Monday, July 7, 2008

திருப்பறியல்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில்.திருப்பறியல் மூலவர் தட்சபுரீசுவரர் அம்மன் இளம்கொம்பனையாள்.பாலாம்பிகா சுத்தன்னம் புராணப்பெயர் திருப்பறியலுணர் ஊர் கீழப்பரசலுணர்.தலபெருமைகள் சிவபெருமானின் அட்ட வீரட்டத்தலங்களில் இத்தலம் நான்காவது தலம் ஆகும்.அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது.சூரியனுக்கு தனி சன்னதி இங்கு உண்டு.எனவே நவகிரகத்திற்கென்று கோயில் இல்லை.தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தையும் தட்சனையும் அழித்த தலம் ஆகும்.இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது.இங்குள்ள தட்சபுரீசுவரரின் காலடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கும் காட்சி மிக அற்புதக்காட்சியாகும்.நேர்த்தி கடன் தோஷ நிவர்த்திக்காக சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகமும் ஆராதனையும் செய்யப்படுகிறது.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து கிழக்கு நோக்கி 7 கி.மீ துணரத்தில் திருப்பறியலுணர் அமைந்துள்ளது.தங்கும் வசதி மயிலாடுதுறையில் உள்ளது.போக்குவரத்து வசதி மயிலாடுதுறையிலிருந்து செம்பொனார் கோவில் வந்து அங்கிருந்து திருப்பறியலுணருக்கு மினி பஸ் வசதி உள்ளது.அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை.அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி சென்னை.முக்கிய திருவிழாக்கள் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் சிவபெருமான் வீதி உலா வருகிறார்.திறக்கும் நேரம் காலை 6 முதல் 12 மணிவரைமாலை 5 முதல் 7 மணி வரை தல வரலாறு தட்சன் மிகச்சிறந்த சிவ பக்தன் என்பதால் அவனுக்கு வரம் அளிக்கிறார் சிவன்.ஆனால் வரம் பெற்ற கர்வத்தால் சிவனையே மதிக்காமல் யாகம் செய்கிறான்.இதனால் கோபம் அடைந்த சிவன் அவனிடமிருந்து வரத்தை பறித்து விடுகிறார்.இதனாலேயே இத்தலம் திருப்பறியலுணர் ஆனது.சிவனின் மனைவியான தாட்சாயினியின் தந்தை தட்சன்.இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார்.

No comments: