Saturday, July 5, 2008

அம்மன்குடி

துர்கா பரமேஸ்வரி கோயில்.அம்மன்குடி தஞ்சாவூர் மாவட்டம் மூலவர் கைலாசநாதர் அம்பாள் பார்வதிதேவி
புராணபெயர்.தேவி தபோவனம் விநாயகர் தபசு மரகத விநாயகர் தீர்த்தம் பாப விமோசன தீர்த்தம் சிறப்பு
சிவனை தன்னுள் அடக்கிய துர்க்கை ஸ்தலம் ஊர் அம்மன்குடி மாவட்டம் தஞ்சாவூர்
தலபெருமைகள் அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோயிலில்
கைலாச நாதரே மூலவராக இருக்கிறார்.அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள்.மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள்.ஒரு சிவன் கோயிலில் துர்க்கா தேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன்
தனி சிறப்பு.ராஜராஜசோழனின் படைத்தலைவர்களான கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் ஆகியோர் இங்கு
வாழ்ந்துள்ளனர்.கோயில் கி.பி. 944ல் கட்டப்பட்டது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் இது.நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது.செவ்வாய்க் கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு.கைலாச நாதரின் வலது பாகத்தில் துர்க்கை காட்சி தருகிறாள்.எட்டு கைகளுடன் எட்டு வித ஆயுதங்கள் தாங்கி சிம்ம வாகனம் மகிஷன் தலை ஆகியவற்றுடன் சாந்த முகத்துடன் காட்சி தருகிறாள்.தவிர பார்வதிக்கு தனி சன்னதி உள்ளது.எனவே இவரது காலில் தண்டை என்ற அணிகலன் அணியப் பெற்றுள்ளது.இந்த அணிகலனை குழந்தைகளே அணிவார்கள்.இங்குள்ள துர்க்கைக்கு நுணறு கண்கள் இருப்பதாக ஐதீகம்.மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்கு பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது
நம்பிக்கை. இங்கு யோக சரஸ்வதி சிலையும் உள்ளது.சரஸ்வதியின் கையில் வீணை இல்லை.இதற்கு பதிலாக தவத்தில் ஆழ்ந்திருப்பது போல் சரஸ்வதி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.அதிசய விநாயகர் தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது.காலையில் பச்சை மதியம் நீல நிறம் மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும்
தன்மை கொண்டது.வழுவழுப்பான கல்லால் ஆனது.விநாயகரின் வயிற்றில் நாகம் உள்ளது.எனவே நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வழிபடுகின்றனர்.கையில் தவசு மாலை வைத்துள்ளார்.இவருக்கு தபசு மரகத விநாயகர் என்ற பெயர் வழங்கப்படுகிறது.விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத் திறமையுடன்
செய்யப்பட்டுள்ளது.பொது தகவல்கள் இருப்பிடம் கும்பகோணத்திலிருந்து உப்பிலியப்பன் கோயில் வழியாக செல்லும் பஸ்களில் அம்மன் குடியை அடை.பஸ் ரூட் 15ஏ 15பி 23. கும்பகோணம் காரைக்கால் ரோட்டில் உள்ள திருலக்குடியிலிருந்து 5
கி.மீ. துணரம் பய.ஆடுதுறை நன்னிலம் வழியில் 8 கி.மீ. துணரம் சென்றாலும் இத்தலம் வந்துவிடும்.தங்கும் வசதி குடும்பத்துடன் வரும் பக்தர்கள் அருகில் உள்ள தஞ்சாவூர் கும்பகோணம்
லாட்ஜ்களில் தங்கி இங்கு வந்து தரிசிக்கலாம்.கட்டணம் ரூ.300 முதல் 2500 வரை அருகிலுள்ள ரயில் நிலையம் கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி தல வரலாறு மகிஷாசுரனை வதம் செய்த பிறகு
அம்பாளை பாவம் பற்றியது.அவள் தனது பாவத்தை தீர்க்க இடம் தேடி அலைந்தாள்.துக்காட்சி என்ற இடத்திற்கு வந்து தனது ஆட்சியை ஆரம்பித்தாள்.இதன் பிறகு தனது சூலத்தில் படிந்திருந்த ரத்தக் கறையை கழுவுவதற்கு இடம் தேடி.துக்காட்சியின் அருகிலுள்ள ஒரு குளத்தில் தனது சூலத்தை கழுவினாள்.அங்கு அவளுக்கு பாபவிமோசனம் ஏற்பட்டது.யிருக்க துர்க்காதேவி விரும்பினாள்.அங்கேயே குடியிருந்ததால் இவ்வூருக்கு அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது.தலத்தில் சிவலிங்கம் விநாயகர் ஆகியோரை பிரதிஷ்டை செய்து அம்பாள் வழிபட்டாள்.

No comments: