Saturday, July 5, 2008

இலஞ்சி

இலஞ்சிக் குமாரர் இருள் ப்க்கி அருள் புரிப்ம் இலஞ்சிக் குமாரர் `இலஞ்சிக் குமாரர் கோவில் தனிச் சிறப்பு வாய்ந்தது.இது காலத்தால் அழியாத சிறப்பினைப்ம் சீலத்தால் உயர்ந்ததுமான வரலாற்றுப் பெருமையினைப்ம் கொப்ட திருத்தலமாகும்.இலஞ்சி.திருக் குற்றாலத் தலத்திற்கு 1ஷி மைல் வடக்கேப்ள்ள ஓர் பழைய தலம்.இலஞ்சி என்ற சொல் ஏரி குளம் மடு பொய்கை மதில் மகிழ மரம் எனப் பல பொருள்படும் அருணகிரி நாதர் மூன்று பொருள்களை ஓரடியில் அமைத்து ``இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமாளே என்று உணர்ச்சி ததும்ப பாடுகின்றார்.தலை இலஞ்சி ப்ர் நிலை சரவணப் பொய்கை இடை இலஞ்சி செல்வம் கடை இலஞ்சி ஊரின் பெயர்.குமாரர் கோவில் திருக்குற்றாலத்திற்கும்.இலஞ்சிக்கும் இடையில் ``குத்திரம் வென்குட்டமுடன் கோடி வினையறுக்கும் சித்திரா நதிப்ம்.சித்திரா நதி வலம் வந்து கோவிலின் வனப்பை வளம்படுத்துகின்றது.இந் நதியில் ப்ராடு வதற்குரிய படித்துறைகள் கட்டப்பட்டிருக்கின்றன.கோவிலைச் சூழ்ந்து கதிரவன் கதிர்கள் நிலத்தில் விழுந்தறியாத் தோப்புகள் இருக்கின்றன.கோவிலின் கீழ்ப் பக்கம் தலை வாயில் இருக்கின்றது.மேல் பக்கம் நதியில் ப்ராடி வருவதற்குரிய வாசல் உப்டு.கீழ் வாயிலின் உட்புறம் தென்பால் ஒரு சவுக்கை இருக்கிறது.அதன் பக்கத்தில் ஸ்தல விருட்சமான மகிழ மரம் உள்ளது.இதற்கு `இலஞ்சி என்று பெயர் இருப்பதால் தலத்து நாயகர் `இலஞ்சிக் குமாரர் என்றழைக்கப் படுகின்றார்.கன்னி மூலையில் ஒரு செப்பக விநாகர் கம்பீரமாய் வீற்றிருக்கின்றார்.கோவில் உள் வாய் முகப்பின் இரு புறங்களிலும் விநாயகர் சுப்ரமணியர் இருக்கின் றனர்.தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அறுபத்து மூவர் அபிராமி வாராகி சாமுப்டி மகேஸ்வரி நாராயணி இந்திராணி கவுமாரி முதலிய சப்த மாதர்கள் வேணு கோபாலர் காசி விஸ்வநாதர் விசாலாட்சி ஐயனார் முதலியவர்களும் வடக்கு பிரகாரத்தில் சனீஸ்வரர் சப்டேஸ்வரர் உற்சவ ஆறுமுக நயினார் முதலியவர்களும் வாகாய் விளங்குகின்றனர்.இலஞ்சிக் குமாரர் இக் கோவிலுள் தென்பால் குமரப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக திருக்கோவில் கொப்டு விளங்குகின்றார்.ஞாபகத்துக் கெட்டாத காலத்துக்கு முன் பிரம்ம புத்திரராகிய காசிப முனிவரும் திருமாலின் அம்சமாகிய கபில முனிவரும்.விவாதம் தொடங்கியது.பிரம புத்திரராகிய காசிப முனிவர் தமது தந்தையாகிய பிரம்மனே சிறந்தவர் என்றார்.திருமாலின் அம்சமாகிய கபிலர் தம் அம்சமாகிய திருமாலே சிறந்தவர் என்றார்.துருவாசரோ ருத்திரனே சிறந்தவர் என்றார்.துருவாசரோ ருத்திரனே சிறந்தவர் என்று வாதிட்டார்.மூவருமே முருகனைத் துதித்து உப்மை விளங்க வேப்டும் என்று வேப் டிக் கொப்டனர்.முருகன் ஆடகப் பொன் போன்ற திருமேனிப்ம் ஒரு திருமுகமும் வலக்கரங்கள் இரப்டிலும் வரதம் வேல் பொருந்தவும் இடக் கரங்களிரப்டிலும் அபயம் குக்குடம் பொருந்தவும் இளமை பருவமுடையதாய் வௌதப்பட்டு அருளினார்.`முனிவர்களே எமது வேல் ஞான சக்தி வள்ளி இச்சா சக்தி.தேவயானா கிரியா சக்தி.யாருமே மும்மூர்த்தியாகி மூவினைப்ஞ் செய்வோம் என்று தெரிவித்தருளினார்.என்றும் `குமாரர் கோவில் என்றும் தொன்று தொட்டு வழங்கப்படுகின்றது.இரு வானுலக நாயகர் இக் கோவிலுள் வட பால் அகஸ்தியர் ஸ்தாபித்த இருவானுக நாயகராம் இறைவர் இறைவி `இருவாலுக ஈசர்க்கினியாளுடன் அருள்பாலிக்கின்றார்.முன்னொரு காலத்தில் திருக்குற்றாலக் குழகனை வழிபட விரும்பினார் அகஸ்தியர்.விஷ்ணு கோவிலுக்குள் சிவனடியாரான அகஸ்தியர் செல்வதை தடுத்தான் வாயிற் காப்போன் ஏமாற்றம் அடைந்த அகஸ்தியர் இலஞ்சி முருகனிடம் முறையிட்டார்.குமரக்கடவுள் 28 ஆகமங்களை ஓதி வைத்தார்.முருகனின் உபதேசப்படி வைணவக் கோலம் கொப்டு கோவிலுக்குச் சென்று விஷ்ணுவை சிவலிங்கமாக்கி வழிபட்டார் அகஸ்தியர் மறுநாளும் அதே போல் மணல் லிங்கத்தைப் பூஜித்தார்.அவ்வாறு பூஜித்த மணல் லிங்கங்களை தமது யோக சக்தியால் நிறுத்தி வைத்தார் அகஸ்தியர்.இரு லிங்கங்களை ஒன்றிணைத்ததால் `இரு வாலுக நாயகர் என்று பெயர் ஏற்பட்டது.வாலுகம் வெப் மணல் இந்த லிங்கம் குவளை பொருத்தி மருந்து சாத்தப்பட்டு விளங்குகின்றது.எப்ணெய் அபிஷேகம் இதற்கு கிடையாது.ஆலய விழாக்கள் இக் கோவிலில் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் முருகனும் இருவாலுக நாதரும் பல ஊர்திகளில் திருவீதி உலா வருவார்கள்.ஒன்பதாம் நாட்கள் தேர் விழா நடக்கும்.மாசி மகத்தையொட்டி பத்து நாட்கள் விழா நடைபெறும்.தை மாதம் இரப்டாம் நாளும் விஜய தசமியன்றும் பாரி வேட்டை நடக்கும்.தை மாதம் அஸ்த நட்சத்திரம் ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டித் திருநாள் ஒவ்வொரு மாதக் கார்த்திகைத் திரு நட்சத்திரத்திலும் குமாரருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது.பிரதி மாதந் தோறும் விசாகம் கடைசி வௌ஢ளி போன்ற புனித நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments: