Monday, July 7, 2008
திருவண்ணாமலை
திருவண்ணாமலை.திருவண்ணாமலை ஆங்கிலம் Tiruvannamalai இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும்.புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.கோவில்நகரம்.சிவனின் பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி தலமாகும்.மற்றபிற தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தையும் காளகஸ்தி காற்றையும் திருவானைக்கோவில் நீரையும் காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும்.இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில் தமிழ் மாதமாம் கார்த்திகை யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும்.இது ஆங்கில மாதம் நவம்பர் November அல்லது டிசம்பர் December மாதம் வரும்.இத்திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும்.இந்த பத்தாம் நாளன்று.காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும்.[1] இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.இத்திருவிழா மட்டுமின்றி.ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள்.கிரிவலம் என அழைக்கப்படுகிறது.இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ அகும்.இத்தூரத்தை மக்கள் காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்.வாழ்கின்றனர்.பகவான் இரமண மகரிஷி அவர்கள் தன் இன்னுயிர் நீங்கும் வரை 1950 திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.மக்கள் வகைப்பாடு.இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 130 301 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள் 49% பெண்கள் ஆவார்கள்.திருவண்ணாமலை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு 81% பெண்களின் கல்வியறிவு 68% ஆகும்.இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.திருவண்ணாமலை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டநூர் ஆவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment