Sunday, July 6, 2008
சிங்க பெருமாள் கோயில்
அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில்.காஞ்சிபுரம் மூலவர் முகுந்த நாயகன் அழகிய சிங்கர் வேறுபெயர்.அழகிய சிங்கப் பெருமாள் தாயார்.வேளுக்கை வல்லி விமானம் கனக விமானம் தீர்த்தம் கனக சரஸ் ஹேமசரஸ் தரிசித்தவர் பிருகு முனிவர் மங்களாசாசனம் பேயாழ்வார் திருமங்கையாழ்வார்.புராணப்பெயர்.திருவேளுக்கை ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தல வரலாறு திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுகிற அவதாரம் நரசிம்ம அவதாரம்.பெருமாளின் காக்கும் குணம் உடனே வௌதப்பட்ட அவதாரம்.பக்தனின் வார்த்தையை பகவான் உடனே காப்பாற்றிய அவதாரம்.வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள்.இரணியனை வதம் செய்த பின் பகவான் நரசிம்மர் அமைதியை விரும்பினார்.அவர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி.காலப்போக்கில் வேளுக்கை என்றாகி விட்டது.ஒருமுறை பிரம்மா யாகம் செய்த போது யாகத்தை அழிக்க அரக்கர்கள் வந்தனர்.பிரம்மா பெருமாளிடம் இந்த யாகம் சிறப்பாக நடக்க அருள்புரியுமாறு வேண்டினார்.பிரம்மாவின் வேண்டுதலை ஏற்றார் பெருமாள்.அவர்கள் காஞ்சியில் இந்த இடத்தில் காணாமல் போய்விட்டார்கள்.அங்கேயே மேற்கு நோக்கி அமர்ந்து யோக நரசிம்மராகி விட்டார்.இவருக்கு ஆள் அரி முகுந்த நாயகன் என்ற திருநாமங்களும் உண்டு.தல சிறப்பு பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று.பேயாழ்வார் இத்தலத்தினை உப்பலியப்பன் கோயில்.கும்பகோணம் திருப்பதி போன்ற தலங்களுக்கு இணையாகப் பாடியுள்ளார்.இதிலிருந்து இத்தலத்தின் சிறப்பை அறியலாம்.ஆழ்வார்களைத் தவிர சுவாமி தேசிகனும் இப்பெருமாளை காமாஸீகாஷ்டகம் என்ற ஸ்லோகத்தால் போற்றியுள்ளார்.இதை தினமும் பாராயணம் செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும்.இதனை காமாஷிகா நரசிம்ம சன்னதி என்றும் அழைப்பார்கள்.கோயில் சுற்றுப்பிரகாரத்தில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.திறக்கும் நேரம் காலை 7 11 மணி மாலை 5 இரவு 7.30 மணி.இருப்பிடம் காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து கிழக்கே ஒரு கி.மீ. துணரத்தில் உள்ளது.போன் 044 6727 1692அருகிலுள்ள ரயில் நிலையம் காஞ்சிபுரம்.அருகிலுள்ள விமான நிலையம் சென்னை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment