Sunday, July 6, 2008
ஐவர்மலை
அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில்.ஐவர் மலை மூலவர் திரவுபதி பிறபெயர் பாஞ்சாலி தலவிநாயகர் உச்சிப்பிள்ளையார் தலவிருட்சம் வன்னி வேம்பு பிரார்த்தனை யோக தியானம் தவம் மற்றும் மன அமைதி பெற விரும்புவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்லலாம் தீர்த்தம் சூரிய புஷ்கரிணி சந்திரபுஷ்கரிணி முருகனுக்கு தனியாக பால்சுனை வாழ்ந்த சித்தர் துவாபரயுகத்தில் போகர் திருவிழா மகா சிவராத்திரி ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை. தலபெருமைகள் பழனி மலை முருகனை போகர் இந்த மலையிலிருந்து தான் உருவாக்கி பிரதிஷ்டை செய்துள்ளார்.எனவே இந்த ஐவர்மலையை பழனிக்கு தாய் வீடு என்கிறார்கள்.ஐவர் மலையில் தாமரை மலர்களுடன் சூரியபுஷ்கரிணியும் அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரிணியும் அமைந்துள்ளன.இதில் சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும் சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படி இந்த தீர்த்தங்கள் அமைந்துள்ளன.ஆடி அமாவாசை தினத்தில் சூரிய சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைகிறது.அந்த சமயத்தில் சூரிய சந்திரனின் கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாக கூறுகிறார்கள்.எனவே ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர்.கூன் பாண்டியன் காலத்தில் விரட்டியடிக்கப்பட்ட சமணர்கள் இங்கு வந்து தங்கி தியானம் செய்து முக்தியடைந்து உள்ளனர்.பழனியைப்போலவே இங்கும் இடும்பனுக்கென தனி சன்னதி உள்ளது.இந்த மலைக்கு வந்து வணங்கினால் பஞ்ச பூத தலங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கிறது என்கிறார்கள்.எப்படி என்றால் யோக நிலையில் துரியா என்பது மனம்.இந்த துரியம் உடலை விட்டு உச்சந்தலை வழியாக வௌதயேறுவதே துரியாதிதம் ஆகும்.இதன் அடிப்படையில் தான் இங்கு உச்சிப்பிள்ளையார் அமைந்துள்ளார்.இப்படி உச்சிப்பிள்ளையார் அமைந்துள்ள இடத்தில் மலையிலேயே நீர் ரியசந்திர புஷ்கரிணி தீர்த்தம் நிலம் மலை மலையே நிலத்தில் தான் அமைந்துள்ளது.நெருப்பு காற்று இங்கு ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம் எப்படிப்பட்ட காற்றுக்கும் ஆடாது அணையாது.ஆகாயம் மலைக்கு மேல் பரந்து விரிந்த ஆகாயம்.இவரது முக்திக்கு பின் சீடர் பத்மநாபா சுவாமிகளும் இங்கே முக்தியடைந்துள்ளார்கள்.இவர்கள் வழியில் வந்த பெரியசாமி என்பவர் இங்கேயே தங்கி பலருக்கு தியானம் யோகா போன்றவற்றை கற்றுத்தந்து பின் இங்கேயே முக்தியடைந்துள்ளார்.இதில் பெரியசாமி இங்கு சிலையும் அவரது சமாதி மேல் கோயிலும் அமைந்துள்ளது.இவர்களின் சீடர் தான் பழனி சாமி சுவாமிகள்.இவரும் இவரது சீடர் தாண்டேஸ்வரன் என்பவரும்தான் இப்போது இம்மலையில் யோகா தியானம் ஆகியவற்றை சொல்லி தருகிறார்கள்.பொது தகவல்கள் எப்படி செல்வது பழனியிலிருந்து மேற்கு நோக்கி 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஐவர்மலை.கோயில் சம்பந்தமாக தொடர்பு கொள்ள தொலைபேசி எண் 04545 260417.தல வரலாறு பஞ்சபாண்டவர்கள் தங்களின் வன வாசத்தின் போது பாஞ்சாலியுடன் இந்த ஐவர் மலையிலும் வசித்ததாக கூறுகிறார்கள்.இதனால் தான் இந்த மலை ஐவர் மலை எனஅழைக்கப்படுகிறது.அதாவது போகருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.இந்த தோஷம் போக போகர் வேள்வி ஒன்று நடத்துகிறார்.போகரும் இந்த பொறுப்பை தனது சீடரான புலிப்பாணியிடம் ஒப்படைத்தார்.இந்த போகர் புராண காலத்தில் நந்தியாக இருந்தவர்.இதற்கான ஆதாரம் போகர் ஏழாயிரம் போகர் எழுநுணறு.ஆகிய நுணல்களில் உள்ளதாக இங்குள்ள தாண்டேஸ்வரன் என்பவர் தெரிவித்தார்.அதே போல் இம்மலையிலுள்ளகுழந்தை வேலப்பர் கோயிலுக்கும் தனி வரலாறு உண்டு.இதனால் இவருக்கிருந்த குஷ்ட நோய் போய்விட்டது.அமாவாசை கார்த்திகை பவுர்ணமி நாட்களில் இந்த குழந்தை வேலப்பரை வழிபட்டால் நோய் விலகும் என்பது நம்பிக்கை..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment