரீ வாஞ்சியத்தில் உள்ள மூலவர் லிங்கம் அயனது பிரளய காலத்தில் தேயு வடிவமாகவும் கிருதாயுகத்தில் ரத்தின மயமாகவும் திரேதா யுகத்தில் பொன்மயமாகவும் துவாபர யுகத்தில் வௌளி வடிவமாகவும் கலி யுகத்தில் கல் மயமாகவும் இருந்தது என்று சாம்போப புராணம் கூறுகிறது.எமன் இத்தலத்தின் ஷேத்திர பாலகராக எமதர்மராஜன் உள்ளார்.சித்திர குப்தரோடு எமனுக்குத் தனி சந்நிதியும்.சிவபெருமானுக்கு எமனே வாகனமாகவும் உள்ளது இக்கோயிலின் சிறப்பு.இவரை வணங்கிய பிறகே மற்ற மூர்த்திகளை தரிசிக்க வேண்டும் என்பது நியதி.யோக பைரவர் இத்தலத்தின் மற்றொரு ஷேத்திர பாலகர் யோக பைரவர்.இவருக்கு நாய் வாகனம் இல்லை.காசியில் இறப்பவர்களுக்கு எமவாதனை கிடையாது.ஆனால் பைரவர் வாதனை உண்டு.இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எமவாதனை பைரவவாதனை இரண்டும் கிடையாது.இறப்போரின் வலது செவியில் சிவபெருமானே ஐந்தெழுத்தை ஓதி தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்வதாக புராணம் கூறுகிறது.நவகிரகங்கள் இங்கு நவகிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது.தனிச்சந்நிதியில் உள்ள சனீசுவரர் சிறப்புப் பெற்றவர்.இங்கு எல்லா பெருமைகளும் வாஞ்சிநாதருக்கே.எமன் பைரவர் இருவருக்கும் எவ்வித அதிகாரமும் கிடையாது.குப்தகங்கை கங்கையானவள் அனைத்து மக்களும் தன்னிடம் விட்டுப்போகும் பாவங்களை கழுவிக் கொள்ள ஒரு வழி சொல்லக் கேட்க சிவபெருமான் கலி தோசம் போக்கக் கூடியதும் தனக்குப் பிடித்தமானதுமாகிய ஸ்ரீ வாஞ்சியம் என்ற தலத்திற்கு சென்று நீராடி உலகினில் தூய்மை உண்டாக்கவும் குப்த கங்கை என்ற பெயருடன் இங்கு வாழ்ந்து வருகின்றாள்.தலபெருமைகள் மூலவர் சுயம்பு லிங்க மூர்த்தி.பிரளய காலத்திலும் அழிவற்றது.காசியை விட பன்மடங்கு மேன்பட்டது.எம தர்ம ராஜாவுக்கு தனி சந்நிதி உள்ளது.பார்வதி தேவி தானே விரும்பி வாழவந்த நாயகியாக உறையும் தலம்.ஸ்ரீயை வாஞ்சித்து.மகா லட்சுமியை அடைய விரும்பி திருமால் தவம் இருந்ததால் இத்தலத்திற்கு ஸ்ரீ வாஞ்சியம் எனப் பெயர் பெற்ற தலம்.காசிக்கு இணையாகக் காவிரிக் கரையிலுள்ள ஆறு தலங்களான திருவெண்காடு திருவையாறு வேதாரண்யம் மாயூரம் திருவிடைமருதூர் ஆகிய ஐந்தோடு காசியை விட நூறு மடங்கு பெருமை வாய்ந்தது ஸ்ரீ வாஞ்சியம்.கயிலாயத்திற்கு ஒத்ததும் கூட காசிக்கு வீசம் கூட என்ற பழமொழியுடன் கூடியது.சக்தி தேவி பிரமனைப் படைப்பதற்கு முன்பே சுயம்பு லிங்கமாக சிவபெருமான் பார்வதியுடன் அமைந்துள்ள தலம்.பிரளய காலத்திலும் அழியாத தலம்.கங்கை இங்கு குப்த கங்கை என்ற பெயரில் ரகசியமாக உறைந்துள்ள தலம்.பிரம்மா விஷ்ணு இந்திரன் சூரியன் எமதர்மன் பைரவர் கங்கை அக்கினி மற்றும் முக்கோடி தேவர்களும் கௌதமர் ஜமதக்னி காச்சியபவர் அத்ரி விசுவாமித்திரர் பரத்வாஜர் வீரதனுசு மற்றும் சிறந்த ரிஷியான விகுஷியும் அவர் மனைவி சாருமதியும் ஸ்ரீ வாஞ்சிநாதரை வழிபட்டு தத்தம் வேண்டகோளைப் பெற்ற தலம்.எமன் மக்களின் உயிர்களை கவருவதால் தனக்கேற்படும் தோஷம் நீங்க.அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்க வாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம்.அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.பொதுவாக ஊரில் யாராவது இறந்து விட்டால் பிணத்தை எடுக்கும் வரை அந்த கோயிலில் பூஜைகள் நிறுத்தி வைக்கப்படும்.ஆனால் இவ்வூரில் கோயில் முன்னேயே பிணம் கிடந்தாலும் அர்ச்சனைகள் பூஜைகள் நடந்த வண்ணமே இருக்கும்.மகம் பூரம் சதயம் பரணி நட்ச்சத்திரம் மேஷம் சிம்மம் கும்பம் ராசிகள் அல்லது இவற்றின் லக்கினங்கள் உள்ளவர்கள் மட்டுமே இத்தலத்திற்கு வர முடியும்.இங்கு வந்து விட்டு வீடு திரும்பிய பின் நல்ல செய்தி காத்திருக்கும்.மகத்தில் சுவாமி தோன்றியவர் சதயத்தில் சனி தோன்றியவர் பூரத்தில் எமதர்மராஜா தோன்றியர் பரணியில் தான் வாகனமாக வந்து காட்சி தந்தமையால் இக்கருத்து நம்பப்படுகிறது.பொது தகவல்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண் 04366 243114. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் நன்னிலம் 8 கி.மீ.திருவாரூர் 16 கி.மீ. தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் திருவாரூரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.திருவாரூர் நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.250 முதல் ரூ.600 வரை.தவிர அருகிலுள்ள பெரிய நகரான தஞ்சாவூரில் தனியார் விடுதிகள் விபரம்.ஹோட்டல் தமிழ்நாடு போன் 21421 21024 21325ஹோட்டல் கணேஷ் போன் 22789ஹோட்டல் சங்கம் போன் 24895ஹோட்டல் பரிசுத்தம் போன் 212466ஹோட்டல் ஓரியன்டல் டவர்ஸ் போன் 31467 கட்டணம் ரூ.200 முதல் 2000 வரை போக்குவரத்து வசதி நன்னிலம் நாகபட்டினம் மார்க்கத்தில் அச்சுதமங்கலத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் ஸ்ரீ வாஞ்சியம் உள்ளது.அருகிலுள்ள ரயில் நிலையம் திருவாரூர் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் மாசி மாதம் பிரம்மோற்சவம் அசுவனி மகம்.2 வது நாள் பரணியன்று வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் தீர்த்தம் அளிக்கிறார்.பிரம்மோற்சவத்தின் மத்தியில் தீர்த்தவாரி நடக்கும் தலம்.கடைசி ஞாயிற்றுக் கிழமையை பத்தாவது நாளாக வைத்து சுப்பிரமணிய சுவாமிக்கு உற்சவம் கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் விடியற்காலை தீர்த்தவாரியின்போது நீராடினால் பஞ்சமகாபாதக பிரம்மகத்தி தோசங்கள் நீங்குமுஅ.ஆடி பூரம் உற்சவம் 10 நாட்கள் சுவாமி புறப்பாடு தீர்த்தவாரி உண்டு.வாரத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சுவாமி தோன்றிய நாள் என்பதால்.இத்தலத்தில் விசேசமாக இருக்கும்.சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல் தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.தல வரலாறு.இதனால் அவரது உத்தியோகம் போய்விடுகிறது.உடனே எல்லா சிவதலங்களுக்கும் சென்று வழிபட ஆரம்பிக்கிறார்.ஆனால் சிவபெருமான் காட்சி தரவில்லை.இங்கு வந்து இறைவனை வழிபட்டு தவம் இருக்கிறார்.மாசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று சிவபெருமான் எமதர்மராஜனுக்கு காட்சி தந்து குறை கேட்கிறார்.நிறைய பாவங்கள் என்னை ஆட்டுகிறது என்று மனம் வருந்திக் கூறினார்.சிவபெருமானும் சரி இனிமேல் யாரும் எமன் உயிரை எடுத்ததால் இறந்தான் என்று சொல்லமாட்டார்கள்.கல் தடுக்கி இறந்தான்.உன் மீதான பழியும் இனி நீங்கும்.இந்த தலத்தில் உனக்கு உத்தியோகம் தருகிறேன்.அதாவது பாவிகள் யாரையும் உள்ளே வர விடக்கூடாது.தன் தவத்தினாலேயோ அல்லது மூதாதையர்கள் தவப்பயனாலோ இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் பயம் நீக்குவாயாக. அதோடு நீ இத்தலத்தில் தனி சந்நிதியில் ஷேத்திர பாலகராக விளங்கு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment