Sunday, July 6, 2008
அன்பில்
அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்.திருநாவுக்கரசர் ஊர் அன்பில் மாவட்டம் திருச்சி தல சிறப்பு இக்கோயில் அற நிலையத்துறைக்கு உட்பட்டிருந்தா லும் கூட பாழ்பட்டுப் போனதால் தல வரலாறு தௌதவாக கிடைக்க வில்லை.மூலவர் சத்யவாகீஸ்வரர்.இவர் கிழக்கு நோக்கி சுயம்புவாக எழுந்துள்ளார்.பிரம்மன் வழிபட்ட மூர்த்தம் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாம மும் இவருக்கு உண்டு.அம்பாள் சவுந்தரநாயகி.ஊர் பெயர் அன்பில் கோயிலின் பெயர் ஆலந்துறை.இரண்டும் சேர்த்து அன்பிலாந்துறை ஆனது.பிரம்மா வாகீச முனிவர் பூஜை செய்த தலம்.கோயிலின் உள்ளே சப்தமாதர் பிட்சாடனர் விசுவநாதர் விசாலாட்சி பைரவர் முருகன் சன்னதிகள் உள்ளன.துவாரபாலகர் அருகே பிரம்மா வழிபடும் சிற்பம் உள்ளது.தேவாரப்பதிகம் பெற்ற காவிரிக்கு வடகரையில் இத்தலம் 57வது.காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.விநாயகர் பெருமை இக்கோயிலில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் செவிசாய்த்த விநாயகர் மட்டுமே.சீர்காழியில் பிறந்து உமையம்மை யிடம் பால் குடித்து தேன் சுவை பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் சிவத்தலங்கள் பலவற்றிற்கு வந்தார்.சிவனுக்கு இவரைச் சோதிக்க ஆசை. காவிரியில் தண்ணீர் கரை புரண் டோ டச் செய்தார்.ஞானசம்பந்தரால் கோயில் இருக்கும் இடத்தை அடைய முடியவில்லை.துணரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக் கும் சிவபெருமானைப் பாடினார்.காற்றில் கலந்து வந்த ஒலி ஓர ளவே கோயிலை எட்டியது.அங் கிருந்த சிவமைந்தர் மூத்த விநாயகர் இளைய பிள்ளையார்.எனப்பட்ட தன் சகோதரனுக்கு சமமான ஞானசம் பந்தனின் பாட்டைக் கேட்பதற்காக தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தார்.ஒரு காலை மடக்கி இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து ரசித்த அக்காட்சியை சிற்ப மாக வடித்தார் ஒரு சிற்பி.அச்சிலை இன்றும் எழிலுற இருக்கிறது.கோயி லில் ராஜகோபுரமும் இருக்கிறது.இருப்பிடம் திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள அன்பிலுக்கு அடிக்கடி பஸ் உள்ளது.கீழன் பில் பஸ் ஸடாப்பில் இறங்கி கோயிலை அடையலாம்.அரு கிலேயே லால்குடி சப்தரிஷீஸ் வரர் கோயில்.திருமாந்துறை சிவன் கோயில் ஆகியவை உள்ளன.அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சிஅருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment