Monday, July 7, 2008

திருப்பாம்புரம்

அருள்மிகு பாம்புரேஸ்வரர் கோயில்.திருப்பாம்புரம் திருவாரூர் மூலவர் சேஷபுரீஸ்வரர் பாம்புரேஸ்வரர்.அம்மன் பிரமராம்பிகை வண்டுசேர் குழலி தல விருட்சம் வன்னி தீர்த்தம் ஆதிசேஷ தீர்த்தம் பதிகம் அப்பர் சம்பந்தர் சுந்தரர் புராணபெயர்.சேஷபுரி ஊர் திருப்பாம்புரம் மாவட்டம் திருவாரூர் தலவரலாறு விநாயகர் கைலாயத்தில் தன் தந்தை சிவபெருமானை வணங்கிய போது அவர் கழுத்தில் இருந்த பாம்பு தன்னையும் விநாயகர் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது.இதனால் கோபம் கொண்ட சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்க சாபமிட்டார்.பின்னர் அஷ்ட மகா நாகங்களும் ராகு கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக மற்றவர்களையும் தண்டிக்கலாகாது என்றும்.தவறு செய்த பாம்பையும் மன்னிக்கும்படியும் சிவனை வேண்டினர்.மகாசிவராத்திரியன்று நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் அனந்தன் வாசுகி தக்ஷகன் கார்கோடகன் சங்கபாலன் குலிகன் பத்மன் மகாபத்மன் ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் வந்து வேண்டி சாபவிமோசனம் பெறலாம் என சிவன் அருளினார்.இது தவிர இன்னொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு.முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என்பதில் போட்டி ஏற்பட்டது.இதனால் வாயுபகவான் தன் வலிமையால் மலைகளை புரட்டி போட ஆதிசேஷன் தன் வலிமையால் அதனை தடுத்தி நிறுத்தியது.இருவரும் சமபலம் கொண்டதால் கோபம் கொண்ட வாயுபகவான் உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயுவை தடுத்து நிறுத்தினார்.இதனால் உயிரினங்கள் சோர்ந்தன.தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கியது.பின்னர் திருப்பாம்புரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து மன்னிப்பு கேட்டது.தல சிறப்பு சிவனின் சாபத்தால் விஷத்தை இழந்த ஆதிசேஷன் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் பெற்றதால்.இங்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும்.ஞாயிறு செவ்வாய் வௌ஢ளி ஆகிய நாட்களில் கோயிலில் பாம்பு நடமாட்டம் இருக்கும் என்றும் கூறுவர்.இவைகள் அந்த நேரத்தில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.இந்த கோயில் திருநாகேஸ்வரம் நாகூர் கீழப்பெரும்பள்ளம் காளஹஸ்தி மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பபெற்ற தலம்.எனவே இத்தலம் சர்வ தோஷ பரிகார தலம் என புராணங்கள் கூறுகின்றன.ஆதிசேஷனுக்கு இங்கு உற்சவர் விக்ரகம் உள்ளது.ராகு கேது சன்னதி.ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால் 18 வருட ராகு தசா நடந்தால் 7 வருட கேது தசா நடந்தால் லக்னத்திற்கு 2ல் ராகுவோ கேதுவோ இருந்து லக்னத்திற்கு 8ல் கேதுவோ.ராகுவோ இருந்தால் ராகு புத்தி.கேது புத்தி நடந்தால் களத்திர தோஷம் புத்திர தோஷம் இருபாலருக்கும் திருமணத்தடை இருந்தால் கனவில் அடிக்கடி பாம்பு வந்தால் தெரிந்தோ.தெரியாமலோ பாம்பைக் கொன்றிருந்தால் கடன் தொல்லைகள் இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தல் அவசியம்.வழிபட்டோ ர் பிரம்மா இந்திரன் பார்வதி அகத்தியர் அக்னி தட்சன் கங்காதேவி சூரியன் சந்திரன் சுனிதன் கோச்செங்கண்ணன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.பூஜை நேரம் காலை 7 மதியம் 12.30 மணி மாலை 4 இரவு 8.30 மணி.இருப்பிடம் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ.மொபைல் 94439 43665 94430 47302. அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறைஅருகிலுள்ள விமான நிலையம் திருச்சி சென்னை.

No comments: