Saturday, July 5, 2008

அன்னமலை

அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்.அன்னமலை முருகன் தண்டாயுதபாணி சிறப்பு அலங்காரம் கோயில்.மலைக்கோயில் அழகு இயற்கை சூழல் தலமரம் அரசமரம் தலகுரு கிருஷ்ணாநந்தாஜி மலை அன்னமலை இடம் கீழ்க்குந்தா ஊர் மஞ்சூர் மாவட்டம் பிரார்த்தனை முருகனை மனமுருக வேண்டிக்கொண்டால் கல்யாண பாக்கியம் குழந்தை பாக்கியம் ஆகியவை கைகூடுகின்றன.குழந்தை பாக்கியம் கல்யாண பாக்கியம் உண்டாகும்.நோய் நீக்கம் துன்ப நீக்கம் ஆயுள் பலம் கல்வி அறிவு செல்வம் விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள் நேர்த்தி கடன் அபிஷேகம் கிருத்திகை அன்னதானம் காவடி எடுத்தல் பால்குடம் எடுத்தல் முடி இறக்கி காது குத்தல் படுகர் இன மக்கள் பஜனை நடத்துவார்கள்.சஷ்டி விரதம் இருத்தல் உடற்பிணி தீர ஆண்கள் அங்கபிரதட்சணம் பெண்கள் கும்பிடுதண்டமும் அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர்.தவிர சண்முகார்ச்சனை சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள்.கார்த்திகை விரதம் இருத்தல் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம்.ஒவ்வொரு முதல்நாள் இரவும் இத்தலத்து குருநாதரான ஸ்ரீகிருஷ்ணா நந்தாஜீ யின் கனவில் முருகப்பெருமான் வந்து சொல்கிறார்.அதன்படி அடுத்தநாள் முருகனுக்கு பூசாரிகள் ஆண்டி அலங்காரம் சர்வ அலங்காரம் ராஜ அலங்காரம்.என்று இன்னும் பிற.முருகனின் கட்டளைப்படி அலங்காரம் செய்கின்றனர்.இது இன்றளவும் நடந்து வரும் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் தலபெருமைகள் வருகின்ற எல்லா பக்தர்களுக்கும் கோயில் சார்பாக அன்னம் இட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.கிருஷ்ணா நந்தாஜி என்ற குருநாதரின் மேற்பார்வையில் இக்கோயில் சிறப்புறத் திகழ்கிறது.மிகச்சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் நாலாபுறமும் மலைகள் சூழ கோயில் அமைந்துள்ளது கண் கொள்ளாக் காட்சி.கோயில் இருக்கும் சுற்றுப்புற சூழல் இங்கு வரும் பக்தர்களுக்கு மனதிற்கு அமைதி கிடைக்கிறது.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் மஞ்சூர் 4 கி.மீ.ஊட்டி 35 கி.மீ.கோவை 98 கி.மீ.குன்னூர் 35 கி.மீ.தங்கும் வசதி கோயில் சார்பாக அன்னமலை ஆஸ்ரம விடுதி உள்ளது.இதில் இலவசமாக தங்கிக் கொள்ளலாம்.தவிர மஞ்சூரில் ஒரு சில லாட்ஜ்கள் உள்ளன கட்டணம் ரூ.40 குடும்பத்தோடு வருபவர்கள் ஊட்டி நகரிலேயே தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.கட்டணம் ரூ.300 முதல் ரூ.1000 வரை.போக்குவரத்து வசதி ஊட்டி இந்தியாவின் மிகப் பெரிய சுற்றுலா தலமாதலால் ஊட்டிக்கு முக்கிய நகரங்களிலிருந்து போக்குவரத்து வசதி அதிகம்.குடும்பத்தோடு வருகிறவர்கள் ஊட்டியிலிருந்து மஞ்சூர் வந்து அங்கிருந்து தனியார் வேன் டாக்சிஆகியவற்றின் மூலம் அன்னமலை கோயிலுக்கு செல்லலாம்.அருகிலுள்ள ரயில் நிலையம் குன்னூர் ஊட்டி கோவை.அருகிலுள்ள விமான நிலையம் கோவை முக்கிய திருவிழாக்கள் காவடிப் பெருவிழா சித்திரை மாதம் 2 நாள் திருவிழா 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.ஆகஸ்ட் 15 குரு ஜெயந்தி.மிகப்பெரிய அளவில் அன்னதானம் நடக்கும்.மாதாமாதம் கிருத்திகை அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.தவிர முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் விசேசமாக இருக்கும்.பொங்கல் தீபாவளி வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் இத்தலம் பக்தர்களின் வருகையால் நிரம்பி வழியும்.தல வரலாறு.நாளடைவில் முருகப்பெருமானின் அருள் பரவ இக்கோயில் பிரபலமடையத் தொடங்கியது.

No comments: