Monday, July 7, 2008

திருவலம்புரம்

அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில்.மேலப்பெரும்பள்ளம் திருவலம்புரம்.மூலவர் வலம்புர நாதர் திருமேனி சுயம்பு உற்சவர் சந்திரசேகரர் அம்மன் வடுவகிர்கன்னி உற்சவர் பத்மநாயகி தல விநாயகர் வல்லப விநாயகர் தல விருட்சம் ஆண்பனை தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் லட்சுமி தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம் பதிகம் பாடியோர் அப்பர் சம்பந்தர் சுந்தரர் ஆகமம் சிவாகம விதிப்படி பூஜை பழமை 1600 ஆண்டு புராண பெயர்.திருவலம்புரம் ஊர் மேலப்பெரும்பள்ளம் மாவட்டம்.சம்பந்தர் தலவரலாறு காசி மன்னன் ஒருவன் தன் மனைவி கற்புடையவளா என்பதை சோதிக்க நினைத்தான்.ஒரு முறை மன்னனும் அமைச்சர்களும் காட்டிற்கு வேட்டையாட சென்றனர்.அப்போது மன்னன் தன் அமைச்சரிடம் மன்னர் காட்டிற்கு வேட்டையாட சென்ற போது புலி அடித்து இறந்து விட்டார் என்ற பொய்யை அரசியிடம் கூறும்படி உத்தரவிட்டார்.அமைச்சரும் அதன் படி கூற.அரசி இச்செய்தி கேட்டவுடனேயே உயிரை விட்டாள்.இந்த பொய் செய்தி கூறியதால் மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.இந்த தோஷம் நீங்க மன்னன் சான்றோர்களிடம் விவாதித்தான்.அதற்கு அவர்கள் மன்னா திருவலம்புர திருத்தலத்தில் தினமும் 1000 அந்தணர்களுக்கு அன்னதானம் வழங்கினால் தோஷம் விலகும்.மன்னனும் அதன்படி செய்து வந்தான்.ஒரு முறை அன்னதானம் நடந்து கொண்டிருந்த போது அசரீரி தோன்றி அன்னதானம் நடக்கும் இக்கோயிலில் நீண்ட காலமாக ஒலிக்காத மணி தானே ஒலிக்கும்.என கூறியது.அன்னதானம் தொடர்ந்து நடந்து வந்தது.பட்டினத்தார் ஒரு முறை இக்கோயிலுக்கு அன்னதானம் நடக்கும் நேரம் வந்தார்.பசியோடு இருந்த அவர் மடப்பள்ளியில் இருந்தவரிடம் தனக்கு உணவு தருமாறு கேட்டார்.அவர் உணவு தர மறுக்கவே மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்து பசியாறியதாகவும் உடனே இதுநாள் வரை அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்ததாக தல வரலாறு கூறுகிறது.அன்னதானமே இன்னும் ஆரம்பிக்க வில்லை.உடனே மன்னனின் தோஷம் விலகியது.இதற்கான திருவிழா இப்போதும் சிறப்பாக நடைபெறுகிறது.தல சிறப்பு தேவாரப்பதிகம் பெற்ற காவிரி தென்கரையில் இது 44வது தலம்.திருமால் சிவனைக்குறித்து தவம் செய்ய போன போது திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டு சென்றார்.தவத்தின் பலனாக சக்ராயுதமும் கதையும் பெற்றார்.அதன் பின் இங்கு வந்து.அம்மனை வணங்கி சங்கும் பத்மமும் பெற்றார் என தல வரலாறு கூறுகிறது.ஹேரண்ட மகரிஷி திருவலஞ்சுழி காவிரியில் இறங்கி வலமாக வந்து இவ்வூரில் கரையேறினார்.அதனால் இத்தலம் திருவலம்புரம் ஆனது.அவரது ஜீவ சமாதி இங்கு தனி கோயிலாக உள்ளது.சம்பந்தருடன் திருநாவுக்கரசர் பல தலங்கள் சென்று வழிபட்ட போது சிவபெருமான் இத்தலத்தில் திருநாவுக்கரசரை அழைத்து காட்சி கொடுத்துள்ளார்.இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது.எனவே லிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம் புனுகுசட்டம் சாத்தப்படுகிறது.அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது.இதனால் இத்தலம் மேலப்பெரும்பள்ளம் ஆனது.புத்தர பாக்கியம் இல்லாதவர்கள் தோல்வியாதி உள்ளவர்கள் ஸ்ரீஹத்தி.பெண்ணால் ஏற்படக்கூடியது தோஷம் உள்ளவர்கள் திருமணத்தடை உள்ளவர்கள் தன் மகனிடம் நான் இறந்த பிறகு எனது அஸ்தி எங்கு மலராக மாறுகிறதோ அங்கு அஸ்தியை கரைத்து விடு என்ற கூறிவிட்டு மறைந்தான்.இறுதியில் இத்தலம் வந்ததும் அஸ்தி மலராக ஆனது.தந்தையின் ஆசைப்படி இத்தலத்தில் அஸ்தியை கரைத்து விட்டான்.எனவே இத்தலத்தை காசியை விட புனிதமானது என புராணங்கள் கூறுகிறது.தட்சனும் அவனது மனைவியும் தங்கள் மகளாக தாட்சாயினி பிறக்க வேண்டும் என இத்தலத்தில் வேண்டியதாக கூறப்படுகிறது.அர்த்தநாரீஸ்வர பிட்சாடனர்.திருவிழா தை பரணியில் பிட்சாடணர் திருவிழா.பங்குனி உத்திரம் கார்த்திகை சோமவாரம் விநாயகர் சதுர்த்தி.ஆடிப்பூரம் தை ஆடி மகாளய அமாவாசை திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.பூஜை நேரம் காலை 6 12 மணி.மாலை 6 8.30 மணிஇருப்பிடம் பூம்புகாரிலிருந்து 5 கி.மீ மயிலாடுதுறை செல்லும் வழியில் சட்ரஷ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து தெற்கே ஒன்றரை கி.மீ. துணரத்தில் மேலப்பெரும்பள்ளம் உள்ளது.அர்ச்சகர் கே. கண்ணப்பன்போன் 04364 200 890 200 685.அருகிலுள்ள ரயில் நிலையம் சீர்காழிஅருகிலுள்ள விமான நிலையம் சென்னை திருச்சி.

No comments: