அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில்.திருப்பனந்தாள் மூலவர் அருணஜடேசுவரர்
பெருமை சுயம்பு அம்பாள் பிரகந் நாயகி
விநாயகர் ஆண்டவிநாயகர் தலமரம்
பனைமரம் தீர்த்தம் நாககன்னி பதிகம்
தேவாரம் ஊர் திருபனந்தாள் புராணபெயர்.பனசை மாவட்டம் அருணனடேசுவரரை
வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.கல்யாண வரம் குழந்தை வரம்
வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி.உத்தியோக உயர்வு.நேர்த்தி கடன்.பால் தயிர் இளநீர் எண்ணெய் அபிசேகம்
சுவாமிக்கு செய்யலாம்.மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல்
அம்பாளுக்கு சேலை வழங்கல் கோயிலுக்கு
வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல்
ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து
பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும்
செய்யலாம்.கோயிலின் சிறப்பம்சம் ஜடை நாதர்
இத்தலத்தில் மூலவராக
எழுந்தருளியிருக்கும் அருணஜடேசுவர் தன்
மேனி முழுதும் ஜடைஜடையாக முடி
தொங்குவது போல் இருக்கும்.தலையை குனிந்தால் கட்டியுள்ள தலைமுடி
அவிழ்ந்து தொங்குவது போல இது
இருப்பது குறிப்பிடத்தக்கது.தலபெருமைகள் சுவாமி சுயம்பு
மூர்த்தியாக இங்குள்ளார் என்பது சிறப்பு
அம்பாள் கிழக்கு பார்த்த சந்நிதியாக உள்ளது.அம்பாளுக்கு சுவாமி ஞான உபதேசம்
செய்வதாக இத்தலத்தில் ஐதீகம் இது
பனைமரங்கள் அடர்ந்த தலமாக இருந்ததால்.இத்தலத்தில் பனைமரமே தலமரமாக
உள்ளது இத்தலத்துக்கு பனசை என்று பெயர்
வழங்கி வந்திருக்கிறது.காலப்போக்கில் பனந்தாள் என்று
அழைக்கப்பட்டு பின்பு திருப்பனந்தாள் என்று
ஆனது.350 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட
கோயில் என்று தெரிகிறது.தருமபுரம் ஆதீனத்தின் மேற்பார்வையில்
நடந்து வரும் கோயில் பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம்
கும்பகோணம் 18 கி.மீ.தஞ்சை 58 கி.மீ.
தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள்
கும்பகோணம் நகரில் தங்கி கோயிலுக்கு
வந்து தரிசனம் செய்யலாம்.கும்பகோணம் நகரில் நிறைய தனியார்
லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.150 முதல் ரூ.600 வரை.தவிர மாவட்ட தலைநகரான தஞ்சாவூரில்
தனியார் விடுதிகள் விபரம்.ஹோட்டல் தமிழ்நாடு போன் 21421 21024
21325ஹோட்டல் கணேஷ் போன்
22789ஹோட்டல் சங்கம் போன்
24895ஹோட்டல் பரிசுத்தம் போன்
212466ஹோட்டல் ஓரியன்டல் டவர்ஸ்
போன் 31467 கட்டணம் ரூ.200 முதல் 2000
வரை போக்குவரத்து வசதி சென்னை
கும்பகோணம் சாலையில் திருப்பனந்தாள்
உள்ளதால் திருப்பனந்தாளுக்கு பேருந்து
வசதி நிறைய உள்ளது.கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி
உண்டு.அருகிலுள்ள ரயில் நிலையம் கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் சித்திரை சித்ர
நட்சத்திரத்தில் பிரம்மோற்சவம் 10 நாட்கள்
திருவிழா திருக்கல்யாண உற்வசம் மிகவும்
சிறப்புற நடைபெறும்.இதில் விசேசம் என்னவெனில் சுவாமி
அச்சுத் தேர் என்றழைக்கப்படும் பெரிய
தேரில் வீதியுலா வருவார்.கார்த்திகை சோமவாரங்கள் இத்தலத்தில்
மிகவும் விசேசம்.1008 சங்காபிசேகம் நடைபெறும்.மார்கழி ஆருத்ரா தரிசனம் நடராஜர்
புறப்பாடு அன்றும் கோயிலில் விசேசமாக
இருக்கும்.மாதாந்திர பிரதோச நாட்களின் போது
பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில்
இருக்கும்.வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி
பொங்கல் தமிழ் ஆங்கில புத்தாண்டு
தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு
அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.தல வரலாறு தடாகை என்ற பெண்
இத்தலத்து சிவனை வழிபட்டாள்.சுவாமிக்கு பூஜை மலர்களால் பூஜை
செய்து கொண்டிருந்தாள்.சிவபெருமான் இவள் நிஜமாகவே பக்தியோடு
பூஜிக்கிறாளா என சோதிக்க விரும்பினாள்.சுவாமி கழுத்தில் மாலை போட
எத்தனிக்கும்போது சேலை நழுவுகிறது.மாலையை கீழே வைத்தால்
அபசகுணமாகிவிடும்.அதனால் ஒருகையில் மாலையை
பிடித்தபடியும் மற்றொரு கையில்
சேலையை பிடித்தபடியும் நிற்கிறாள்.உடனே சுவாமி தலை வணங்கி மாலையை
ஏற்றுக்கொண்டார்.இதனால் சுவாமி தலை சாய்ந்தபடியே
அருள்பாலித்து வந்திருக்கிறார்.
No comments:
Post a Comment