Sunday, July 6, 2008
உத்தமபாளையம்
அருள்மிகு காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை கோயில்.உத்தமபாளையம் மூலவர் காளாத்தீஸ்வரர் பிற பெயர்.காளத்திநாதர் அம்மன் ஞானாம்பிகை தீர்த்தம் சுரபி ஊர் உத்தமபாளையம் மாவட்டம் பிரார்த்தனை சர்ப்பதோஷ நிவர்த்தி.புத்திரபாக்கியம் திருமணதடைவிலகல் செவ்வாய் தோஷ நிவர்த்தி ஆகியவற்றிற்காக வழிபட்டால் நல்ல பலன் உண்டு நேர்த்தி கடன் ராகு கேது தோஷம் நீக்கும் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தனி கோயில் உண்டு.இதில் ராகு கேதுக்குரிய கோயில் காளகஸ்தி ஆகும்.இதே காளாத்திநாதர் உத்தமபாளையத்திலும் தோன்றியதால் இத்தலமும் ராகு கேது தோஷம் நீக்குவதில் சிறந்த தலமாக விளங்குகிறது.கோயிலின் சிறப்பம்சம் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு சிறப்பு இருக்கும்.ஆனால் நாம் இந்த வாரம் தரிசிக்கும் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை கோயில் மூர்த்தி தலம் தீர்த்தம் என மூன்றிலுமே சிறப்புற்று விளங்குகிறது.தலபெருமைகள் சிவன் அம்மன் முருகன் மூவருமே இயற்கையாக தோன்றியதால் இங்கு மூர்த்தி மிகவும் சிறப்புடையதாகும்.இந்தியாவிலேயே காசியைப் போன்று மூன்று இடங்களில் மட்டும் தான் நதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடுவதும்.அதன் கரையில் கிழக்கு நோக்கி கோயில் அமைந்திருப்பதும் ஆகும்.இந்த காளாத்திநாதரை வியாக்ரபாதர் பாம்பாட்டி சித்தர் பதஞ்சலி முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.அத்துடன் அருகிலுள்ள சுருளிமலைக்கு வந்த சித்தர்கள் அனைவருமே இங்கு வந்து வழிபட்டுள்ளதாக கூறப்படுகிறது.63 நாயன்மார்கள் சப்த கன்னியர்கள் சகஸ்ரலிங்கம் ஜஸரதேவர் நடராஜர் நவகிரகங்கள் பைரவர் என அனைவரையும் ஒரே இடத்தில் காலை 6 11.30 மணிவரையிலும் மாலை 5 8.30 மணி வரையிலும் தரிசிக்கலாம்.பொது தகவல்கள் தேனி மாவட்டத்தில் கம்பம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர் உத்தமபாளையம்.இந்த ஊருக்கு தேனியிலிருந்து பஸ் வசதி நிறையவே உள்ளது.ஊரில் நடுவில் கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் கோயிலுக்கு எளிதாக செல்லலாம்.முக்கிய திருவிழாக்கள் சிவராத்திரி நவராத்திரி ஆடிமாத ஐந்து வௌளி மார்கழிபூஜை திருவாதிரை திருக்கார்த்திகை பிரதோஷம் என சிவன்.தல வரலாறு முன்னொரு காலத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்.எனவே இங்கிருந்த படியே சிவனிடம் இறைவா வயதான என்னால் உன்னை அங்கு வந்து தரிசிக்க இயலவில்லை என்று அழுது புலம்பினார்.அடியவரின் குரலுக்கு செவிசாய்த்த இறைவன் அன்றிரவே பிச்சையின் கனவில் தோன்றி உத்தமபாளையத்தில் ஓடும் சுருளியாற்றங்கரைக்கு மகா சிவராத்திரியன்று வருக. அங்கே உனக்கு காட்சியளிக்கிறேன்.அது காளகஸ்தியில் என்னை வணங்கிய பலன் கிட்டும்.என கூறி மறைந்தார்.இதன் படி சிவனடியாரும் சிவராத்திரியில் ஆற்றங்கரை சென்று தியானிக்க காளத்திநாதர் அவர் முன் காட்சியளித்தார்.சிவன் சிவனடியாருக்கு காட்சியளித்த இடமே இன்றுள்ள உத்தமபாளையம் காளாத்திநாதர் ஞானாம்பாள் திருக்கோயிலாகும்.இப்படி சிவனே காட்சியளித்ததால் இத்தலம் மிகவும் சிறப்புடையதாகும்.இங்குள்ள ஞானம்மன் சுருளியாற்றின் வௌளத்தில் மிதந்து வந்தவர்.இவரை வணங்கினால் ஞானம் பெருகும்.அதே போல் இங்குள்ள ஆறுமுகனும் இப்பகுதியில் பூமியை தோண்டிப்பார்த்த போது வள்ளி தெய்வானை சகிதமாக கிடைத்தவர் தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment