Tuesday, July 8, 2008
ஆம்ஸ்டர்டம்
ஆம்ஸ்டர்டம்.ஆம்ஸ்டர்டம் ஆம்ஸ்டர்டம் நெதர்லாந்து நாட்டின் தலைநகரமாகும்.இந்நகரம் IJ bay ஆம்ஸ்டல் என்ற இரு ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது.12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய மீனவ ஊராக ஆம்ஸ்டர்டம் உருவாக்கப்பட்டது.இன்று இதுவே நெதர்லாந்தின் மிகப்பெரிய நகரமாகவும் பண்பாட்டு மற்றும் பொருளாதார மையமாகவும் விளங்குகிறது.ஆகஸ்ட் 1 2006 நிலவரப்படி ஆம்ஸ்டர்டமில் 741 329 மக்கள் வாழ்கிறார்கள்.ஆம்ஸ்டர்மின் நகர மையம் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர் மையங்களில் ஒன்றாகும்.இந்த நகர மையத்தின் வரலாறு 17ஆம் நூற்றாண்டு முதல் தொடங்குகிறது.Amsterdamஆம்ஸ்டர்டம் நெதர்லாந்தின் தலைநகராக இருந்தபோதிலும் நெதர்லாந்தின் நீதிமன்றம் பாராளுமன்றம் அரசாங்க அமைப்புகள் போன்றவை இங்கு இல்லை.இவை அனைத்தும் டென் ஹாக் நகரில் இருக்கின்றன.தவிர ஆம்ஸ்டர்டம் அது அமைந்திருக்கும் வட ஹாலந்து மாகாணத்தின் தலைநகரமும் அன்று.ஹார்லெம் நகரே வட ஹாலந்து மாகாணத்தின் தலைநகரமாகும்.ஆம்ஸ்டர்டம் அதன் பன்முகத் தன்மை பொறுத்துப் போகும் தன்மை தாராளப் போக்கு ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment