Monday, July 7, 2008

திருநீர்மலை

அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் ஸ்ரீரங்க நாதப் பெருமாள் திருக்கோயில்.தலபெருமைகள் நரசிம்ம பெருமாளை வீட்டில் வைத்து வணங்கலாமா தாயாருடன் இருந்தால் தான் அவர் அமைதியாக இருப்பாராமே பிரகலாதனே அவரைக் கண்டு நடுங்கினாராமே என்ற சந்தேகங்கள் பக்தர்கள் மத்தியில் உள்ளது.இவற்றிற்கெல்லாம் தீர்வாக நரசிம்மர் சிறுவனின் வடிவத்தில் பால நரசிம்மராக அருள்பாலிப்பதை சென்னை திருநீர்மலையில் தரிசிக்கலாம்.108 திருப்பதிகளில் ஒன்று இது.கோயில் அமைப்பு இது ஒரு மலைக்கோயில் ஆகும்.மலையிலும் கீழேயும் இரண்டு பெரிய கோயில்கள் அமைந்துள்ளன.பெருமாள் நான்கு நிலைகளில் மூன்று அவதார கோலத்தில் காட்சி தருகிறார்.கீழ்க்கோயிலில் நீர்வண்ணப்பெருமாள் வால்மீகி மகரிஷிக்கு காட்சி தரும் நிலையில் உள்ளார்.மலைக்கோயிலில் ரங்கநாதர் திரிவிக்கிரமர் சாந்த நரசிம்மர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் ஆகிய நான்கு நிலைகளிலும் பெருமாள் இங்கே காட்சி தருவது சிறப்பு.நீர்வண்ணராய் காட்சி தரும் ஸ்ரீராமர் நின்ற நிலையில் உள்ளார்.வால்மீகி முனிவர் ராமாயணத்தை எழுதி முடித்த பின் ராமா உன் கதையை எழுதி முடித்து விட்டேன் எனக்கு அருள் தருவாயாக.எனக் கேட்க ராமர் இத்தலத்தில் நீர்வண்ணராய் காட்சி தந்தார்.பெருமாளையே பாடும் திருமங்ககை ஆழ்வார் இத்தல அணிமாமலர் மங்கைத் தாயாரையும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.ஈரடியால் மூவுலகும் நடந்து மூன்றாவது அடியை எங்கே வைப்பது என கேட்பது போல திரிவிக்கிரம அவதார நிலையில் நடந்த வராகவும் இங்கு காட்சி தருகிறார்.நரசிம்ம மூர்த்தியின் தோற்றத்தை கண்டு பயந்த பிரகலாதனின் வேண்டுதலை ஏற்று அமைதியான கோலத்தில் இருந்த திருக்கோலத்தில் சாந்த நரசிம்மராகவும் சிறுவனின் வடிவில் பால நரசிம்மராகவும் பெருமாள் இங்கு அருள்பாலிக்கிறார்.ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஆதிசேஷனின் குடையின் கீழ் சயன.கிடந்த திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாதராய் அருள்பாலிக்கிறார்.திருக்குளம் இத்தலத்திற்கு 3 ஏக்கர் பரப்பளவில் நடுவில் நீராழி மண்டபத்துடன் அழகிய தெப்பக்குளம் உண்டு.இக்குளம் சுத்த புஷ்கரணி ஷீர புஷ்கரணி காருண்ய புஷ்கரணி ஸ்வர்ண புஷ்கரணி என அழைக்கப்படுகிறது.இக்குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும் திருமணத்தடை நீங்க பெண்கள் கிரிபிரதட்சணம் செய்தும் வழிபடுகின்றனர்.பொது தகவல்கள் பூஜை காலை 8 முதல் 12 மணிவரையிலும் மாலை 4 முதல் 7.30 மணிவரையிலும் பெருமாளை தரிசிக்கலாம்.வைகானச ஆகம விதிப்படி இரு வேளை பூஜை நடக்கிறது.இருப்பிடம் சென்னை பல்லாவரத்திலிருந்து 4 கி.மீ துணரத்தில் அமைந்துள்ளது.தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் செல்கின்றன.எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பல்லாவரத்திற்கு மின்சார ரயிலில் சென்று அங்கிருந்து பஸ்சில் திருநீர்மலையை அடையலாம்.அருகில் உள்ள ரயில் நிலையம் பல்லாவரம்.அருகில் உள்ள விமான நிலையம் சென்னை மீனம்பாக்கம்.முக்கிய திருவிழாக்கள் திருவிழா சித்திரையில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் வைகாசி வசந்த உற்சவம் ஆனி கோடை உற்சவம் புரட்டாசி சனி பவித்ர உற்சவம் கொண்டாடப்படுகிறது.

No comments: