Monday, July 7, 2008
திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலி.திருநெல்வேலி ஆங்கிலம் Tirunelveli இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.இந்நகரம் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகருமாகும்.புவியியல்.இவ்வூரின் அமைவிடம் 8.73ர N 77.7ர E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 47 மீட்டர் 154 அடி உயரத்தில் இருக்கின்றது.[தொகு] மக்கள் வகைப்பாடு.இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 411 298 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 49% ஆண்கள் 51% பெண்கள் ஆவார்கள்.திருநெல்வேலி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு 83% பெண்களின் கல்வியறிவு 73% ஆகும்.இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.திருநெல்வேலி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டநூர் ஆவார்கள்.திருநெல்வேலி நெல்லை நகரம் பொருணை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக சிலகாலம் செயல்பட்டது.இங்குள்ள நெல்லையப்பர்.காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.[தொகு] பெயர்க் காரணம்.[தொகு] இரட்டை நகரங்கள்.திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன.பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது.இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது.பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது.இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.[தொகு] தமிழின் தோற்றம்.தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது.இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார்.அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.[தொகு] அல்வா.திருநெல்வேலி அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது.திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment