Sunday, July 6, 2008
வடக்கன்பரவூர்
அருள்மிகு சரஸ்வதி கோயில்.வடக்கன்பரவூர் கேரளா மூலவர் சரஸ்வதி ஊர் வடக்கன்பரவூர் தல வரலாறு பரவூர் தம்பிரான் என்ற மூகாம்பிகை பக்தர் மாதம் ஒருமுறை கொல்லுணர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது வழக்கம்.வயதான காலத்தில் இவரால் கொல்லுணர் செல்ல முடியவில்லை.மிகவும் வருத்தத்துடன் இருந்த அவரது கனவில் மூகாம்பிகை தோன்றி நீ இருக்கும் இடத்தருகே ஒரு கோயில் கட்டு.அங்கு நான் கலைவாணியாக அருள்பாலிக்கிறேன் என்றாள்.நடுவில் சரஸ்வதிக்கு கர்ப்பக்கிரகம் அமைக்கப்பட்டது.கன்னிமூலையில் கணபதி பிரகாரத்தில் சுப்ரமணியர் விஷ்ணு யட்க்ஷி ஆஞ்சநேயர் வீரபத்திரர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.தல சிறப்பு இங்குள்ள கலைவாணிக்கு வீணாவாணி வித்யாதாரிணி என்ற திருநாமங்களும் உண்டு.இதற்கு கட்டணம் உண்டு.அர்ச்சனை முடிந்த பின் கோயிலை மூன்று முறை சுற்ற வேண்டும்.அதன் பின் வௌதபிரகாரத்திலுள்ள மணலில் ஓம் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ என எழுத வேண்டும்.இப்படி செய்தால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.தீராத நோய் உள்ளவர்களும் செயல்களில் தடங்கல் உள்ளவர்களும் கோயிலிலேயே தரப்படும் அர்ச்சனை பொருட்களை வாங்கி பெயர் நட்சத்திரம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.பிரசாத தட்டை கோயில் முன்பு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டு விட வேண்டும்.இப்படி செய்தால் சிறந்த பலன் உண்டு என்பது நம்பிக்கை.மூலிகை கஷாயம் இங்கு தினமும் இரவில் கலைவாணிக்கு மூலிகை கஷாயம் நைவேத்யம் செய்யப்படுகிறது.மறுநாள் காலை இந்த கஷாயத்தை மாணவர்கள் வாங்கி அருந்தினால் ஞாபகசக்தி பெருகும் என்பதும் மந்தபுத்தி விலகி கல்வியறிவு சிறக்கும் என்பதும் ஐதீகம்.வௌதயூர் பக்தர்களுக்கு கஷாயத்தை பாட்டிலில் தருகிறார்கள்.இசையில் தேர்ச்சி பெற விரும்புபவர்களும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.திருவிழா தை மாதம் பிரம்மோற்ஸவம் அனுஷம் நட்சத்திரத்தில் கொடியேற்றி உத்திரட்டாதியில் ஆறாட்டு நடக்கிறது.தேர்வு காலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.திறக்கும் நேரம் காலை 5 11 மணி மாலை 5 இரவு 8 மணி.இருப்பிடம் எர்ணாகுளத்திலிருந்து குருவாயூர் செல்லும் ரோட்டில் 25 கி.மீ.துணரத்தில் வடக்கன்பரவூர் உள்ளது.எர்ணாகுளம் குருவாயூர் செல்லும் பஸ்சில் சென்று பரவூர் வடக்கு ஸ்டாப்பல் இறங்கி கோயிலுக்குச் செல்லலாம்.போன் 0484 552 6710.அருகிலுள்ள ரயில் நிலையம் எர்ணாகுளம்அருகிலுள்ள விமான நிலையம் கொச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment